Skip to main content

“ஸ்கூல் யூனிபார்மோட கூட்டிட்டு போவாங்க...” - சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அதிமுக கவுன்சிலர்!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

Pramakudi child issue five arrested include admk member

 

"சின்னப்புள்ளை வேணும்னு கேட்டு அடம் பிடிச்சு அனுபவிச்சவன் பணம் கொடுக்காமல் எப்படி ஏமாத்தலாம்? இதெல்லாம் அந்த பெரிய மனுசனுக்கு அழகா?' என தன்னுடைய ஆதங்கத்தை பாலியல் புரோக்கரான பெண்மணி ஒருவர், இன்னொருவரிடம் கொட்டித் தீர்த்திருக்கின்றார். இது ஆடியோவாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸாருக்கு செல்ல, ஆடியோவின் நூல்பிடித்து பரமக்குடியில் உள்ள வி.ஐ.பி.க்களை அதிரடியாக கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பியுள்ளது காவல்துறை.

 

பரமக்குடி நகராட்சியின் 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வைகைநகர் சிகாமணி, மறத்தமிழர் சேனை எனும் அமைப்பின் மாநிலத் தலைவரான புதுமலர் பிரபாகரன், களஞ்சியம் ரெடிமேட்ஸ் ராஜாமுகமது ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கட்டாயப்படுத்தி, சிறுமியுடன் பலமுறை பாலியல் வல்லுறவு கொண்டதாகவும் அதற்கு உதவியாக புரோக்கராகச் செயல்பட்ட புதுநகர் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி ஆகிய இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து நபர்களும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தாரால் குற்ற எண்: 05/23, 363, 366 (A), 376 (3) IPC and 5(1), r/w 6,16 r/w 17 of Pocso act-ன் கீழ் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

 

th

 

சிறுமி விவகாரத்தில் போலீஸாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவிக்க, "சிக்கியது இவர்கள் மட்டுமே! சிக்காத பல வி.வி.ஐ.பி.க்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்களையும் கைதுசெய்து இது போல் பாதிக்கப்பட்ட பல சிறுமிகளைக் காப்பாற்ற போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என கோரிக்கை வைத்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள் சிலர்.


வெளிநாட்டிற்கு பெண்கள் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள் என சகஜமாக ஆரம்பிக்கும் அந்த ஆடியோவில், “ஏம்பா! இந்த புதுமலர் பிரபாகரன் இருக்கான்லே! சின்ன புள்ளைதான் வேணும்னு அடம்பிடிச்சு அன்னைக்கு அந்த புள்ளையை கூட்டிட்டு பார்த்திபனூரிலிருந்து மானாமதுரை போகும் பாதையில் இருக்கின்ற அந்த மஹாலுக்கு கூட்டிட்டுப் போனான். வேலையை முடிச்சதும் பணத்தைத் தரல! இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? ஒரு பெரிய மனுசனுக்கு இதெல்லாம் அழகா?” என தற்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கயல்விழி இன்னொருவரிடம் பேசிய ஆடியோ தான் எங்களுக்குத் துருப்புச் சீட்டாக மாறியது. அதனைக் கொண்டு சி.டி.ஆர். போட்டுப்பார்க்கையில் ஊரிலுள்ள அத்தனை வி.ஐ.பி.க்களும் கயல்விழியோடு தொடர்பிலிருப்பது தெரியவந்தது.


கயல்விழியை போலீஸ் காவலில் விசாரிக்கையில் அனைத்தையும் ஒப்புக் கொண்டார். அவருடைய இலக்கு வறுமையில் வாடும் நிறமான 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே! இதற்காக தன்னுடைய கூட்டாளியான அன்னலட்சுமியை துணைக்குக் கொண்டு அவருடைய சமூகத்து ஆட்களிடம் நெருக்கமாகப் பழகி அங்குள்ள சிறுமிகளை அவ்வப்போது திருவிழா, பொருட்காட்சி, கோவில், சினிமா என உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

 

Pramakudi child issue five arrested include admk member

 

சிறுமிகளுடன் திரியும் கயல்விழியை அணுகும் பெரிய மனிதர்கள் ரேட் பேசி விடுவார்கள். வாடிக்கையாளர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு பத்து ஆயிரம் என கணக்கிட்டு வாங்கும் கயல்விழி, சிறுமிகளுடன் நைச்சியமாக பேசுவார். இதில் கிடைக்கும் பணம் தன்னுடைய குடும்ப வறுமையை போக்கும் என்கின்ற நம்பிக்கையிலும், ஏற்கனவே நம்மை அழைத்துக் கொண்டு நிறைய செலவு செய்திருக்கும் கயல்விழிக்கு பிரதி உபகாரமாகவும், தவறு எனத் தெரியாமலும் சிறுமிகள் சம்மதித்த நிலையில், அந்த பெரிய மனிதர்களுக்கு சிறுமிகளை சப்ளை செய்வார் கயல்விழி. இப்படித்தான் இதே ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி இந்த தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றாள் என்றார் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

 

