Skip to main content

நாயுடு - ராவ் ஆடும் ஆடுபுலி ஆட்டம்! தேசிய அரசியலில் பரபரப்பு!

Published on 13/05/2019 | Edited on 14/05/2019

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான காட்சிகளுக்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் உருட்டும் தாயக் கட்டைகள் பரபரப்பை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. இதில் பா.ஜ.க.-காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்கிற சந்திரசேகரராவை மோடி-அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல்லாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கிறார்கள். மெஜாரிட்டி இடங்களை பா.ஜ.க. பிடிக்கும் வாய்ப்பு அரிது என்றும், அதிக இடங்களைப் பிடித்த கட்சி என்ற அளவில் ரிசல்ட் வரலாம் என்றும் உளவுத்துறை டெல்லிக்கு சிக்னல் தந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளை சேர்த்தாலும் மெஜாரிட்டிக்குத் திண்டாட வேண்டும். இந்த நிலையில்தான், பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை காங்கிரஸுக்காக ஒருங்கிணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை ரீச் செய்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. ஆனால், அங்கே காங்கிரசின் தனிக் கணக்கும் திருப்தி கரமானதாக இல்லை. ராகுலை பிரதமராக ஏற்பதிலும் கட்சிகளுக்கிடையே முரண்பாடு உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிரான மூன்றாவது அணி அமைந்தால் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்குமா என்கிற  விவாதமும் அந்தக் கட்சிக்குள் ஓடுகிறது. 

 

stalin rao



மாயாவதி, சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரசின் உள்ளே-வெளியே ஆட்டத்தை விரும்பமாட்டார்கள். அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவதையே எதிர்பார்ப்பார்கள். ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் மோடி-அமித்ஷாவின் பா.ஜ.க.வை அடுத்த தேர்தலில் துடைத்தெறிய முடியும் என்கிற காங்கிரசாரின் கருத்தை சோனியாவும் ராகுல்காந்தியும்  ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் பா.ஜ.க. தலைமைக்கும் சென்றுள்ளது. மூன்றாவது அணி அமைப்பதில் நாயுடுவும் மம்தாவும் தீவிரம் காட்டுவார்கள். இதில், ஆந்திராவில் நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்கு பெரிய ஆதரவு இல்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பலம் காட்டுவார். அகிலேஷ், மாயாவதி கூட்டணி பா.ஜ.க.வுக்கு எதிராக இருந்தாலும் சந்திரசேகரராவும் ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜ.க. பக்கம் வருவார்கள்; அதனால்தான், தெலங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகரராவ் மூலம், காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகளை இழுத்து மூன்றாவது அணியை உருவாக்குவதில் பா.ஜ.க.  தலைமை தீவிரம் காட்டுகிறது. தனது முன்னாள் குருவான சந்திரபாபு நாயுடுவின் வியூகங்களையும் அறிந்தவர் சந்திரசேகரராவ். 
 

mamtha banerji



மோடியின் கட்டளைப்படி, கடந்த 30-ந் தேதி  சந்திரசேகர ராவிடம் 2 மணி நேரம் விவாதித்திருக்கிறார் அமித்ஷா. காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், மூன்றாவது அணி சார்பில் சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்க ராகுல் திட்டமிட்டிருக்கிறார். "நாயுடு பிரதமராவது உங்களுக்குத்தான் தலைவலி' எனச் சொன்ன அமித்ஷா,  "உ.பி. யில் மொத்தமுள்ள 80 இடங் களில் அகிலேஷ்-மாயாவதி கூட் டணி 60 இடங்களைப் பிடித்து விட்டால் பிரதமர் பதவியை கைப்பற்ற மாயாவதி துடிப்பார். மாநிலத்துக்கு அகிலேஷும் மத்தியில் மாயாவதியும்ங்கிறது தான் அவர்களின் தேர்தல் அஜெண்டா. மம்தாவுக்கும் நாயுடுவுக்கும் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காது போனால் தலித் தலைவர் என்கிற கோஷத்தை முன்னிறுத்தி மாயாவதிக்கு ஆதரவு தர காங்கிரசும் கீழிறங்கி வரும். அந்த சந்தர்ப்பத்தை காங்கிரசுக்கு தரக்கூடாது.  நாமும் தலித் கோஷத்தை முன்னெடுப்போம். இதையெல்லாம் கணக்கிட்டு, காங்கிரஸ் கூட்டணியிலுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமியையும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து இப்போதே பேசி வையுங்கள்' என்ற அமித்ஷா, யாரிடம் எப்படிப் பேசி சரிக் கட்ட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

