Skip to main content

சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
IG Eswaramoorthy




தமிழக உளவுத்துறை தலைவராக ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தியை நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் உள்துறை செயலர் பிரபாகர்! 
 


உளவுத்துறை தலைவராக இருக்கும் ஐ.ஜி.சத்தியமூர்த்தி, நாளை 31-ந் தேதியோடு ஓய்வு பெறுகிறார். உளவுத்துறையின் புதிய தலைவராக ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஐ.ஜி.க்கள் சிலரின் பெயர்களை முதல்வர் பரிசீலித்திருக்கிறார் என நக்கீரன் இதழிலும், நக்கீரன் இணையத்தளத்திலும் பதிவு செய்திருக்கிறோம். இந்தநிலையில், உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் ஈஸ்வரமூர்த்தி! தற்போது அவர் பதவி வகிக்கும் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் பொறுப்பையும் கவனிப்பார்.

 

கடந்த 2000-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக அந்தஸ்து பெற்றார்  ஈஸ்வரமூர்த்தி. சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஈஸ்வரமூர்த்தி, பணியில் மிக நேர்மையானவர். இயல்பாகவும் இனிமையாகவும் பழகக்கூடியவர். எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டதில்லை ஈஸ்வரமூர்த்தி. கசப்பாக இருந்தாலும் உண்மையான தகவல்களை மட்டுமே அரசுக்கு தருவதில் உறுதியாக இருப்பவர்! 
 

கடந்த 22 ஆண்டுகால காவல்துறை பணியில் எந்த சூழலிலும் கான்ட்ராவெர்சியில் சிக்கிக் கொண்டதில்லை இவர். 
 

கடந்த 1998- ல் சிபிஐயில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட இவர், 2000-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அங்கீகாரம் கொடுத்தது மத்திய உள்துறை. 2000 - 2001 ஜூலை வரை எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்பி யாகவும், 2001 ஜூலை முதல் 2003 மே வரை மேற்கு மண்டலம் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக பணிபுரிந்தார் ஈஸ்வரமூர்த்தி. 

 

IG Eswaramoorthy


 

இதனைத் தொடர்ந்து, 2003 மே  முதல் 2003  அக்டோபர் வரை எஸ்.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக மீண்டும் நியமனம். 2003 அக்டோபர்  முதல் 2004 அக்டோபர் வரை 1 வருடம் தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்.பி.யாகவும்,  2004 அக்டோபர் முதல் 2005 செப்டம்பர் வரை  சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவின்  துணை ஆணையராக பணியாற்றினார். மீண்டும் எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக 2005 செப்டம்பர் முதல் 2007 நவம்பர் வரை நியமிக்கப்பட்டார். 
 

இதனைத்தொடர்ந்து, சி.பி.ஐ.க்கு மீண்டும் இவரை அழைத்துக்கொண்டது மத்திய அரசு. அதன்படி, 2007-நவம்பர் முதல் 2012 ஆகஸ்ட் வரை சி.பி.ஐ. யில் எஸ்.பி. (சென்னை) யாகவும் பணியாற்றிய ஈஸ்வரமூர்த்திக்கு டி.ஐ.ஜி. பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2012 நவம்பர் முதல்  2014 ஜூன் வரை சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி.யாக தனது பணியைத் தொடர்ந்தார். அதன் பிறகு 2014-ல்  ஈஸ்வரமூர்த்தியை தமிழக அரசு அழைத்துக்கொண்டது. மாநில பணிக்குத் திரும்பிய ஈஸ்வரமூர்த்தி, 2014 ஜூன் முதல்  2016 டிசம்பர் வரை மாநில உளவுத்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். 2016-ல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, 2016 டிச முதல் 2019 ஜூன்  வரை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவை கவனித்தார். 2019 ஜூன்  முதல் 2020 மே வரை சென்னை  மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பொறுப்பேற்ற ஈஸ்வர மூர்த்தி, தற்போது தமிழக அரசின் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 
 

உளவுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈஸ்வரமூர்த்திக்கு, ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.