கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்முதல் சோடா சேலஞ்ச் வரை அவ்வப்போது ஒரு சேலஞ்ச் வந்துகொண்டிருக்கிறது.

Advertisment

bottle cap challenge

தற்போதைய ட்ரெண்ட் ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’. ஒருவர் பாட்டிலைப் பிடித்திருக்க ‘கிக்’ மூலம் அந்த மூடியைக் கழற்ற வேண்டும் இதுதான் சேலஞ்ச். ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலரும் இதை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

Advertisment

இந்த சேலஞ்ச் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. சிலர் இதை சரியாக செய்கின்றனர். ஆனால் பலர் இதை முயற்சித்து கீழே விழுவது, பாட்டிலை உடைப்பது, எதிரே இருப்பவரை தவறுதலாக எத்திவிடுவது போன்றும் நடக்கிறது. ஒருபுறம் இந்த சேலஞ்ச் ஆச்சர்யத்தை ஏற்படுத்த மற்றொருபுறம் இது சிரிப்பையும், பரிதாபத்தையும் பார்ப்பவரின் மத்தியில் உண்டாக்குகிறது.

Advertisment