Skip to main content

கருத்தை கருத்தால் எதிர்க்காமல், மிரட்டுவது என்ன மாதிரியான அரசியல்!!! உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி...

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

நேற்றுமுன்தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. காந்தியை சுட்டுக்கொன்றவர் கோட்சே எனப்பேசினார்.
 

kamalhaasan


இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்தது. ஒரு கருத்தை, கருத்தால் எதிர்ப்பது என்பது எப்போதும் வரவேற்கத்தக்கதே. அவரது கருத்திற்கு எதிர்கருத்துகளோ, ஆதரவு கருத்துகளோ வருவது எப்போதும் அவரவர் விருப்பம். 

தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் மாநில தலைவர் கூறியது, கமலின் பேச்சை நிறுத்த பாஜக நடவடிக்கை எடுக்கும் என பிரச்சாரத்தில் கூறியதுடன், "தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர் கமல். ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை!" என தனிமனித வாழ்க்கையையும் விமர்சித்தார். கருத்தை கருத்தால் எதிர்க்காமல் அவருடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசுவது என்ன மாதிரியான அரசியல் என தெரியவில்லை. 

அடுத்தது அவரது கட்சியின் தேசிய செயலாளர் ஒற்றுமையை பேணிக்காப்பவர், பெரியார் சிலையை பாதுகாப்போம் எனக்கூறி ஒற்றுமையை வளர்த்தது இவரது சாதனை, அப்படிப்பட்ட பெருமைகளை உடைய ஹெச்.ராஜா கூறியுள்ளார், கமல்ஹாசன் ஜின்னாவின் பேரன், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம் என்றும், அத்துடன் முஸ்லிம்களின் ஓட்டுக்காக இந்துக்களை கமல்ஹாசன் இழிவுபடுத்துவதாகவும் கூறியிருக்கிறார். இந்து எனக்கூறியதால் அவரை ஜின்னாவின் பேரன் என சித்தரிப்பது எதை குறிக்கிறது. இது பிரிவினை இல்லையா? 
 

hindu maha sabha


உங்களுக்கு ஒரு நிகழ்வை நியாபகப்படுத்த நினைக்கிறேன்... காந்தியின் 71-வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட அன்று, அலிகர் நகரில் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பூஜா சகுண் பாண்டே தலைமையில் சிலர் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து அதை துப்பாக்கியால் சுட்டனர். அந்த உருவ பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம் ரத்தம்போல் வழிந்து ஓடியது, பின் அந்த உருவ பொம்மை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள். சுடும்போது நாதுராம் கோட்சே வாழ்க என்று முழக்கமிட்டனர். அப்போது ஏன் நீங்கள் எதிர்வினையாற்றவில்லை. 

நாதுராம் கோட்சேவிற்கும், மகாத்மா காந்திக்கும் இடையே தனிப்பட்ட பகை ஏதும் இருந்ததா? அவன் ஏன் கொன்றான், அது நடந்த காலகட்டம் என்ன, என்பதையெல்லாம் ஆராய்ந்தால் ஒரு முடிவு தெரியவரும். 

இவரெல்லாம் எப்படி அமைச்சரானார் என்ற சந்தேகம் பல அதிமுக அமைச்சர்களை பார்க்கும்போது எழும். இவர் அவர்களில் ஒருவர் இப்போது அதை தெள்ளந்தெளிவாக நிரூபித்துவிட்டார் ராஜேந்திரபாலாஜி. சட்டத்தையும், அனைத்து மக்களையும் பாதுகாப்பேன் என உறுதிமொழியேற்று பதவிக்கு வந்த இவர், கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும் எனக்கூறுகிறார். 70 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம், கலைஞரை அமெரிக்கா அழைத்துசென்று சிகிச்சை அளிக்காமல் அவரை கொன்றுவிட்டனர், ஹிந்தி தெரியாததால்தான் மத்திய அரசு வேலை தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பேசும் அமைச்சரே!, கமல் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார் எனக்கூறியவரே! நேற்று உங்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு. தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலையில் குல்லா வைத்துக்கொண்டு அதே அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்தாரே அதற்கு பெயர் என்ன. 

 

kamalhaasan



ஒவ்வொரு நாடுகளிலும் மதத்தின் பெயரால் தினமும் ஏதாவது ஒரு கொடுமை நடக்கத்தான் செய்கிறது. இந்த விஷயத்தில் நாடும், மதமும் மாறுகிறதே தவிர கொடுமைகள் மாறுவதில்லை. மதம் மாட்டை பாதுகாத்து, மனிதனை கொல்லும், உயிருடன் எரிக்கும், குழந்தையிடமிருந்து தாயை பிரிக்கும், ஒரு கருத்தை கூறியவரின் நாக்கை அறுக்க சொல்லும் மொத்தத்தில் மதம் மனிதனை மிருகமாக்கும்...

 

 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.