Skip to main content

இடைத்தேர்தல் ஆட்சிக்கு ஆபத்தா? காய் நகர்த்தும் எடப்பாடி!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

ம்..பி. தேர்தலை விட எம்.எல்.ஏ. தொகுதிக்கான இடைத்தேர்தல் மீதுதான் அதிக கவனம் செலுத்துகிறார் எடப்பாடி. சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலமின்றி மைனாரிட்டி அரசை நடத்தி வரும் எடப்பாடிக்கு இடைத்தேர்தலில் ஏற்படும் வெற்றி - தோல்விகள் எந்த வகையில் சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து சட்டமன்றத்தில் அவருக்கிருக்கும் வலிமையின் அடிப்படையில் ஆராய முடியும்.

eps-ttv


தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 234. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை. சட்டமன்றத்தில் தற்போது அ.தி.மு.க. - 114, தி.மு.க. - 88, காங்கிரஸ் - 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, சபாநாயகர் - 1, சுயேட்சை (தினகரன்) - 1 என 213 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மறைவு என 21 இடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்த நிலையில், காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டிருப்பதால் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் இல்லை என தெரிவிக்கிறார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு. ஆனால், வழக்குகள் இருந்தாலும் தேர்தலை நடத்த தடை எதுவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படவில்லை என சொல்லி, குறிப்பிட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வலியுறுத்தி சத்யப்பிரதா சாகுவிடம் புகார் மனு கொடுத்துள்ளது தி.மு.க. இதில் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை அணுகவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.

eps-ttvதேர்தல் ஆணையத்தின் முடிவுபடி 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடப்பதாக வைத்துக்கொண்டால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் பலம் 231 ஆக இருக்கும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்குத் தேவை. தற்போது அவரிடம் இருப்பது 114 எம்.எல்.ஏ.க்கள்தான்.

இந்த 114 எம்.எல்.ஏ.க்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கும் தோழமை கட்சி எம்.எல்.ஏ.க்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பினை எடப்பாடி அரசு கோரினாலோ அல்லது எடப்பாடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டு வந்தாலோ குறிப்பிட்ட அந்த மூவரும் எடப்பாடியை ஆதரித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், தங்களின் பதவி பறிபோனாலும் பரவாயில்லை என்று நினைத்தால் எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்கவும் முடியும்.

அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற எம்.எல்.ஏ.க்களில் தினகரன் ஆதரவு பெற்ற 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். தினகரனின் அறிவுறுத்தலின்படி, பதவி பறிபோனாலும் பரவாயில்லை என எடப்பாடியை எதிர்த்து வாக்களிக்க முடியும். ஏற்கனவே பற்றாக்குறையாக இருக்கும் 3 எம்.எல்.ஏ.க்களோடு இந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால் 9 எம்.எல்.ஏ.க்கள் புதிதாக எடப்பாடிக்கு தேவை. இடைத்தேர்தலில் 9 இடங்களை கைப்பற்றினால் எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் இல்லை. அதேசமயம், பதவி பறிப்புக்குப் பயந்து இந்த 6 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடியை ஆதரிப்பதாக இருந்தால் 3 இடங்களை மட்டும் கைப்பற்றினாலே போதும். ஆட்சிக்கு ஆபத்தில்லை!

இது ஒருபுறமிருக்க, இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தற்போது தி.மு.க. கூட்டணியில் 97 எம்.எல். ஏ.க்கள் இருக்கிறார்கள் (தி.மு.க. - 88 + காங்கிரஸ் - 8 + லீக் - 1). பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களில் 97 எம்.எல். ஏ.க்களை மட்டுமே தி.மு.க. வைத்திருப்ப தால் மேலும் 20 இடங்கள் தேவைப் படுகிறது. ஆனால், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் 18 தொகுதிகளையும் தி.மு.க. கைப் பற்றுவதாக வைத்துக்கொண் டால் தி.மு.க. கூட்டணி 115 எம்.எல்.ஏ.க் களுடன் வலி மையாக இருக்கும். இது, எடப் பாடியிட முள்ள 114 எம்.எல்.ஏ.க்களை விட 1 இடம் அதிகம். எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான சூழல் உருவாகிவிடும்.

அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ.வான தினகரனுக்கு மவுசு கூடும். அவர் தி.மு.க.வை ஆதரித்தால் எடப்பாடி ஆட்சி நிச்சயம் கவிழும். அதற்கு மாறாக, அ.தி.மு.க.வை அவர் ஆதரித்தால் 115 என்கிற எண்ணிக்கையில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சம பலத்துடன் இருக்கும். அப்போது தான், அ.தி.மு.க. உறுப்பினராக இருக்கும் சபாநாயகர் தனபாலுக்கு வாக்குரிமை கிடைக்கும். அவர் மூலம் கட்சியைக் காப்பாற்றுவார் எடப்பாடி.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகிற நிலையில், அப்போது 21 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு ஏற்படுகிறது. அதேசமயம், மேலே குறிப்பிடப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் எந்த பிரச்சனையும் செய்யாத நிலையில் 4 தொகுதிகளை எடப் பாடி ஜெயித்தாலே போது மானது. அந்த 6 எம்.எல்.ஏ.க் களும் எடப்பாடிக்கு எதிராக திரும்பினால் மட்டுமே 10 தொகுதி களை கைப்பற்ற வேண் டிய நெருக்கடி எடப் பாடிக்கு உருவாகும். எல்லாக் கணக்குகளை யும் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.