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியோ தான் படித்துக் கொண்டிருக்கும் அந்த பள்ளிக்கு கடந்த 2022, டிசம்பர் 26 தொடங்கி 2023, பிப்ரவரி 21 வரை மூன்று மாதங்களாகச் செல்லவில்லை என்பது போலீஸாரின் விசாரணையில் தெளிவானது. "கஷ்டப்படுற குடும்பம்! எனக்கு அன்னலட்சுமி என்ற உமா அக்கா சொந்தக்காரங்க. புது நகரில் இருக்கின்ற ஏந சிட்டி லேண்ட் புரமோட்டர்ஸ் வேலை பார்த்து வந்தாங்க. அவங்க மூலமாகத்தான் அது போல் அங்க ஏற்கனவே வேலை பார்த்துவந்த கயல்விழி அக்காவும் பழக்கமானாங்க. எங்கே வெளியில் போனாலும் என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. செலவும் நல்லா செய்வாங்க. ஒரு நாள் என்னிடம், என்னுடைய சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களை பார்த்துக்கிட்டன்னா கைநிறைய பணம் கிடைக்கும். வீட்டு பிரச்சனையும் தீரும் என ஆசை காட்டி ஸ்கூல் யூனிபார்மோடு பார்த்திபனூர் பக்கமிருக்கின்ற மஹாலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஏற்கனவே அந்த அக்காவோட முதலாளி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி இருந்தாரு. தெரிஞ்ச முகம்தானே என நினைக்கையில் அந்த சம்பவம் நடந்துச்சு.. எவ்வளவோ மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர் நடந்துகொண்டார். அதன்பின் அவரோட ப்ரண்டான களஞ்சியம் ரெடிமேட் ராஜாமுகமது என தொடர்ச்சியாக வந்தாங்க. நாளடைவில் நான் வேண்டாமென்றாலும் இரு அக்காக்களும் சேர்ந்து வற்புறுத்தி என்னைய அந்த மஹாலுக்கு கூட்டிட்டுப் போவாங்க. போகலைன்னா அடிதான். வலி பொறுக்கமுடியாமல், அரை மயக்கத்திலே எல்லாம் நடக்கும். அடச்சீய் இந்த மனுசனா..? என கேட்குமளவிற்கு எனக்கு தினசரி சித்ரவதைகள். டெய்லி ஸ்கூலுக்குப் போறது மாதிரி யூனிபார்ம், ஸ்கூல் பையுடன் ஸ்கூலுக்குக் கிளம்புவேன். இடையில் என்னை மறித்து கூட்டிட்டுப் போவாங்க இருவரும். இதில் புதுமலர் பிரபாகரன் போலீஸில் சொல்லிவிடுவேன் என அடிக்கடி வந்து என்னை சித்ரவதை செய்து சென்று விடுவார். "நீ பெரிய ஆளாக இருக்கலாம்? அதற்காக ஓசியில் அனுப்ப முடியுமா?' கயல்விழி அக்காவிற்கும் புதுமலர் பிரபாகரனுக்கும் சண்டையே வந்திருக்கின்றது. என்னை சித்ரவதை செய்து பாலியல் வல்லுறவு செய்ததில் கரைவேஷ்டிகளுடன் போலீஸ்காரர்களும் அடக்கம்'' என்றிருக்கின்றது பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம்.

 

பரமக்குடியின் அ.தி.மு.க. அவைத் தலைவரும், 3-வது வார்டு கவுன்சிலருமான சிகாமணி, சிறுமி பாலியல் வல்லுறவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறித்து மாநில அ.தி.மு.க. தலைமைக்கு தகவல் கூறியுள்ளனர் உள்ளூர் அ.தி.மு.க.வினர். ஆனால் கட்சி இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தலைமையிடம் விளக்கம் கேட்க, எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை மாவட்டத் தலைமை. "எதற்காக சிகாமணியைக் காப்பாற்ற வேண்டும்? இதில் இவர்களும் இருக்கலாமோ?' என சொந்தக் கட்சியினரே கிசுகிசுத்து வருகின்றனர்.

 

இதேவேளையில் சிறுமி பாலியல் வழக்கு மட்டுமில்லாது தன்னுடைய சமூக அமைப்பினைக் காட்டி செங்கல் சூளையினரை மிரட்டி மாமூல் வசூலிப்பில் ஈடுபட்டதும், பரமக்குடி பேராசிரியர் ஒருவரை மிரட்டி ரூ. 2 லட்சம் வாங்கியதும் காவல்துறைக்கு புகாரான வேளையில் புதுமலர் பிரபாகரனை குண்டர் தடுப்புக் காவலில் வைக்க காவல்துறையினர் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


சிறுமியை பள்ளிக்குச் செல்ல உத்தரவிட்டும், சிறுமிக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளும் கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட மாவட்ட காவல்துறை சப்தமில்லாமல், வழக்கில் சிக்காத வி.வி.ஐ.பி.க்களைத் தேடத்தொடங்கியுள்ளதால் மாவட்டம் கலகலத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
ADMK Executive Committee, General Committee meeting date announcement

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii) படி, வருகின்ற செவ்வாய் கிழமை (26.12.2023) காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மழைநீர் வடிகால் பணிக்கு செலவிட்ட கணக்கை தர தயாரா? - இபிஎஸ் கேள்வி

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Are you ready to give an account of the amount spent on rainwater drainage work?-EPS question

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

nn

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, பால் ஆகியவற்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனே இயல்பு நிலைக்கு திரும்ப அரிசி, பருப்பு, பால், மளிகை பொருட்களை வழங்க வேண்டும். தேவையான மருத்துவ வசதிகளையும் உடனடியாக தமிழக அரசு கொடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து உடனடியாக பால் கொள்முதல் செய்து தங்கு தடையின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் சிறப்பு முயற்சி எடுத்து உடனடியாக நீரை அகற்ற வேண்டும். வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

 

மழை நீர் வடிகால் பணிகள், தொடர்ந்து  மீட்புப் பணிகள் நடக்கும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும். திமுக அரசு முழு அளவில் மீட்புப் பணியை மேற்கொள்ளாமல், நிவாரண உதவிகளை வழங்காமல் உள்ளது. மழைநீர் வடிகால் பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தர தயாரா? சென்னையில் உள்ள 38,500 பிரதான சாலைகளின் 20,000 சாலைகளின் இப்போது வரை வெள்ளம் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் பணி முடிந்த இடங்களில் கால்வாய்களை சரியான முறையில் இணைக்க அரசு தவறிவிட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.