Skip to main content

 ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது!- அரசுக்கு கிலி கிளப்பிய பொன்.மாணிக்கவேல் 

Published on 30/11/2019 | Edited on 30/11/2019
p

 

சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது.  சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது.  அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு பதிலளித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.  பொன்.மாணிக்கவேலுவின் இந்த கடிதம் அரசுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார்.

 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நியமனத்தின் அடிப்படையிலான பொன். மாணிக்கவேலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.  இதனை சுட்டிக்காட்டி, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை இன்றைக்குள் ஒப்படைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

 

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் இன்றைக்குள் ஒப்படைக்கும் படி அரசாணை வெளியிடப்பட்டது.  இது குறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது.  சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது.  அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று தெரிவித்துள்ளார் பொன்.மாணிக்கவேல்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு முடங்கிவிட்டது!’- பதவி நீட்டிப்பு வழங்கக்கோரி பொன்.மாணிக்கவேல் மனு!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம், நவம்பர் 30- ம் தேதியுடன் முடிவடைவதால், பணி நீட்டிப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல், கடந்த 2018 நவம்பர் 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தலைவராக கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டார். இருப்பினும், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை ஓராண்டு காலத்துக்கு நியமித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து வழக்குகளையும் அவர் விசாரிக்க உத்தரவிட்டது.
 

lord statue case pon manickavel chennai high court hearing


வரும் 30-ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், பணி நீட்டிப்பு வழங்கக் கோரி பொன். மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் தன்னைத் தவிர, மீதமுள்ள 70 அதிகாரிகள், 132 கான்ஸ்டபிள்கள் என,  202 பேரும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தனக்கு எதிராக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவிலுள்ள 66 அதிகாரிகள்தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

lord statue case pon manickavel chennai high court hearing



சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள், காவலர்கள் என, 116 பேரை அவர்கள் சார்ந்த துறைக்கு திருப்பிய அனுப்பி விட்டு, தற்போது 85 அதிகாரிகள், 108 காவலர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, 2018 ஆகஸ்ட் முதல் 2019 மே வரை முடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது விசாரணையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யும், டி.ஜி.பி.யும் தலையிடுவதாகவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும்  குற்றம் சாட்டியுள்ள பொன் மாணிக்கவேல், உயர் நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையை முடிக்க அனுமதிக்கும் வகையில், தனக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Next Story

‘தமிழக காவல்துறையில் ஒருவர் மட்டும்தான் சிறந்தவரா? பொன். மாணிக்கவேல் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை!’- அரசு தரப்பு வாதம்! 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஆஸ்திரேலியாவிலிருந்து யுரேனியம் கொள்முதல் செய்வதற்காக நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. பொன்மாணிக்கவேலின் முயற்சியால் மீட்கப்படவில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

lord statue pon manickavel ips investigation chennai high court



சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
 

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,‘சிலைக்கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், அதுவே இறுதி உத்தரவாகும். அந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது. உச்சநீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது.’ என வாதிட்டார்.மேலும் அவர்,‘உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் பொன்மணிக்கவேல், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த ஓராண்டாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபிக்கு வழங்கவில்லை. வரும் 30-ஆம் தேதியுடன் பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு வரும் 18-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது’ என்றும் தெரிவித்தார்.

lord statue pon manickavel ips investigation chennai high court


இதனைத் தொடர்ந்து அவர், ‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவர் கூடுதல் டிஜிபி என்றும் அதன் கீழ் பணிபுரிபவர்கள் அனைவரும் கூடுதல் டிஜிபிக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், பொன்மாணிக்கவேல் தனது விசாரணை தொடர்பான எந்த அறிக்கையையும் கூடுதல் டிஜிபி-யிடம் தாக்கல் செய்யவில்லை. அவர் அரசுடன் ஒத்துழைக்க மறுக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டதாக பொன்மாணிக்கவேல் கூறிக்கொள்ளும் சிலைகள், அவரது முயற்சியால் மீட்கப்படவில்லை. யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமரின் கோரிக்கை அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் திரும்பப்பெறப்பட்டன. பொன்மாணிக்கவேல் மீட்டதாக தவறான செய்திகளை பரப்புகிறார்.’ என்று தெரிவித்தபோது குறுக்கிட்ட நீதிபதிகள்‘பொன்மாணிக்கவேல் மீட்கவில்லையென்றால் அரசு அதிகாரிகளிடம் சிலைகள் ஒப்படைக்கப்படாமல், பொன்மாணிக்கவேல் வசம் எப்படி ஒப்படைக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினர்.

lord statue pon manickavel ips investigation chennai high court


இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘மாநில அரசின் பிரதிநிதி என்று கூறி பொன்மாணிக்கவேல்  சிலைகளை மீட்டதாகவும், அந்த சிலைகள், அது பற்றிய தகவல்கள் அவருக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை தமிழக காவல்துறையில் சிறந்த அதிகாரிகள் இருக்கும் போது, ஒருவரை மட்டுமே சிறந்தவர் என்று கூற முடியாது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவை மீண்டும் புனரமைத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வைப்பதற்கு சிறப்பு அதிகாரி பொன்மானிக்கவேல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை’என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 


இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20- ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.