Skip to main content

“நேர்மையாக வாழ்ந்து பாருங்களேன்!” - வழிகாட்டும் மகளிர் ஆய்வாளர்!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

‘இந்த விருதுநகர் மாவட்டத்தில் சொல்லிக்கிற மாதிரி லஞ்சம் வாங்காத நேர்மையான போலீஸ் அதிகாரின்னு யாரும் இருக்காங்களா?’ என்று கேட்டோம் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம். சிரித்தபடி அவர் “நானே என்னை அப்படிச் சொல்லிக்க முடியாது. ஆனா, எங்க டிபார்ட்மென்ட்ல எல்லாரும் ஆச்சரியப்படற மாதிரி ரொம்பவும் ஹானஸ்ட்டா ஒரு விமன் ஆபீசர் இருக்காங்க. விருதுநகர் பஜார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரியா தான் அப்படி ஒரு நல்ல பேரு வாங்கிருக்காங்க.” என்று கூற, இன்ஸ்பெக்டர் பிரியா குறித்த தகவல்களைத் திரட்டினோம்.

 

பிரியாவின் அப்பா சொர்ணபாண்டியன், ஓய்வுபெறும் வரையிலும் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார். பிரியாவின் கணவர் செந்தில்குமாரும் ஒரு நேர்மையான போலீஸ்காரர்தான். எந்தச் சூழ்நிலையிலும் அநீதிக்கு வளைந்து கொடுக்காதவராக பிரியா இருப்பதால் அரசியல்வாதிகளோ,  வழக்கறிஞர்களோ இவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவதில்லை. சற்று விலகியே நிற்பார்கள். 

 

"Live Honestly!" - Guide to Women's Study


 

 

 

காக்கிகளுக்கே உரிய கடும் சொற்களையும் பிரியா பிரயேகிப்பதில்லை. அடிக்கடி அவர் இப்படிச் சொல்வாராம். ‘என் அம்மா, அப்பா என்னை நல்லபடியாக வளர்த்தார்கள். அவர்கள் கற்றுத் தந்ததைத்தான் வாழ்க்கையிலும், பணியிலும் நான் கடைப்பிடித்து வருகிறேன். மனசாட்சிக்கு விரோதமாக எந்த ஒரு காரியத்தையும் பண்ணுவதில்லை. ஒருவருக்கு கெடுதல் செய்தால், அது நமக்கே திரும்பிவரும் என்பதை உணராதவர்களே தவறு செய்கிறார்கள். பணத்தைப் பெரிதாக நினைத்து, தவறான வழியில் அதைச் சம்பாதித்து  வருங்கால சந்ததியினருக்கு நாம் பாவத்தைச் சேர்த்து வைக்கக் கூடாது. நேர்மையைக் கடைப்பிடித்தால், வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பதை, அதனை அனுபவித்து வருபவர்கள் மட்டுமே உணர்கிறார்கள். நேர்மையாக வாழ்ந்து பாருங்களேன்!’ என்று, பிறருக்கும் ஒரு தூண்டுகோலாக இருந்து வருகிறாராம்.  

 
பிரியாவிடம் பேசினோம். “என்னளவில் நான் சரியாக இருக்கிறேன். மற்றபடி, என்னைப் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார். காவல்துறையில் ஒரு அதிகாரி நேர்மையை மட்டுமே கடைப்பிடித்து வருவது, மிகப்பெரிய சவால்தான்!

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை; காவலர் கைது!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Mayiladuthurai Dt Perambur Police Station constable Thirunavukarasu incident

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து சென்னையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.

இதனையடுத்து காவலர் திருநாவுகரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

ரவுடி திருவேங்கடத்தின் உடல் இன்று ஒப்படைப்பு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
chennai thiruvenkadam Handover incident 

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யவும், உடலை பெற்றுக்கொள்ளவும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதி தீபாவும், காவல்துறையினரும் நேற்று இரவு திருவேங்கடத்தின் குடும்பத்தினரிடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து திருவேங்கடத்தின் உறவினர் பிரேதப் பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்தனர். 

chennai thiruvenkadam Handover incident 

இதனையடுத்து அவரது உடல் நேற்று இரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் சிறிது நேரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் திருவேங்கடத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாமல் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி திருவேங்கடத்தின் உறவினர்கள் இறுதி சடங்கிற்கு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

The website encountered an unexpected error. Please try again later.