Skip to main content

பெண்களை குறிவைத்த மன்மத மிருகம்! -சென்டிமெண்ட்டாய் பேசி வசியம் செய்தது அம்பலம்!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
ddd


 
தான் உயர்பொறுப்பில் இருக்கும் நிதி நிறுவனத்தின் மூலம், கடன் உள்ளிட்ட நிதிச் சலுகைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த ஆனந்த் சர்மா என்ற மன்மத மிருகத்தை அதிரடியாக வளைத்திருக்கிறது காவல்துறை.

 

யார் இந்த ஆனந்த் சர்மா?

 

பெண்களுக்கான விமன் எம்பவர்மென்ட் திட்டத்தின் மூலம், மகளிர் குழுக்களுக்கு சிறுதொழில் கடன்களை அள்ளி வழங்கி வந்த ஆசீர்வாத் மைக்ரோ பைனான்ஸ் என்ற நிதி திறு வனத்தின் சி.டி.ஓ. இந்தியாவில் இருபத்திமூன்று மாநிலங்களில் இருபத்தி ஐந்து லட்சம் மகளிர் குழுக்களுக்கு ஆறாயிரம் கோடிக்கும் மேல் கடனுதவி அளித் திருக்கும் நிறுவனம் தான் ஆசீர்வாத் மைக்ரோ ஃபை னான்ஸ். இது, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மறைந்த ச.வெங்கிட ரமணனின் மருமகன் எஸ்.வி.ராஜா வைத்தியநாதனை மேனேஜிங் டைரக்டராகக் கொண்ட நிறுவனமும் கூட. முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் கணவர்தான் இந்த வைத்தியநாதன். இவர் நடிகர் எஸ்.வி.சேகரின் உடன்பிறந்த சகோதரர். இப்படி செல்வாக்குள்ள புள்ளிகளின் நட்பையும் ஆதரவையும் பெற்றவர்தான், ஆனந்த்சர்மா.

  

50 வயதைக் கடந்து கொண்டிருக்கும் ஆனந்த் சர்மா மீது, இப்போது கோவை காட்டூர் காவல்நிலைய போலீஸார், 376/1 (ரேப்), 417 (சீட்டிங்), 506/1( கிரிமினல் குற்றம் புரியும் எண்ணத் துடன் சதித் திட்டம் தீட்டு தல்) உள்ளிட்ட பிரிவுகளில் எப்.ஐ.ஆர். போட்டுள்ளனர்.

 

அப்படி இவர் என்ன செய்தார் என்று காக்கிகள் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது... “"ஷெட்யூல் போட்டு விமானத்தில் பறந்தே தினம் தினம் பெண்களை சூறையாடியவுமனைசர் இவர். கணவனை இழந்த, விவாகரத்தான, அன்புக்கு ஏங்கும் வசதி படைத்த பெண்களையும், கார்ப்பரேட் யுவதிகளையும், பிசினெஸ் விமென்களையுமே இவர் குறிவைத்து வேட்டையாடி வந்தார். பெண்களை வளைப் பதற்காக, என் மனைவி சரியில்லாதவர். பல வருடங்களாக நாங்கள் உறவில் இல்லை. அவர் நோயாளி. சண்டைக்காரி. அதனால் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன்'' என்றெல்லாம் அளந்துவிட்டதோடு, ஒவ்வொரு பெண்ணிடமும், "உன் உடம்பைவிட மனசுதான் எனக்கு முக்கியம். நீ மட்டும்தான் என் உயிர். நீதான் என் தேவதை' என்றெல்லாம் சென்டிமெண்ட்டாய் உருகி உருகியே வீழ வைத் திருக்கிறார்.

 

‘மாஸ்க்குடன் வலம்வரும் இவரிடம், ‘நண்பிகள்’ பலரும் தங்கள் ஆழ்மன சோகங்களைக் கொட்டித் தீர்த்திருக் கிறார்கள். ஆறுதல் சொல்லிச் சொல்லியே வசியம் செய்வார். பிசினெஸ் மீட், பார்ட்னர்ஷிப் டீல் காரணமாக தங்கியிருப்பதாக கதைவிட்டு, நட்சத்திர விடுதிகளில் தனி சூட்கள் போட்டு, அங்கே உயர்ரக மது பார்ட்டிகளை வைப்பார். வேண்டாம் என்று மறுத்தாலும் அவர்களை விடாது கெஞ்சியும் கொஞ்சியும் பலவீனப்படுத்தி, வீழ்த்திவிடுவார். அதேபோல் அவர்களிடமிருந்து நகைகள், பணம், சொத்துக்கள் என அனைத்தையும் அவர் அபகரித்துவிடுவார்.

 


அவரிடமிருந்து பெண்களுக்கு எதிரான நூற்றுக்கணக்கான எலெக்ட்ரானிக் ஆதா ரங்களையும். சலிக்காமல் பேசிய இரவு நேர கிறக்கப் பேச்சுக்களையும், எல்லை மீறிய கொஞ்சல்களையும், வில்லங்கமான வீடியோக் களையும், ‘வாட்ஸ் அப் கிளுகிளு சாட்டுகளையும், சில விவகாரமான மெயில்களையும், கண்களைப் பிதுங்க வைக்கும் படங்களையும் கைப் பற்றியிருக்கிறோம். இவர் I.T. ACT AMENDMENT 2003-ன்படியும் சிறையிலிருக்க வேண்டியவர்''’ என்கிறார்கள் திகைப்பு மாறாமல்.