vijayan



கர்நாடக முன்னாள் முதல்வர் காங்கிரஸ் சித்த ராமையாவின் நெருக்கடியால் ஆட்சியை நடத்த அல்லாடும் குமாரசாமி, காங்கிரசை மிரட்டுவதற்காக ராவை சந்திக்க ஒப்புக்கொண்டார். அந்த சந்திப்பில், "காங்கிரஸ் இங்கே தனது நிலையை மாற்றிக் கொண்டால் நான் உங்கள் முயற்சிக்கு ஆதரவளிக்க முடியாது. இல்லையென்றால், ஆதரிக்கிறேன்' என சொல்லியிருக்கிறார் குமாரசாமி. "காங்கிரஸ் தயவின்றி ஆட்சியை பாதுகாக்க பா.ஜ.க. வின் ஆதரவை நான் வாங்கித் தருகிறேன்' என ராவ் தெரிவிக்க, பட்டும் படாமல் ஒரு உடன்பாடு அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. 
 

stalin



பா.ஜ.க.வை எதிரியாக நினைக்கும் சி.பி.எம். கட்சி, காங்கிரசுடனும் மம்தாவுடனும் முரண்பட்டு நிற்கிறது. அதனால் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார் ராவ். அந்த சந்திப்பில், "இந்த தேர்தலில் சி.பி.எம். ஜெயிக்கப் போவது சில தொகுதிகளில்தான். அதனால் தேர்தல் முடிவுகள் வரட்டும். அப்போதைய சூழலை வைத்து சி.பி.எம். தலைவர்களிடம் பேசுகிறேன்' என ராவிடம் தெரிவித்து விட்டார் விஜயன். ஸ்டாலினை சந்திக்க ராவ் முயற்சித்தபோது, சந்திப்புக்கான நேரம் இறுதி செய்யப்பட வில்லை. இந்த நிலையில் தொடர்ந்து ராவ் எடுத்த முயற்சியால் திங்கள்கிழமை சந்திப்பதற்கு கடந்த 11ஆம் தேதி நேரத்தை உறுதி செய்தது ஸ்டாலின் தரப்பு.

 

bjp



சந்திப்புகளின் விவரங்களை தனது கட்சியின் டெல்லி அரசியலை கவனித்துக்கொள்ளும் தனது மகளும் எம்.பி.யுமான கவிதா மூலம் அமித்ஷாவுக்கும் தேவைப்படுகிற சமயத்தில் மோடிக்கும் பாஸ் செய்து வருகிறார் சந்திரசேகரராவ். தேசிய வாத காங்கிரஸ் சரத்பவாரை இழுக்க கவிதாவிடம் அசைன் மெண்ட்டை கொடுத்துள்ளது பா.ஜ.க. தலைமை. கவிதாவும் சரத்பவாரின் மகளான சுப்ரியா சுலே எம்.பி.யும் நல்ல தோழிகள். சரத்பவாரின் ஆதரவை பெற சுப்ரியாவிடம் பேசி வருகிறார் கவிதா என்கிறது நம்மிடம் விவரங்களைப் பகிர்ந்த டெல்லி தரப்பு. 

