Skip to main content

இது நம்ம கோட்டை. நீங்க அடிக்கடி வரவேணாம்!

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் தொடக்கத்தில் வேகம்காட்டிய அ.தி.மு.க. தரப்புக்கு தற்போது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்திருக்கிறது. காரணம் கஸ்பா என்றாலே ரவுடிகள் வாழும் பகுதியாக சித்தரித்து, அச்சுறுத்தும் பகுதியாக வைத்திருப்பதுதான். இது நேரடியாக அ.தி.மு.க. வேட்பாளர் கஸ்பா.மூர்த்திக்கு எதிராக மாறிவிட, “"கஸ்பா. மூர்த்திங்கிற பெயரை டெரர் இமேஜுக்காக நீ வைச்சிக்கிட்ட. அது கவுன்சிலர் எலெக்ஷனுக்கு ஓ.கே. எம்.எல்.ஏ. சீட்டுக்கு சரிவராது'’என கூறியிருக்கிறது தலைமை. தற்போது அ.தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி என்ற பெயருடனே நோட்டீஸ் அடித்து டேமேஜை கண்ட்ரோல் செய்கின்றனர். 

 

kudiyatham



தி.மு.க. வேட்பாளாரான காத்தவராயன் பேரணாம்பட்டைச் சேர்ந்தவர். இதனால், அந்தப் பகுதியின் பிரச்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். "குடியாத்தம் நம்ம கோட்டை. நீங்க அடிக்கடி வரவேணாம்' என சிலர் சொல்லியிருப்பதுதான் இதற்கான காரணம். தி.மு.க.வுக்குள் இருக்கும் கோஷ்டிப் பூசல்களை பொறுப்பாளரான வழக்கறிஞர் பரந்தாமன் கண்டுகொள்ளாததால் குடியாத்தத்தில் வீக்காகவே உள்ளது தி.மு.க.

அ.ம.மு.க. வேட்பாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான ஜெயந்தி பத்மநாபன், அ.தி.மு.க. ஓட்டில் கணிசமாக ஓட்டையைப் போடுகிறார். தி.மு.க.வுக்கு சாதகமான இசுலாமிய வாக்குகளையும் குறிவைத்து பிரச்சாரம் செய்கிறார். பெண் வாக்குகளைக் கவர்வதிலும் அவரது முகமே ரீச்சாகி இருக்கிறது. மும்முனை போட்டி என்றாலும், அ.ம.மு.க.விடமே கடுமையான முயற்சி தென்படுகிறது.

சார்ந்த செய்திகள்