Skip to main content

ஒப்பந்த மனைவிகள் - கெடு முடிந்ததும் ரென்யூவல் செய்யலாம்...

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
Contract Wives


கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தியாவில் தேவதாசி முறை இருந்தது. நிலபிரபுகள், செல்வந்தர்கள், உயர் ஜாதியினர் தேவதாசி முறையில் உள்ள பெண்களை தங்களது விருப்பத்திற்கு வைத்துக்கொள்வார்கள். 

 

 

 

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்த தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று பெரும் போராட்டங்கள் நடைப்பெற்று தமிழகத்தில் உள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி அந்த தேவதாசி முறைக்கு சட்டப்படி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 
 

இந்தியாவில் தென் மாநிலங்களில் இந்த தேவதாசி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டாலும் வட மாநிலங்களில் பெயர் மாறி தேவதாசி முறை இப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு உதாரணம்தான், ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு பெண்களை மனைவிகளாக வைத்துக்கொள்வது. உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த ஒப்பந்த மனைவிகள் முறை இன்றும் நீடித்து வருகிறது. 

 

 

 

வசதியானவர்கள், உயர் ஜாதி வகுப்பினர் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் வைத்துக்கொள்ள அங்குள்ள ஏஜென்சிகள் மூலம் விண்ணப்பிக்கிறார்கள். குறைந்தபட்சம் 6 மாதம் அல்லது ஒரு வருடம் வரை பெண்கள் சம்மந்தப்பட்ட நபருக்கு மனைவியாக இருக்க வேண்டும். அப்படி செல்லும் அந்த பெண்ணுக்கு ஊதியம் மாதம் ரூபாய் 5 ஆயிரம் முதல் கொடுக்கப்படுகிறது. உணவு, தங்கும் அறை, மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
 

இதையெல்லாம் ஒப்பந்த பத்திரமாக பதிவு செய்யப்பட்டு, அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் சம்மந்தப்பட்ட நபர் வழங்குவார். ஒருவேளை காலக்கெடு முடிந்த பிறகு, அந்த பெண்ணே அவருக்கு தேவை என்றால் மீண்டும் ஒரு வருடம் காலநீடிப்பு ஒப்பந்தம் போடப்படுகிறது. இதுபோன்ற முறைகள் உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் செல்வந்தர்கள் குடும்பங்களில் இன்றும் இருந்து வருகிறது. 
 

ஒப்பந்த மனைவிகளாக போகும் பெண்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெண் அடிமைத்தனம் இல்லை. பெண்கள் சுயமாக இயங்குகிறார்கள், முன்னேறுகிறார்கள் என மத்திய அரசு சாதனை பட்டியலை வெளியிட்டுக்கொண்டிருக்க ஒழிக்கப்பட்ட தேவதாசி முறை புதிய பெயரில் ஒப்பந்தம் மனைவிகளாக வடமாநிலங்களில் நீடித்து வருகிறது.