Skip to main content

பாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

நீறுபூத்த நெருப்பாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் சூழலில், கூட்டணி நீடிக்குமா? என்பதே அரசியல் ஹாட் டாபிக்.

 

dmk



நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் முட்டல் மோதல் வெடித்தன. தி.மு.க. மீதுள்ள அதிருப்தியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் கூட்டறிக்கை மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தினர். இது, தி.மு.க.வில் கொந்தளிப்பை ஏற்படுத்த, "காங்கிரஸ் தலைமையின் அனுமதியில்லாமல் இப்படி பேச முடியாது' என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கட்சியின் சீனியர்கள் வலியுறுத்தியதையடுத்து, காங்கிரஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த சோனியா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின்.

 

dmk



இந்த நிலையில் டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட கே.எஸ்.அழகிரியிடம் தேர்தலில் நடந்தது குறித்து விவாதித்தார் சோனியாகாந்தி. இதனைத் தொடர்ந்து பேசிய அழகிரி, "தி.மு.க.வும் காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்களாக இருக்கும். நாங்கள் கொடுத்தது அறிக்கையே அல்ல. கூட்டணியில் எந்த பிரிவும் கிடையாது' என்றார். ஆனாலும் இதை தி.மு.க. தலைமை ஏற்கவில்லை. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற துடிக்கிறது. அதனை நிரூபிப்பதுபோல, "தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு பழைய நிலைக்குத் திரும்புமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்'' என தெரிவித்திருக்கிறார் கட்சியின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு.

 

dmk



கட்சியின் பொருளாளரான துரைமுருகன், "காங்கிரஸ் விலகிச்சென்றால் செல்லட்டும். அதனால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை. ஓட்டுகள் பாதிக்காது. இருந்தால் தானே பாதிக்கிறதுக்கு'' என கடுமையாகத் தாக்கினார். தி.மு.க. சீனியர்களின் இப்படிப் பட்ட கருத்துக்களால் அதிர்ச்சியடைந்துள்ளது காங்கிரஸ் மேலிடம். ஸ்டாலினின் அனுமதியுடன்தான் தி.மு.க. தலைவர்கள் அப்படிப் பேசுவதாக சோனியாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஸ்டாலினிடம் பேசும் தி.மு.க. மா.செ.க்கள், "காங்கிரசை கழட்டி விடுங்கள்' என அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றனர். இதனால், 21-ந்தேதி நடக்கும் தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரசுடனான கூட்டணி பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என அறிவாலயத் தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

 

dmk



இந்த நிலையில், கே.எஸ்.அழகிரியின் கருத்தறிய அவரை தொடர்புகொண்டபோது நமது அழைப்பை எடுக்கவில்லை. சிவகங்கை எம்.பி.யும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்திடம் நாம் பேசியபோது, "இந்த ஞானம் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கு முன் துரைமுருகனுக்கு ஏன் தோன்றவில்லை? தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கவே நாங்கள் விரும்புகிறோம்''’ என்பதோடு முடித்துக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என பலரும், "தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறலாம். தி.மு.க.வுக்கு அடிமையாக நாம் இருக்க வேண்டியதில்லை' என மிக காட்டமாக சோனியாவுக்கும் ராகுலுக்கும் தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.


இதுகுறித்து காங்கிரசின் முன்னாள் தலைவர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற நினைப்பது தி.மு.க.வின் அஜெண்டா இல்லை; அது, பா.ஜ.க.வின் அஜெண்டா. ஓரிரு மாதத்திற்கு முன்பு பா.ஜ.க. தலைமையிலிருந்து தி.மு.க. சீனியர் எம்.பி.க்கள் மூன்று பேருக்கு, "காங்கிரசை எதற்காக தூக்கிச் சுமக்கிறீர்கள்? காங்கிரசை கழட்டி விடுங்கள். பா.ஜ.க.வை கடுமையாக விமர்சிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டாம்' என்கிற தகவல்களை பாஸ் செய்தது.

பிரதமர் மோடியை சில மாதங்களுக்கு முன்பு டி.ஆர்.பாலு சந்தித்தபோதும் காங்கிரசுக்கு எதிரானவைகள் பேசப்பட்டிருக்கின்றன. அதன் எதிரொலிதான் இப்போது காங்கிரசுக்கு எதிராக மெல்ல மெல்ல வெடிக்கத் துவங்கியிருக்கிறது. தி.மு.க.வை விட்டால் எங்களுக்கு அ.தி.மு.க., தினகரனின் அ.ம.மு.க., ரஜினி, கமல் என கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன. ஆனா, தி.மு.க.வுக்கு? லோக்சபாவில் 38 இடங்களில் தி.மு.க. கூட்டணி ஜெயிக்க காங்கிரஸ்தான் முக்கிய காரணம். காங்கிரசை கழட்டிவிடுவதன் பலனை இனிவரும் தேர்தலில் தி.மு.க. உணரும்' என்கிறார் மிக காட்டமாக.


காங்கிரஸ் தலைவரின் இத்தகைய கருத்துக்கள் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் சிலரிடம் பேசியபோது, "காங்கிரசுக்கு எதிரான தி.மு.க.வின் அதிருப்திக்கு பா.ஜ.க.தான் காரணம் என சொல்வது அபத்தம். கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதில் தி.மு.க.வுக்கு நிகர் வேறு எந்த கட்சியும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறி துரோகமிழைத்தது காங்கிரஸ்தான். இதற்கு பல ஆதாரங்களை சுட்டிக்காட்ட முடியும். மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் அதிக சீட் வாங்க இப்படிப்பட்ட நாடகத்தை காங்கிரஸார் நடத்துகின்றனர். இதற்கு தி.மு.க. இடம் கொடுக்காது. தேவைப்பட்டால் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள ஸ்டாலின் தயங்கமாட்டார்'' என விவரிக்கிறார்கள்.


 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.