Skip to main content

2016 தேர்தலுக்குப்பின் அதிமுக -134, திமுக -98... 2018ல்??? எம்.எல்.ஏக்கள் போன பாதை...

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
tamilnadu assembly


 

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது செல்லும் என இன்று காலை தீர்ப்பு வந்துள்ளது. இதனால் அதிமுக எம்.எல்.ஏக்களின் பலம் குறைந்துள்ளது. 2016 தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தற்போதைய எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வரையிலான மாற்றங்கள் வரை முழு விவரங்கள்...

 

2016ம் ஆண்டு 232 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக வெற்றி பெற்றது. அந்தத்தேர்தலில் அதிமுக கூட்டணி 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது. இதில் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய மூவரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். வேறெந்த கட்சியும் வெற்றிபெறவில்லை. தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதாகக் கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது, திருப்பரங்குன்றத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. சீனிவேல் பதவி ஏற்கும் முன்பே இறந்தார். அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134ல் இருந்து 133 ஆக குறைந்தது. மூன்று காலியிடங்கள் இருந்தன.

 

காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட ஆறுமாத இடைவெளியில் இடைத்தேர்தல் வைக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. இதனால் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது.

 

அதன்பின் 2016 டிசம்பர் 5 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 135 ஆக குறைந்தது. அதன்பின் 2017 டிசம்பரில் ஆர்.கே. நகர் தேர்தல் நடந்தது. இதில் அறுதிப்பெரும்பான்மையில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இதனால் அதிமுக கூட்டணி 135, திமுக கூட்டணி 98, சுயேட்சை 1 என எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அமைந்தது. அதன்பின் ஓபிஎஸ் பதவியில் இருந்து இறக்கப்பட்டது. தர்மயுத்தம், சசிகலா சிறை, தர்மயுத்தம் முடிந்து, ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்தது, அதன்பின் டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தது, தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என புதுக்கட்சி தொடங்கியது என பல அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன.

 

kalaignar jayalalithaa


 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் புகார் கொடுத்தனர். இதையடுத்து புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார். உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு வந்து, விசாரணை நடைபெற்றுகொண்டிருந்தது, முதலில் விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அவ்வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் சென்றது. மூன்றாவது நீதிபதி ஆகஸ்ட் 31 வரை இரு தரப்பினரையும் விசாரித்துவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார்.

 

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான ஏ.கே.போஸ் காலமானார். அதைத்தொடர்ந்து திமுக தலைவர் கலைஞர் ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியானது. அப்போதுவரை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134, திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 97, சுயேட்சை 1, காலியிடங்கள் 2 என ஆனது.

 

இந்நிலையில்தான் தற்போது 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என மூன்றாவது நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தற்போது அதிமுக 116, திமுக 97, சுயேட்சை 1(தினகரன்), என்ற நிலையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையாகவும், காலியிடங்கள் 20 ஆகவும் உள்ளது. இதற்கடுத்து 18 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம், அல்லது மறுதேர்தலை சந்திக்கலாம். திமுக பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கலாம். எதுஎப்படியானாலும் இதற்குப் பிறகான அரசியல் மாற்றங்களை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.