பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் மற்றும் யூ-ட்யூப் சேனல்களை நடத்திவரும் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் திரைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும்பல்வேறு துறைகளைச் சேர்ந்த சமூக அக்கறை மிகுந்த ஆளுமைகளுக்கும்பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.
6-வது பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருதுகள் வழங்கும் விழாசென்னை டிரேட் செண்டரில் நேற்றுநடைபெற்றது. இதில் நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில்'ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன்' விருது நக்கீரன் ஆசிரியர்நக்கீரன் கோபாலுக்கு வழங்கப்பட்டது. ''வாழுகின்ற பெரியாரிடம் (நல்லகண்ணு) இந்த விருதை நான் வாங்குவதில் பெருமை அடைகிறேன்" என்று பெருமையுடன் கூறி நல்லக்கண்ணுவிடம்விருதைப் பெற்றார். மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு 'ஐகான் ஆப் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி இன் சினிமா' விருதும் ஐஏஎஸ் அதிகாரிசகாயத்துக்கு 'ஐகான் ஆப் இன்ஸ்பிரேஷன்' விருதும்வழங்கப்பட்டது.