Skip to main content

பாஜக  ‘செண்டம்’ போட்ட மாநிலங்கள்...

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கிறது பாஜக, நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராகிறார். 
 

bjp modi

 

 

பாஜக மட்டும் இந்தியா முழுவதும் 437 தொகுதிகளில் போட்டியிட்டு, 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் 22 மாநிலங்களில் பாஜக எந்த மாநில கட்சிகளிடனும் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று போட்டியிட்டுள்ளது. 
 

மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது பாஜக. கேரளாவில் தனித்து போட்டியிட்டு நல்ல வாக்கு சதவீத்தை பெற்றிருக்கிறது பாஜக. 
 

கடந்த முறை மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகள் மட்டுமே வெற்றிபெற்றிருந்த பாஜக தற்போது 18 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. 2014ல் ஒடிசாவில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜக இந்தமுறை 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 
 

 

 

இந்நிலையில் குஜராத், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், திரிபுரா, டாமன் மற்றும் டையூ, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது. 
 

குஜராத் 26/26, ஹரியானா 10/10, உத்தரகாண்ட் 5/5, ஹிமாச்சல் பிரதேசம் 4/4, அருணாச்சல பிரதேசம் 2/2, திரிபுரா 2/2, டாமன் & டையூ 1/1, சண்டிகர் 1/1 என்று வெற்றிபெற்றுள்ளது.
 

இது மட்டுமில்லாமல் ஒரு சில மாநிலங்களில் ஒன்று, இரண்டு தொகுதிகளில் மட்டுமே தோல்வியைடைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒரு போட்டியிட்ட ஒரு தொகுதிகளிலும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.