Skip to main content

நான்கு மணிநேர விசாரணை... நடந்தது என்ன? -நக்கீரன் ஆசிரியர்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து நக்கீரனில் செய்தியாகவும், வீடியோவாகவும் கடந்த மார்ச் 9ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து நக்கீரன் ஆசிரியருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விசாரணையில் ஆஜரான நக்கீரன் ஆசிரியர் விசாரணை குறித்து கூறியது, 
 

nakkheeran gopal


நம்மமேல ஒரு வழக்கு போடுறாங்க. ஒரு எஃப்.ஐ.ஆர். வருது. நாம உயர்நீதிமன்றம் போகிறோம். அந்த உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிவதாக நீதியரசர் சொல்கிறார். மறுபடியும் எங்களுக்கு ஒரு சம்மன் வருது, உயர்நீதிமன்றம்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றிவிட்டதே அப்படினு சொல்றோம். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்கள் அதிகாரி சொல்றார், வரிங்களா, இல்லையா அப்படினு கேக்குறாங்க. கோவையில் இருந்து ஒரு சம்மன், இந்த எக்மோர் அட்ரஸ் போட்டு, கோவை எஸ்.பி.யிடம் இருந்து ஒரு சம்மன் வருது. அதற்கு நாங்கள் பதில் அனுப்பினோம். நீதிமன்றம்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றிவிட்டதே என்று. அதற்கு எந்த பதிலும் இல்லை. அதற்கு பிறகு மறுபடியும் ஒரு சம்மன், மீண்டும் கோவைக்கு 30ம் தேதி வரவேண்டும் என்று. அதை நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றோம். அவர்கள் கூறினார்கள், அவுங்க உங்களை சாட்சியாகதான் கூப்பிடுகிறார்கள். கோயம்புத்தூருக்கு ஏன் கூப்பிடுகிறீர்கள் என அவர்களைக்கேட்டுவிட்டு, சென்னையிலேயே அவர்களை விசாரியுங்கள் எனக்கூறினார்கள். அப்படியாக உயர்நீதிமன்றம் சொன்னதன் பெயரில்தான் நான் இங்கு வந்தேன். அதில் முக்கியமாக கூறப்பட்டது, கைது செய்யக்கூடாது என்பதுதான். ஆனால் இங்கு ஒரு டி.எஸ்.பி. இதையெல்லாம் சொல்லவில்லையென்றால் என்ன ஆகும்னு தெரியுமா என்று மிரட்டுகிறார். இதன் நோக்கம் என்ன? எனக்கு இப்போதான் இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பெரிய, பெரிய தலைகளையெல்லாம் காப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.  


உள்ளே விட்னஸ் எக்ஸாமினேஷன் (witness examination) அப்படினு ஒரு ரூம். ஆனால் உள்ளே போனால் இரண்டு செல் இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு அறை. இந்தப் படத்திலெல்லாம் காட்டுவாங்கள்ல, அந்தப்பக்கம் பேசுறத, இந்தப்பக்கத்திலிருந்து பார்க்குறமாதிரி அந்த மாதிரி இருந்தது அறை. 

 

nakkheeran gopal


அந்த வீடியோவிற்கு பிறகு நாங்கள் 5 இதழ்களை முடித்திருப்போம். உங்களுக்கு யார் இதைக்கொடுத்தார்கள், இதை யார் கொடுத்தார், பின்னாடி சொல்றிங்களே அந்த பொண்ணு யாரு. இப்படி ஒவ்வொரு வரிக்கும் கேள்விகள், கிட்டதட்ட 30, 40 கேள்விகள், இதற்கிடையில் இதெல்லாம் சொல்லைனா என்ன ஆகும் தெரியுமா என ஒரு டி.எஸ்.பி. எச்சரிக்கிறார். அதற்கு நான், ஐயா சோர்ஸை நாங்கள் ரிவில் பண்ணமாட்டோம். ஏன்னா, என்னைய நம்பி ஒரு சோர்ஸ், எனக்கு செய்தி தருகிறார். அந்த செய்தியைக் கொடுத்தவர்களை நாங்கள் காட்டிக்கொடுப்பது, இப்போது கற்பை சூரையாடினார்களே, அதைவிட மோசமான செயல், அதனால நான் அதை செய்யமுடியாது. அதனால அதற்காக என்னை என்ன நீங்கள் தண்டிக்க வேண்டுமோ, தண்டித்துக் கொள்ளுங்கள். அப்படினு சொல்லிட்டேன். 
 

இப்போது அங்கையே வைத்து ஒரு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அந்த செய்தியில் ஒன்று சொல்லிருப்போம். ஒரு பாதிக்கப்பட்ட பெண் இரண்டு வருடங்களாக பேசமுடியாம இருக்குனு, அந்த பொண்ணு யாரு? எங்க இருக்கு? அதேபோல ஒரு போலீஸ் சோர்ஸ் நமக்கு சொல்லுது. 1,100 வீடியோக்கள் இருந்ததை அவர்கள் பேரம் பேசி அழிச்சுட்டாங்க அப்படினு. யார்ட்ட என்ன பேரம் பேசுனாங்க? எவ்வளவு பேசுனாங்க? இப்படியான கேள்விகளெல்லாம் அந்த சம்மன்ல இருக்கு. ஏழு வருஷமா இது நடந்துட்டு இருக்கு அப்படினு சொன்னேன். உடனே ஏழு வருஷம்னு உங்களுக்கு எப்படி தெரியும்? அப்படினு கேள்வி கேட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. உடனே நான் சொன்னேன், அந்த ஒரு வீடியோ போதும்ங்க. 1100 வீடியோ இருக்குறதுக்கு சாட்சி. அந்தப் பொண்ணு கதறுது, அண்ணா காப்பாத்துங்க அண்ணானு. இவன் பின்னாடி இருக்குறவனை கூப்டுறான். அப்போ பின்னாடி ஆள் இருக்காங்க, எத்தனையோ பேர் இருக்காங்க அப்படினு சொன்னவுடனே... பின்னாடி எத்தனை பேர் இருந்தாங்க? யார், யார்னு சொல்லுங்க அப்படினு கேக்குறாங்க இதையெல்லாம் கண்டுபிடிக்கவேண்டியது அவங்க பொறுப்பு இல்லையா. அதுலயும் அந்த டி.எஸ்.பி. ஒருத்தரு இதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் தெரியுமா? அப்படிங்குறாரு. 

