Skip to main content

ஒலிம்பிக் போட்டி! 1500 ஆண்டு கதை...

Published on 06/04/2018 | Edited on 06/04/2018

1896 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி கோடைகால ஒலிம்பிக் போட்டி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 14 நாடுகளைச்சேர்ந்த 241வீரர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளில் கீழ் 43 போட்டிகளும் நடைபெற்றன. ஒலிம்பிக் போட்டியானது கி.மு. 776 ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. கிரேக்கர்களின் கடவுள்களில் ஒருவரான ஜீயஸ் என்பவருக்கு திருவிழா நடக்கும் அதன்  ஒருபகுதியாகதான் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.

 

ஒலிம்பிக் போட்டி  1500 ஆண்டுகளுக்கு பிறகுத்தொடங்கிய கதை

 

இந்தப்போட்டியில் வெற்றியடைபவர்களுக்கு ஆலிவ் இலையால் கிரீடம் சூட்டுவர். கிரேக்கர்களின் ஒலிம்பிக் தோன்றிய ஒலிம்பியா நாட்டில் சூரிய கதிர்கள் மூலம்  ஒலிம்பிக் ஜோதி ஏற்றினர். இன்றுவரை அது ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  கி.பி 393 ஆம் ஆண்டு கிரேக்க அரசர் தியோடிசியல் ஒலிம்பிக் போட்டியை தடை செய்தார். மீண்டும் இந்த ஒலிம்பிக் போட்டியை புதுப்பித்து நடத்த பிரான்ஸ்  நாட்டை சேர்ந்த பேரான் பியரி டி கூபர்டி விரும்பினார். அதன்படி 1500 வருடங்களுக்கு  பின்  ஒலிம்பிக் போட்டியானது நடத்தப்பட்டது. ஒலிம்பிக் போட்டியை மீண்டும் தொடங்க காரணமாக இருந்த பேரான் பியரி டி கூபர்டி அகில உலக ஒலிம்பிக் சங்கத்தின் முதல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டி  1500 ஆண்டுகளுக்கு பிறகுத்தொடங்கிய கதை

                                                                                                                          பேரான் பியரி டி கூபர்டி

 

இதில் நீச்சல், ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம், துப்பாக்கிசுடுதல் மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. இந்த ஒலிம்பிக்கில் 11 நாட்கள் கழித்து  நடந்த  மாரத்தானில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்பிரிட்டன் லூயிஸ் என்பவர் நான்கு கிலோமீட்டர் தூரத்தை ஏழு நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இந்த ஒலிம்பிக் போட்டியை அப்போதைய கிரேக்க மன்னர் ஜார்ஜ் அரசன் தொடங்கிவைத்தார். இந்த ஒலிம்பிக்கின் அறிமுக விழாவில் அறுபதாயிரம் மக்கள் கலந்துகொண்டனர். இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர்கள் பதினோரு போட்டிகளில் கலந்துகொண்டு ஒன்பது போட்டியில் வெற்றிபெற்றனர். 1900 ஆம் ஆண்டு முதல், பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினர். கோல்ப், டென்னிஸ், வில்வித்தை போட்டிகளில் பங்கேற்றனர். காலப்போக்கில் அனைத்துப்போட்டிகளிலும் பெண்கள் பங்கேற்கத்தொடங்கினர். டென்னிஸ்  போட்டியில் "சார்லஸ் கூப்பர்" என்ற பெண் வீராங்கனை தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அடைந்தார்.

 

ஒலிம்பிக் போட்டி  1500 ஆண்டுகளுக்கு பிறகுத்தொடங்கிய கதை

                                                                        "சார்லஸ் கூப்பர்"

1914 ஆம் ஆண்டு பேரான் பியரி டி கூபர்டி ஒலிம்பிக்கின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒலிம்பிக் சங்க மாநாட்டில் வெள்ளைநிறத்தில் ஒலிம்பிக் கொடியை வழங்கினார். இந்த வெள்ளைக்கொடியில் மேல்வரிசையில் நீலம் , கருப்பு, சிகப்பு மற்றும்  கீழ் வரிசையில் மஞ்சள், பச்சை என ஐந்து வண்ணங்களில் வளையங்கள் இருந்தன. இவை  ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என ஐந்து கண்டங்களை குறிக்கும். இதில் உள்ள வண்ணங்கள் இந்த கண்டங்களிலுள்ள பெரும்பாலான நாடுகளின் தேசியக்கொடியில் இந்த நிறங்கள் இடம் பெற்றிருக்கும். இந்தக் கொடியானது 1920 ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் ஆண்ட் வெர்ப் நகரில்தான் முதலில் ஏற்றப்பட்டது. இந்தக்கொடியை 1924 முதல் 1984 வரை பயன்படுத்தினர். அதன்பின் 1988 ஆம் ஆண்டு தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் புதிய கொடி ஏற்றப்பட்டது.1924 ஆம் ஆண்டு பனிக்கால ஒலிம்பிக்கும் ஆரம்பிக்கப்பட்டது. பனிக்கால ஒலிம்பிக் 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போரின் காரணமாக நடத்தப்படவில்லை. 1916, 1940,1944 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக்போட்டியானது நடைபெறவில்லை. 

ஒலிம்பிக் போட்டி  1500 ஆண்டுகளுக்கு பிறகுத்தொடங்கிய கதை

1936 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக்போட்டியில் ஹிட்லர் ஜெர்மன் வீரர்களின் வெற்றியை தனது நாசிக் படையின் வெற்றியாக உலகுக்கு காட்ட விரும்பினார். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த கருப்பின ஓட்டப்பந்தய வீரர் ஜெசி ஓவென்ஸ் நான்கு தங்கப்பதக்கங்களை வென்று  ஹிட்லரை தலைகுனிய செய்தார். ஹிட்லர், இவர் கருப்பின வீரர் என்று இவருக்கு வாழ்த்துகூட சொல்லவில்லை.

இதுவரை ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா நான்கு முறை நடத்தியுள்ளது. மொத்தம் 27 ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளன. இந்த 27 ஒலிம்பிக்கிலும் இங்கிலாந்து, கிரீஸ், பிரான்ஸ், ஸ்விசர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ஐந்து நாடுகளும் பங்கேற்றுள்ளன. இதுவரை அனைத்து ஒலிம்பிக்கிலும் பதக்கம் வாங்கிய நாடென்றால் அது இங்கிலாந்துதான். 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் நடைபெறவுள்ளது. 1964 ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஜப்பானில் ஒலிம்பிக் நடக்கவிருக்கிறது. இந்தியா 1928ஆம் ஆண்டு முதல் பங்கேற்றது, இதுவரை 28 பதக்கங்களை பெற்றுள்ளது. எட்டுமுறை ஹாக்கியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது இந்தியா.