Skip to main content

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த 'தசரா' படக்குழு

Published on 18/10/2022 | Edited on 18/10/2022
The 'Dussehra' film crew gave pleasure to actress Keerthy Suresh!

 

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'தசரா'. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான முதல் பாடல் ‘தூம் தாம்’ வரை ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, வெண்ணிலாவாக நடிக்கும் அவரது கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (17/10/2022) வெளியிடப்பட்டுள்ளது. 

 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண் தோற்றத்தில் கலக்கலாக இருக்கிறார். நட்சத்திரமாக ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் அவர் தனது காலை அசைக்க, அதே நேரத்தில் ட்ரம்மர்கள் அவரது ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து வேகமாக அடிக்கிறார்கள். இந்த ஃபர்ஸ்ட் லுக் பார்த்தவுடன் பெரும் உற்சாகத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

 

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நவீன் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

 

'தசரா' திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அடுத்தாண்டு மார்ச் 30- ஆம் தேதி வெளியாகிறது.

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஜி2 படத்தில் பனிதா சந்து நாயகியாகிறார்!

 

 Panitha Sandhu is the female lead in G2

 

அதிவி சேஷ் கதையின் நாயகனாக நடிக்கும். 'G2 '( குடாச்சாரி 2) படத்தில் நடிகை பனிதா சந்து நாயகியாக நடிக்கிறார்.

 

நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'G2'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 'குடாச்சாரி 2' எனும் இந்த படத்தில் நாயகன் அதிவி ஷேஷுக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்கிறார் என்ற செய்தியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.‌இந்தத் திரைப்படத்தை மக்கள் மீடியா ஃபேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ கே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வினய் குமார் சிரிகிடினி இயக்குகிறார்.‌

 

'மேஜர்', 'காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'கார்த்திகேயா 2' போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் உருவாகும் ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் திரைப்படம் தான் 'ஜி2'.  இது போன்ற திறமையான நடிகர்களுடனும் இணைவதால் படம் பிரம்மாண்டமாகவும், தரமுடனும் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.‌ 'அக்டோபர்', 'சர்தார் உத்தம்' போன்ற படங்களில் நடித்து, பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை பனிதா சந்து. இது மட்டுமின்றி அவர் தற்போது இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை இந்த திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராக இருக்கிறார்கள்.

 

இது தொடர்பாக நடிகை பனிதா சந்து பேசுகையில், '' இது என்னுடைய முதல் பான் இந்திய திரைப்படமாகும். இதுபோன்ற நம்ப முடியாத தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆக்கபூர்வமான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவமாக இருக்கும். '' என்றார்.

 

 

Next Story

‘முத்தமிட்ட மூச்சுக் காற்று…’ - திருமண மகிழ்ச்சியில் கார்த்திகா

 

actress karthika nair marrriage

 

பிரபல நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. இவர் ஜீவா நடித்த கோ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்பு பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி படத்தில் நடித்தார். இதனிடையே தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தினார்.  பின்பு கடைசியாக, எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக அவர் சினிமாவில் பயணிக்க வழி வகுக்கவில்லை. அதனால் சினிமாவிலிருந்து விலகினார்.

 

இந்த நிலையில் அவருக்கும் ரோகித் மேனன் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று இருவருக்கும் கேரளா திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள் சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராஃப், ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், ரேவதி, மேனகா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.