Skip to main content

“அமித்ஷாவின் பேச்சை எளிதாகக் கடந்து போக வேண்டாம்; எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்” - ராம. சுப்பிரமணியம் பேச்சு

Published on 14/11/2022 | Edited on 15/11/2022

 

kl;


தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், தற்போதே வெற்றி தொடர்பான பேச்சுக்கள் தொடங்கி விட்டது. திமுக, அதிமுக தரப்பில் எப்போதும் பேசப்படும் இந்தப் பேச்சுக்கள் முதல் முறையாக பாஜக தரப்பிலிருந்து பேச ஆரம்பித்துள்ளார்கள். இது வெறும் அரசியல் பேச்சா? அல்லது அதற்கான திட்டம் வைத்திருக்கிறார்களா? என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியம் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு,

 

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதைப்போல நாமக்கல்லில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதைப்போலவே தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

அமித்ஷா ஏதோ கட்சியினரை உத்வேகப் படுத்துவதற்காக இதைப் பேசியதாகக் கருத வேண்டாம். இதை திமுக தலைமை மிக சீரியசாகவே பார்க்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இருந்தாலும் தமிழகத்தில் ஆட்சியில் வந்தால் தான் இந்தியா முழுமைக்குமான கிடைத்த வெற்றியாகப் பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதை மிகக் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால் இவர்கள் மற்ற மாநிலங்களில் என்னென்ன பித்தலாட்டங்களைச் செய்ய முடியுமோ அது அனைத்தையும் செய்து தற்போது வெற்றி பெற்றுள்ளார்கள். இதைத் தமிழகத்திலும் செய்து முடிக்க அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 

அதன் ஒரு முயற்சியாகவே அவர்கள் தொடர்ந்து தமிழகம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்கள் மற்ற இடங்களில் பெறும் வெற்றி அநியாயமான வெற்றியாகத்தான் இருக்கிறது. ஆனால் சாம, பேத விவகாரங்களைச் செய்து வெற்றி பெறுகிறார்கள். நீதி, நேர்மை என்பதெல்லாம் அந்தக் கட்சிக்கு சிறிதும் கிடையாது. அதை எதிர்பார்த்து அவர்கள் செயல்படுவதும் இல்லை. வெற்றி பெறுவதற்கு எந்த ஆயுதத்தை எடுக்கலாம் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த சிந்தனையும் அறவே இல்லை. ஆகையால் நான் மீண்டும் திமுக தலைவரைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், அவர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் பாருங்கள்.

 

திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெல்ல வேண்டும் என்று கூறி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவது உண்மை. அதிமுகவைப் பொறுத்த வரையில் அது நான்காக தற்போது உடைந்து கிடக்கிறது. அதனால் எடப்பாடியின் பேச்சு வெறும் வாய்ப் பேச்சாகத்தான் போகும். ஆனால் அமித்ஷாவின் பேச்சில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்ற பேரார்வம் இருக்கிறது. ஆகையால் எந்த எல்லைக்கும் அவர்கள் போக விரும்புவார்கள். எதையும் அரசியலாக்க அவர்கள் கூச்சப்படமாட்டார்கள். ஆகையால் அவர்களைக் கவனத்துடனும், சந்தேகத்துடனுமே அணுக வேண்டும்.

 

தொடர்ந்து வெற்றியை நோக்கி அவர்கள் பயணப்பட்டு வருவதால் இந்த கோவை விபத்திலும் அவர்களால் முடிந்த அரசியலைச் செய்து பார்த்தார்கள். இது தீவிரவாதிகளின் முயற்சியாகப் பார்க்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற உடனே அவர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். இதில் காவல்துறையினரின் எந்த நடவடிக்கையும் குறை சொல்ல முடியாது. ஆனால் காவல்துறையினர் மீது அவர்கள் இன்றுவரை குறைசொல்லி வருகிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள் அனைத்திலும் செய்வார்கள் என்பதே என்னுடைய எண்ணமாக இருக்கிறது.

 

 

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.