Skip to main content

சீனப் படைகள் எப்போது இந்திய எல்லைக்குள் வந்தது? உளவுத்துறை கண்டறியவில்லையா? முன்னாள் கர்னல் ஆவேசம்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

officer

 

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா, சி.பி.எம். சீதாராம்யெச்சூரி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், பிஜு ஜனதா தளத்தின் பினாக்கி மிஸ்ரா, சமாஜ்வாதி ராம்கோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்திய வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்திருப்பதைக் கண்ணீர் மல்க மோடி கூற, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பேசிய பிரதமர், "நம் எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்திய மண்ணை அவர்கள் கைப்பற்றவும் இல்லை. தேசத்தின் ஒரு அங்குல நிலத்தையும் எவரும் தொட்டுவிட முடியாது. அந்தளவுக்கு நம்முடைய ராணுவத்தின் ஆயுதப் படைகளின் பலம் வலிமையானது'' என பகிர்ந்து கொண்டார்.

 

சோனியாகாந்தி, "சீனப் படைகள் எப்போது இந்திய எல்லைக்குள் வந்தது? உளவுத் துறை கண்டறிய வில்லையா? பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிகளை இழந்துவிட்டதால் 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்'' எனக் குற்றம்சாட்டிப் பேசினார். இந்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்றும் சொன்னார். சீனாவுடனான பிரச்சினையில் அமெரிக்காவின் வலையில் விழுந்துவிடக் கூடாது என கம்யூனிஸ்ட்டுகள் எச்சரிக்கை விடுத்தனர். மற்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், பிரதமர் மோடி எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகளை பாராட்டியதுடன் அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

 

இந்திய எல்லையில் அதிகரித்து வரும் போர்ப் பதட்டம் குறித்து இந்திய ராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கர்னல் ஹரிஹரனிடம் நாம் பேசியபோது, "லடாக்-திபெத் எல்லையில் கடந்த ஒரு மாதமாகவே சீனாவின் பயமுறுத்தல்கள் இருந்தே வந்திருக்கின்றன. இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட பகுதியின் ராணுவ தளபதிகள் சுஷுல்-மோடாவில் சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். மே-13 வரை ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பிரச்சனை தீரவில்லை.

 

எல்லைப் பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இரு நாட்டு ராணுவப் படைகளும் குவிக்கப்பட்டு இருக்கின்றன. தனது துருப்புகளை அகற்ற சீனா மறுத்து வருகிறது. தற்போது மோதல் நடந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை புதிதாக க்ளைம் செய்கிறது சீனா. இதனை இந்தியா ஏற்கவில்லை. இருப்பினும், சீனா அப்படி க்ளைம் செய்த மாத்திரத்தில் ஒரு நிமிடம் கூட ஏற்காமல் ஆயுதங்களை இந்தியா தூக்கியிருக்க வேண்டும்.

 

இந்திய- சீனாவிற்கிடையே 2013-இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, எல்லைப் பகுதியில் யார்- யார் எங்கெங்கு இருக்கிறோமோ அதற்கான வழிமுறைகளை ஆயுதமில்லாமல் சந்தித்துப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதனால்தான், இந்திய தரப்பில் கொல்லப்பட்டவர்களில் ராணுவ கமாண்டிங் ஆஃபிஸர் ஒருவர் இருந்தும் இந்திய துருப்புகள் தங்களது ஆயுதங்களைத் தூக்கவில்லை.

 

bjp

 

நான் இப்போது ராணுவத்தில் இருந்திருந்து கமாண்டிங் ஆஃபிஸர் கொல்லப்பட்டிருந்தால், இந்திய அரசின் கட்டளையையும் மீறி ஃபயரிங் அட்டாக் நடத்த என்னுடைய யூனிட்டிற்கு உத்தரவிட்டிருப்பேன். எதிரிகள் நம் எல்லைக்குள் தாக்குதல் நடத்தினால் ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருப்பது பலனில்லை. கல்வான் பள்ளத்தாக்கினை சீனாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.

 

2013-இல் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள் அல்லது மாற்றுங்கள் என இந்திய அரசுக்கு ராணுவ தளபதிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர். அதனால் போர் அபாயம் விலகி விட்டதாக எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சில பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இருப்பதால் இரு நாடுகளும் திட்டமிட்டு தற்போதைய கல்வான் மோதலை நடத்தியிருக்கிறார்களோ எனச் சந்தேகம் இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் சமீபத்தில் 22 பாகிஸ்தான் தீவிரவாதிகளை என்கவுண்டரில் சாய்த்திருக்கிறது இந்தியா. அதனால் அந்தப் பகுதியிலிருந்து நம் ராணுவத் துருப்புகள் இடம் பெயராது.

 

இந்தச் சூழலை வைத்துத்தான் கல்வான் பள்ளத்தாக்கில் நுழைந்து மோதலை சீனா நடத்தியிருக்கிறது. இது போன்ற இரு சம்பவங்கள் ஒரே சமயத்தில் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அதனால், சீனா-பாக் திட்டமிடலில் தற்போதைய மோதல் நடந்திருக்கலாம்.

 

http://onelink.to/nknapp

 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீரிலும், கிழக்கு லடாக் பகுதியில் சீனாவும் ஒரே சமயத்தில் தாக்குதலை நடத்தி இந்தியாவுக்கு தலைவலியைக் கொடுக்க திட்டமிடுகிறார்களோ என்கிற சந்தேகம் இருக்கிறது.

 

இந்தோ-பசிபிக் பகுதிகளில் இந்தியாவின் பொருளாதார, பாதுகாப்பு வலிமையைக் குறைக்க இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது ஆதிக்கத்தை சீனா அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதற்குச் சமீபத்தில் நடந்த முக்கியச் சந்திப்புகளும் சம்பவங்களும் இருக்கின்றன.

 

அதனால் ஆயுதம் வழியாக சீனாவுக்கு தரும் பதிலடிதான் உலக அளவில் இந்திய எதிரிகளை மிரளச் செய்யும்‘’ என்கிறார் மிடுக்காக.


 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.