 

நான் டைவர்ஸ் ஆனவன் என்று ஆனந்த்சர்மா சொன்ன பொய்யால் அனைத் தையும் இழந்தவர் நந்திதா. (பெயர் மாற்றப் பட்டுள்ளது) அவருடைய அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட அவர், "எம்.டி.யிடம் உன்னை அம்பலப்படுத்துவேன்' என்று ஆனந்த்சர்மாவின் மெயிலுக்கு பல குற்றச்சாட்டுகளையும் அனுப்புகிறார். உடனே அவரை அழைத்தார் ஆனந்த்சர்மா. ஆசீர்வாத் அலுவலகம் சென்ற நந்திதாவின் குரல்வளையை பிடித்து நசுக்குகிறார் ஆனந்த் சர்மா.

 

அடி, உதையுடன் உயிர் தப்பி, அழுதபடியே வெளியே வந்த நந்திதா, தன் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்ற முடிவுடன், ஆசீர்வாத்தில் இருக்கும் புகார் கமிட்டியை அணுக, தலைமை மனிதவள மேம்பாட்டு ஆபீசர் பிக்ரம் மிஸ்ராவோ, "இதுக்குமுன்ன ஆனந்த்சர்மா வேலை செய்த பாரத் ஓவர்சிஸ் வங்கி, ஈகியூட்டஸ் வங்கி, ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் அவர் இருந்தபோது அவர் குற்றம் செய்ததாகச் சொல். எங்களை மாட்டி விடாதே! ஆசீர்வாத் பேரை நீ சொன்னால், நீ சி.டி.ஓ. மேல கொடுத்திருக்கும் புகாரை வச்சி, எங்க பெண்கள் மூலம் உன்னையே குற்றவாளி ஆக்கி ஜெயிலில் தள்ளுவோம். இந்த கம்பெனி யாருதுன்னு தெரியுமில் லையா?''’என்று தெனாவட்டாக மிரட்ட, போஷ் கமிட்டியின் பிரைசிடிங் ஆபீசர் லட்சுமியோ, ‘‘"சந்தோசமாத்தானே போனீங்க. நான்தான் ‘சி.சி.டி.வி. புட்டேஜ்ல பார்த்தேனே, ஆனந்த் அடிச்சா. கத்த வேண்டியது தான?''’என்று கிண்டலாகச் சிரித்தாராம்.

 

இதைக்கேட்டு டென்ஷன் ஆன நந்திதா, "உங்க குரல்வளையை யாராவது நெருக்கிப் பிடித்தால் கத்த முடியுமா? நைட்டு பத்துமணிக்கு அழுதுவடிஞ்ச மூஞ்சியோட நான் போனது உனக்கு சந்தோஷமாவா தெரிஞ்சது''’என்று பதில் கொடுக்க, ‘"இல்ல... இருட்ல சரியாத் தெரியல'’என்று சமாளித்திருக்கிறார்.

 

இந்த விவகாரத்தைப் பற்றி ஆசீர்வாத் எம்.டி.ராஜா வைத்தியநாதனை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘"ஆனந்த்சர்மா இங்கு வேலை செய்ததும், பணிக்காலத்தில் பல தவறுகள் செய்ததும் என் கவனத்துக்கு வந்தது. போஷ் கமிட்டி யில் நடந்ததும், ஆனந்த்சர்மா நந்திதா வின் கழுத்தை நெரித்த விசயமும் என் கவனத் துக்கு வரவில்லை. இதுபற்றி விசாரிக் கிறேன். பொறுப்பற்ற அந்த கமிட்டி நபர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்''’ என்றார் அழுத்தமாய்.

 

மேலும், ஆனந்த் சர்மா மீது பணியில் இருந்துகொண்டே தவறான விஷயங்களில் ஈடுபட்டதோடு, கம்பெனி டேட்டாக்களை வெளிப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை ஜூன் நாலாம் தேதியே வேலை நீக்கம் செய்துவிட்டதாகவும் ராஜா வைத்தியநாதன் கூறினார்.

 

ஆபாச அரக்கன் ஆனந்த் சர்மா, இப்போது தேடப் படும் குற்றவாளி. அவரிடம் விசாரணை தீவிரமாக நடத்தப்படும்போது, அதிர்ச்சித் தகவல்கள் மேலும் வெளிவரலாம். 

 

 

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

நாமக்கல் நிதி நிறுவனத்தில் மோசடி; பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் அளிக்கலாம்  

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

Investors victimized by Namakkal Finance Company fraud can file a complaint

 

நாமக்கல் அருகே, சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.    

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கச்சேரி சாலை, அருளகம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (79). இவருடைய மனைவி செல்லம்மை  (75). இவர்களுடைய மகன் அருணாச்சலம் (45), மருமகள் சொர்ணமாலா (38), மகள்கள் காந்திமதி (54), வள்ளியம்மை (50) ஆகியோர், வீட்டிலேயே ‘சோமசுந்தரம் செட்டியார்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். 

 

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பு மடங்காகப் பணத்தைத் திருப்பி வழங்குவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டனர். இதை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு குறித்த காலத்தில் அசல்,  வட்டித்தொகை திருப்பித் தரப்படவில்லை. இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த சரவணன் மனைவி துர்காதேவி (43) நாமக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதேபோல மேலும் 11 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.     

 

அதன்பேரில் சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, ‘இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை நேரில் புகார் அளிக்கலாம். புகார் அளிக்க வேண்டிய அலைப்பேசி எண்: 9865570896’ எனப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.