 

naidu



பா.ஜ.க.வுக்காக சந்திரசேகர ராவ் விளையாடத் துவங்கி யிருப்பதால் அவசரம் அவசரமாக ராகுல்காந்தியை சந்தித்து ஆலோசித்தார் சந்திரபாபு நாயுடு. அந்த ஆலோசனையில் மன்மோகன்சிங், அகமது படேல், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தனர். இது குறித்து நாம் விசாரித்தபோது, ""சந்திரசேகரராவின் வேகம் குறித்து முதலில் அலசியுள்ளனர். அதில், சரத்பவார், ஸ்டாலின், குமாரசாமி மூவரையும் வளைக்க பா.ஜ.க. எடுக்கும் முயற்சிகள்தான் விரிவாகப் பேசப் பட்டது. சம்பந்தப்பட்ட மூவர் தரப்பிலும், தான் பேசியதாகவும், யாரும் ராவுக்கு பிடிகொடுக்கவில்லை எனவும் ராகுல் காந்தியிடம் சொல்லியிருக்கிறார் நாயுடு. அப்போது, "அவர்களை நம் பக்கமே இருக்க வைப்பது உங்களால்தான் முடியும்' என சொன்ன ராகுல், "தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தால் ஆட்சியமைக்க நம்மை ஜனாதி பதி அழைக்கமாட்டாராம். அதுவே பா.ஜ.க. வந்தால் அழைப் பாராம். இந்த அஜெண்டாவை ஜனாதிபதிக்கு, பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது' என்றிருக்கிறார். 

"அதை நாம் எதிர்க்க வேண்டும்' என நாயுடு சொல்ல, அப்போது பேசிய ராகுல்காந்தி, "ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் தனிப்பெரும் கட்சி என பார்க்கக் கூடாது. கூட்டணியைத் தான் பார்க்க வேண்டும்' என வலியுறுத்துவோம். அதனையும் ஜனாதிபதி புறக்கணித்தால், "பா.ஜ.க.வை அழைக்கும்போதே அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் ஆதரவு கடிதத்தையும் வாங்கிக்கொண்டு அதில் பெரும்பான்மை இருக்கும்பட்சத்தில் மட்டுமே பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்' என ஜனாதிபதியிடம் வலியுறுத்தலாம்.  அத்துடன், "பா.ஜ.க. ஆதரவு கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வழி களை முன்னெ டுக்க வேண்டும்'  என சொல்ல, மற்றவர்களும் இதேரீதியில் பேசியிருக்கிறார்கள். இதனை யடுத்து, "மம்தா ஒத்துழைத்தால், கடைசி 2-கட்ட தேர்தலிலும் பா.ஜ.க.வை முடக்கிவிடலாம்' என விவாதம் வந்திருக்கிறது. அப் போது, மம்தாவிடம் "காங் கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை தவிர்க்கப் பாருங்கள் என சொல்கிறேன். நான் சொன்னால் அவர் கேட்பார்' என சொன்னார் நாயுடு.

தொடர்ந்து பேசிய நாயுடு, "பா.ஜ.க.வால் ஆட்சியை தக்க வைக்க முடியாது போனால், நிதிஷ்குமார் அல்லது மாயாவதி யை பிரதமராக்க மோடி திட்ட மிடுகிறார். ஆனால், இருவரிட மும் நானும் பேசி வருகிறேன்' என அவர் சொன்னது, காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதனையடுத்து, "மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைப்பதை தடுப்பதற்கான வழி களை பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத் துக் கட்சிகளையும் 21-ந் தேதி கூட்டி விவாதிப்போம். அதில், சரத்பவார், மம்தா, மாயாவதி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரி வால், மு.க.ஸ்டா லின் மற்றும் இடது சாரி தலைவர் களின் ஆலோ சனையை கேட் போம்' என முடி வெடுத்துள்ளனர்'' என்கின்றனர் டெல்லியோடு தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள்.  இதனி டையே, தொங்கு நாடாளுமன் றம் அமைந்தால் காங்கிரஸை ஆத ரிக்கலாம் என சந்திரசேகரராவ் சொல்லியிருப்பதுகூட, சந்திரபாபு நாயுடுவின் மூவை முறியடிக்க பா.ஜ.க. வகுத்த வியூகம் என்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் தெரிய இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், தங்களின் ஆட்சி அமையவும், எதிரிகள் ஆட்சியமைப்பதை தடுக்கவும் பா.ஜ.க.- காங்கிரஸ் ஆடும் ஆடு-புலி ஆட் டம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. 
 

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.