 

nakkheeran gopal


அவுங்க சொல்றாங்க, இப்போ இந்த புத்தகங்களை வைத்துதான் நாங்க விசாரணைக்கு போகப்போகிறோம் என்று. அப்போ இத்தனை நாட்களாக போலீஸ் என்ன செய்தது. அதற்கு நான், பிப்ரவரி 12ம் தேதியே ஒரு நாலு பேர் பேரு கம்ப்ளைண்ட்ல இருக்கு அப்படினு சொல்றாங்க. நாங்க மார்ச் 9ம் தேதிதான் போட்டோம். அதுவரைக்கும் பொள்ளாச்சியே தகதகச்சு இருந்துச்சு. அப்போதெல்லாம் உங்களுக்கு தெரியலையா? நக்கீரன் செய்தி போட்டதுக்கு பிறகுதான் தெரியுதா அப்படினு கேட்டேன். அதற்கு அவுங்க, இல்லை நீங்க 1,500 வீடியோனு போட்டிங்க, 250 பெண்கள்னு போட்டிங்க. யார், யார் அந்தப் பெண்கள் அப்படினு கேக்குறாங்க. தெரிந்தாலும் அதை எப்படி சொல்லமுடியும். வீரப்பன் விஷயத்திலிருந்தே நாம் சொல்லிக்கொண்டிருப்பதுதான், எனக்கு காட்டிக்கொடுக்க தெரியாது.
 

ஒரு பெண் பேசிய ஆடியோ வெளியாகியது, ஒரு குழந்தையை கொன்று விட்டார்கள் என்று. அந்த ஆடியோவை போட்டுவிட்டு, இதுகுறித்து புலனாய்வு செய்து பார்க்கும்போது, திருநாவுக்கரசு பண்ணை வீட்டை சுற்றி எதாவது பிணம் புதைக்கப்பட்டிருக்கிறதா என ஆராய்ந்தோம் என ஒரு வார்த்தை வரும். உடனே விசாரணையில் ஆராய்ந்தீர்கள் என்றால் எப்படி ஆராய்ந்தீர்கள், எப்படி போய் தோண்டிப் பார்த்தீர்கள். அப்படினு கேட்டாங்க. 
 

இதில் பிரகாஷ், அருள்குமார் என இரண்டு நிருபர்கள் சம்மந்தப்பட்டிருப்பார்கள், என் தம்பிகள். அந்த இருவரின் செல்ஃபோன் நம்பர்களையும் கொடுங்கள். எதற்கு எனக்கேட்டபோது, இல்லை அவர்தானே போய் விசாரிச்சாரு, உடனே கொடுங்கள், நாங்கள் அவர்களுக்கு சம்மன் கொடுக்கவேண்டும். அப்படிங்குறாங்க. 
 

nakkheeran gopal


 
இப்போது கொடுக்கப்பட்ட சம்மனில் சில கேள்விகள் இருக்கு. அதற்கான பதிலை 3ம் தேதிக்குள் கொடுக்கவேண்டும் எனக்கூறினார்கள். அதற்கு நான், நீங்கள் கேட்டமாதிரி 3ம் தேதிக்குள் எங்களால் கொடுக்க இயலாது. முடிந்தவரை சீக்கிரம், இரண்டு, மூன்று விஷயங்கள் குறித்து கொடுக்க முயற்சி செய்கிறேன். அப்படினு எழுதி கையெழுத்து போட்டுட்டு வந்திருக்கிறேன்.  
 

ஒரு சாட்சி என்ன செய்யணுமோ அதை செய்துள்ளேன். எங்களிடம் இருந்த ஆதாரங்களை ஒன்று, இரண்டு, மூன்று என வரிசைப்படுத்தி கொடுத்துவிட்டோம். இதற்குமேல் என்ன செய்யவேண்டும். ஆனால் அதையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு அவர்கள், புத்தகத்தில் வந்த செய்தியில் இதை யார் சொன்னார்கள், அதை யார் சொன்னார்கள் என சோர்ஸை அறிந்துகொள்வதிலையே குறியாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நாம பெயர் மாற்றப்பட்டுள்ளது என ஒரு பெயரை போட்டால், அவரின் இயற்பெயர் என்னவென்று கேட்கிறார்கள் அதை எப்படி நாம் கூறமுடியும். 
 

இப்போ வெளியே வரும்போது ஒரு பெண் எஸ்.பி., இங்க பாருங்க, இப்போ விசாரணை போய்ட்டு இருக்கு. இதுல நீங்க ரொம்ப கவனமாக இருக்கணும். அதனால இதை யார்ட்டையும் சொல்லிராதிங்க அப்படினு சொல்றாங்க. 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்