Skip to main content

நம்பிக்கை நாயகனுக்கு டாக்டர் பட்டம்...

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கும் வாழ்வியல் பேச்சாளாராகவும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தன் நினைவிலிருந்தே பாடக்கூடிய பாடகராகவும் பல புகழ்பெற்ற விளம்பரப்படங்களில் பின்னணிக்  குரல் கொடுத்தவராகவும் பல பரிமாணங்களில் நம்மை இன்ஸ்பையர் செய்து கொண்டிருக்கும் 'இன்ஸ்பையரிங்' இளங்கோ, ஆசியாவிலேயே முதல் முறையாக 'ஸ்கூபா டைவிங்' பயிற்சி சான்றிதழ் பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.
 

inspiring ilango


இன்ஸ்பைரிங் இளங்கோ... ஒரு சிறப்புத் திறனாளி சாதனையாளர். சிறப்புத்திறனாளி என்பது வார்த்தை அலங்காரத்துக்காக சொல்லப்படுவது அல்ல, அதுவும் முக்கியமாக இவர் விஷயத்தில். உண்மையில் இவர் சிறப்பான பல திறன்களை உடையவர். மிக அழகாக பல நூறு பாடல்களை மனதில் நிறுத்தி பாடக்கூடியவர். 

பல்வேறு விருதுகளையும் சாதனைகளையும் படைத்துள்ள அவருக்கு, சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்து உள்ளது. அவர் அடிக்கடி சொல்வது போல, அவருக்கு சைட் (sight) இல்லை, ஆனால் விஷன் (vision) இருக்கிறது. ஆம், நம்மையெல்லாம் விட விசாலமான விஷன் இருக்கிறது. 


 

 

Next Story

நூதன முறையில் கடத்தல்... சோதனையில் சிக்கிய தங்கம்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

 Innovative methods of smuggling ... Gold caught in the test!

 

விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை நூதனமான முறைகளில் கடத்திவரப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதிலும் திருச்சி விமானத்தில் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுவருவதும், அதனைத்தொடர்ந்து சோதனையில் பிடிபடுவதும் வழக்கமான ஒன்று.

 

இந்நிலையில், சார்ஜாவிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (01.12.2021) வந்துசேர்ந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு பயணி நூதனமான முறையில் ஆசன வாயில் வைத்து பசை வடிவிலான மூன்று தங்கக் கட்டிகளைக் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 586.500 கிராம் என்றும் அதன் மதிப்பு 28.69 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பயணியைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

Next Story

திருச்சி என்.ஐ.டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Minister Anbil Mahesh inspects Trichy NIT

 

திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள என்.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தலுக்காக தயாராகி வரும் முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.

 

Minister Anbil Mahesh inspects Trichy NIT

 

கரோனா நிவாரண நிதி முதல் கட்டமாக 2,000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை நியாயவிலை கடைகளில் இன்று காலை முதல் தொடங்கி வைத்த அவர், கரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு இடங்களில் தொடர் ஆய்வு செய்தார். அதன்படி, என்.ஐ.டி வளாகத்தில்  சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்ட போது அரசு அதிகாரிகள் வளாகத்தில் அமைய உள்ள படுக்கைகள் குறித்தும், இதர வசதிகள் குறித்தும் விளக்கிக் கூறினர்.