வாட்ஸ் அப் மூலம் பெகாசஸ் என்ற வைரஸை பரப்பி இந்தியாவில் பலரது தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்ற தகவல் கடந்த வாரம் வெளியானது. இதனை வாட்ஸ் அப் நிறுவனமும் ஒத்துக்கொண்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பன பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளார் பிரபல ஹேக்கர் சிவ பாலாஜி. வைரஸ் ஊடுறுவல் பற்றிய நம்முடைய கேள்விகளுக்கு அவரின் விரிவான பதிலை பதிலை இங்கு காணலாம்.

Advertisment

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருனை வைத்து இந்தியாவில் முக்கியமானவர்களாக கருத்தப்படும், அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் முதலானவர்களின் செல்போன் தகவல்களை உளவு பார்ப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

Advertisment

இந்த பெகாசஸ் என்பது ஒரு வைரஸ். இதை இஸ்ரேலை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்த நிறுவனம் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு தகவல்களை கொடுக்கும் ஒரு உளவு அமைப்பு. அவர்கள் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஊடுறுவலை செய்துள்ளார்கள். அவர்களுக்கு கூட யார்யார் முழுவதுமாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியாது. இதுவரை உலகம் முழுவதும் 1.4 மில்லியன் மக்கள் இதனால்vபாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சாதாரண மக்களை அவர்கள் கண்காணிக்கப் போவதில்லை. அவர்களுக்கு தேவையான முக்கிய நபர்களை டார்கெட் செய்து அவர்களின் வாட்ஸ் அப் தகவல்களை ஒட்டுக்கேட்பார்கள். பிரியங்கா காந்தி செல்போன் ஒட்டுக்கேட்பதாக பிரச்னை எழுந்ததை போன்று, பிரதமர் முதல் எடப்பாடி வரை இந்த மாதிரி ஒட்டுகேட்பு சம்பவங்கள் நடக்கலாம். அவர்களின் பேச்சை கவனித்தால் ஒட்டுமொத்த அரசின் பேச்சை கேட்பது போலதானே?

dg

அடுத்து அவர்களின் திட்டம் என்ன என்பதை எறிந்து அதனை மற்ற நபர்களுக்கோ அல்லது நிறுவனத்துக்கோ தகவல்களை தெரிவித்து ஆதாயம் அடையலாமே? அவர்கள் எந்த மாதிரியான செயல்பாடுகளுக்கு இதனை பயன்படுத்துவார்கள் என்பது இனிவரும் காலங்களில் படிப்படியாக தெரியவரும். இதை ஆறுமாதம் முன்பே வாட்ஸ் அப் நிறுவனம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் இந்த மாதிரியான ஹேங்கிங் வேலைகளில் ஈடுபடுவது வழங்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த விஷயத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் ஏன் பயந்தது என்றால், இந்த முறை தகவல்களை திருடியது இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு துறைக்கு செய்திகளை தரும் நிறுவனம். அதனால், இதன் காரணமாக புதிய அரசியல் சிக்கல்களோ அல்லது போர்களோ வருவதற்கு நாம் காரணமாக இருந்து விட போகிறோம் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் வெளிப்படையாக இந்த விஷயஙங்களை முன் கூட்டியே சொல்லிவிட்டார்கள்.

Advertisment

சமூக செயற்பாட்டாளர்களின் இமெயிலில் தவறான செய்திகளை அனுப்பி அவர்களை வழக்கில் சிக்கவைக்க இது உதவிபுரியம் என்று சொல்கிறார்களே?

இந்த வைரஸ்களை வைத்துத்துதான் ஒருவருக்கு சிக்கலான செய்திகளை அனுப்ப வேண்டும் என்ற தேவையில்லை. ஒருவருடைய இமெயில் அட்ரெஸ் தெரிந்தல் போதுமானது. அவருக்கு யாரும் எந்த மாதிரியான தகவல்களையும் அனுப்ப முடியும். அந்த மாதிரியான வைரஸ்களை உருவாக்குவர்கள் இந்த மாதிரியான தகவல்களை அரசு கேட்டுள்ளது என்று சொல்கிறார்களா? அப்படி ஏதும் இல்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் வேறு. பெரிய நாடுகளின் அரசியல் தலைவர்களின் வாட்ஸ் அப் தகவல்களை கிடைக்கு வகையில் அவர்களுக்கு ஸ்சோஸ் இருப்பதால் அவர்கள் அதனை வைத்து என்ன செய்வது என்றுதான் பார்ப்பார்கள். இந்த வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு அவர்களுக்கு என்ன கிடைக்க போகிறது. எனெனில் அனைத்து நாடுகளுமே தற்போது சூப்பர் பவர் நாடுகளாக வரவேண்டும் என்று விரும்புகின்ற நிலையில், அதில் என்ன மாதிரியான செயல்பாடுகளில் நாம் ஈடுபடலாம் என்பதை மட்டுமே அவர்களின் கவனம் இருக்கும்.

இந்த மாதிரியான ஹேக்கிங்கில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது?

முதலில் செல்போன்களை அடையாளம் தெரியாத நபர்களிடம் கொடுப்பதை நிறுத்திவிடுங்கள். எனெனில் சில வினாடிகளில் உங்கள் செல்போனை கண்காணிக்கும் வைரஸ்களை அதில் இன்ஸ்டால் செய்துவிட முடியும். ஆகையால் முகம் தெரியாத நபர்களிடம் செல்போன்களை தருவதை தடுப்பதன் மூலம் இதனை குறைக்கலாம். அடுத்து, தேவையில்லாத லிங்களில் இருந்து உங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் உங்களின் தகவல்கள் மூன்றாவது நபருக்கு செல்ல வாய்ப்பு அதிகம். இதன் மூலம் உங்கள் தொலைப்பேசியில் என்ன டைப் செய்கிறீர்கள் என்று கூட அவர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். உங்களின் செல்போன் தகவல்களை முழுவதுமாக இதன் மூலம் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். ஆகையால் நாம் விழிப்பாக இருப்பது மட்டுமே இந்த மாதிரியான ஹேக்கில் இருந்து நாம் தப்பித்துக்கொள்வதற்கு வழியை ஏற்படுத்தும்.