Skip to main content

ரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா? -கராத்தே தியாகராஜன் அதிரடி

Published on 19/11/2019 | Edited on 20/11/2019

 


நடிகர் கமலஹாசனுக்கு நடந்த கலைவிழாவில் கலந்துகொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ’’அரசியலில் அதிசயமும் அற்புதமும் நேற்றும் நடந்தது ; இன்றும் நடக்கிறது ; நாளையும் நடக்கும் ‘’ என சொல்லி, உதாரணத்திற்காக, ’’முதல்வராவோம் என எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ‘’ என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டினார். ரஜினியின் அந்த பேச்சு, அரங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தேசிய அளவில் பேசு பொருளாகவும் உருவெடுத்தது.
 

ரஜினியின் அந்தப் பேச்சில் அரசியல் நெடி அதிகமாக இருக்கும் நிலையில் அவரது பேச்சின் பொருள் குறித்த விவாதங்கள் இன்னமும் நின்றபாடில்லை. இந்த நிலையில், ரஜினியின் மனசாட்சியாக அண்மைக் காலங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் பொறுப்பு மேயருமான கராத்தே தியாகராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 

rajini - Karate R. Thiagarajan


 

ரஜினியின் நாளைய அதிசயம் என்பதன் பொருள் என்ன?
 

தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பப் போகும் தலைவர் ரஜினிதான். நேரடி அரசியலில் அவர் இறங்குவது உறுதி. அடுத்த வருடத்தில் கட்சி துவக்குவார். கட்சி துவங்கியதும் அவரது அரசியல் இன்னும் அதிரடியாக இருக்கும். அந்த வகையில், அண்ணன் ரஜினி கூறிய நாளைய அதிசயம் என்பதை ஆராயும்போது, ’ தமிழகத்தின் நாளைய முதல்வர் அவர்தான் ’ என்பதாக நாங்கள் அர்த்தம் எடுத்துக்கொள்கிறோம். யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் முதல்வராக எடப்பாடி வந்ததை தமிழகமே அதிசயமாகப் பார்த்தது இல்லையா? அதுபோல, தமிழக முதல்வராக அண்ணன் ரஜினி பதவி ஏற்கும் அற்புதமும் நடக்கும்.


 
முதல்வர் எடப்பாடியை பற்றி ரஜினி கூறிய வார்த்தைகளுக்கு நமது அம்மா பத்திரிகை ரஜினியை கடுமையாக விமர்சித்திருக்கிறதே? 
 

 

’கண்டக்டராக வாழ்க்கையை துவக்கிய ரஜினி, சூப்பர் ஸ்டாராவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ’ என நமது அம்மா பத்திரிகை எழுதியிருக்கிறது. முதல்வர் எடப்பாடியை குறித்து அண்ணன் ரஜினி கூறியதன் பொருளை தவறாக புரிந்துகொண்டார்களோ என நான் நினைக்கிறேன். கண்டக்டர் வாழ்க்கையை எப்போதும் அண்ணன் ரஜினி மறக்கவில்லை ; மறக்கவும் மாட்டார். அந்த வாழ்க்கையை அவர் உயர்வாக நினைத்து மகிழ்பவர். அதனை பல சந்தர்பங்களில் நினைவு கூர்ந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில், ’ கண்டக்டராக நான் இருந்த போது எனக்கு 350 ரூபாய் சம்பளம். திடீரென சினிமா வாய்ப்பு வந்து நடித்தபோது 3 லட்சம், 4 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்தது. அப்போது அடேங்கப்பா என ஆச்சரியப்பட்டேன். கனவில் கூட இவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு நினைக்கவில்லை ‘ என ரஜினி சொல்லியிருக்கிறார்.        அதனால், கனவில் கூட என்பதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. தவறான கண்ணோட்டோத்தில் அண்ணன் ரஜினி பயன்படுத்தவில்லை. உழைப்பு என்கிற அர்த்தத்தில்தான் கனவில் என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் அண்ணன் ரஜினி. அரசியலாகட்டும் தனி மனித வாழ்க்கையாகட்டும்  ஒவ்வொரு மனிதரும் கடுமையாக உழைத்தால் நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு உயர்ந்த நிலையை அடைய முடியும். அது கனவில் கூட காண முடியாத உயர்ந்த நிலையாகக் கூட இருக்கும் என்கிற சிந்தனையில்தான் முதல்வர் எடப்பாடியை உதாரணமாக காட்டினார். அரசியலில் எடப்பாடி உழைத்த உழைப்புக்கு உயரிய இடம் கிடைத்திருக்கிறது என்பதே அண்ணன் ரஜினி கூற வந்த பொருள். இதனை அதிமுகவினர் புரிந்துகொள்ளவேண்டும் ; புரிந்துகொள்வார்கள். 
 

தமிழக சட்டமன்ற தேர்தலை அதிமுக, பாஜக கட்சிகளோடு  ரஜினியும் இணைந்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க பாஜக தேசிய தலைமை திட்டமிடுவதாக தகவல்கள் பரவுகிறதே? 
 

தனிக்கட்சி அடையாளத்தோடுதான் அண்ணன் ரஜினி தமிழக அரசியல் களத்தில் நுழைவார். இது, 200 சதவீதம் எதார்த்தமான உண்மை. ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பார்கள் என்பதெல்லாம் ஊடகங்களின் யூகங்கள். அதனால்,ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பது என்பதை அன்றைய சூழல்கள்தான் தீர்மானிக்கும். 


 

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக தாக்கி வருகிறீர்கள். அதேபோல, கமல் விழாவில் பேசிய ரஜினியும், ஸ்டாலின் பெயரை சொல்லாமல் அவரை தாக்கியிருக்கிறார். இதனைப் பொறுத்திப் பார்க்கும்போது, ரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறீர்களா?  
 

கமலுக்கு நடத்திய விழாவில், ’எடப்பாடி ஆட்சி ஒரு மாசம் கூடா தாங்காது ; மூணு மாசத்துல கவிழ்ந்திடும் ; நாலு மாசத்தில் கவிழ்ந்திடும் என்றெல்லாம் சொன்னார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று விவரித்தார் அண்ணன் ரஜினி. கவிழ்ந்திடும்ங்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியது அண்ணன் ஸ்டாலின். அதனால், ஸ்டாலினை ரஜினி தாக்கியதாக நினைக்கிறீர்கள். தமிழக அரசியலில் சமீபகாலமாக அண்ணன் ஸ்டாலின் பேசியது  எதுவுமே நடக்கவில்லை. அதனால் ஸ்டாலின் கூறிய வார்த்தைகளை தனது பேச்சில் பொறுத்தமான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் அண்ணன் ரஜினி. அதேபோல, அரசியலில் நடக்கும் சில சம்பவங்களில் எனக்கு தெரிந்த பல உண்மைகள் அண்ணன் ஸ்டாலினின் அரசியலோடு சம்மந்தப்படுவதால் அதனை எனது பேச்சில் பொறுத்தமான இடத்தில் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான். மற்றபடி ஸ்டாலின் குறித்து நான் முன்வைக்கும் விமர்சனங்களும் கருத்துக்களும் என்னுடையது மட்டுமே. இதனை அண்ணன் ரஜினியின் வாய்ஸோடு பொறுத்திப்பார்ப்பது தவறானது. 


 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.