ரஃபேல் விமான பேர ஊழல் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் தனக்குத்தானே காவலன் என்ற அடைமொழியைக் கொடுத்து, தனது ட்விட்டர் கணக்கை சவுகிதார் நரேந்திர மோடி என்று பெயரை மாற்றினார் மோடி. கடந்த 17 ஆம் தேதி அவர் தனது பெயரை மாற்றியவுடனே அதை பலவாறு கிண்டலடிக்கத் தொடங்கினர்.

Advertisment

najib jnu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காவலன் என்றால் அனில் அம்பானி, அதானி, நிரவ் மோடி போன்றவர்களுக்குத்தானே என்றும், மக்கள் பணத்தை திருடி அனில் அம்பானியின் பாக்கெட்டுக்கு கொடுத்த திருடனுக்கு காவலன் என்று பெயரா? என்றும் கடுமையான கேள்விகளை ராகுல் உள்ளிட்ட தலைவர்களே கேட்கத் தொடங்கினர்.

Advertisment

ஆனால், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து காணாமல் போன தனது மகன் நஜீப் எங்கே என்று காவலன் மோடி சொல்வாரா? எனது மகன் காணாமல் போன விவகாரத்தில் தொடர்புடைய பாஜகவின் மாணவர் அமைப்பு ரவுடிகள் ஏன் கைதுசெய்யப்படவில்லை? இந்தியாவின் இரண்டு முக்கிய புலனாய்வு அமைப்பு எனது மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன்? என்று ஒரு தாய் கண்ணீருடன் மோடிக்கு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

அவருடைய கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்த 27 வயது நஜீப் அகமது 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி உறுப்பினர்களுடன் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து அவர் காணாமல் போனார். அன்றிலிருந்து அவர் இப்போதுவரை கிடைக்கவேயில்லை.

அவர் காணாமல் போனது தொடர்பான வழக்கை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் மூடிவிட்டது. இந்நிலையில்தான் தன்னை காவலன் என்று கூறிக்கொள்ளும் மோடிக்கு நஜீபின் தாயார் பாத்திமா நபீஸ் சரமாரியாக வினாக்களைத் தொடுத்துள்ளார்.