Skip to main content

தன்னை பற்றி வதந்தி பரப்பியது பாஜகவா? அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்!  

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
amit shahகரோனா பிடியில் இந்தியா அல்லோகல்லோகப்பட்டுள்ள சூழலில், மத்திய அரசின் மிக முக்கியத்துறையான உள்துறையின் அமைச்சர் அமித்ஷாவின் தலை வெளியே தெரியாமல் இருந்தது. அவர் எங்கே? என்கிற கேள்வி தேசம் முழுவதும் எதிரொலித்த நிலையில், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்திய கலந்துரையாடலில் காட்சித் தந்தார் அமித்ஷா. 
 

அதை கண்டு பாஜக தலைவர்கள் மட்டுமல்ல; இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. இது குறித்து டெல்லியோடு தொடர்புடைய பாஜக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, தேசிய குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தே மோடிக்கும் அமித்ஷாவுக்குமிடையே பல விஷயங்களில் கருத்து மோதல்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் அது அதிகரிக்கவும் செய்தது. இதனால்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவுக்கு வந்தபோதுகூட அமித்ஷாவின் பங்களிப்பு அதில் பெரிதாக எதுவும் இல்லை. ஒதுங்கியே இருந்தார் அமித்ஷா. 


இந்த நிலையில்தான், கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் பரவியது. இந்த விவகாரத்தில் அனைத்து துறைகளும் கடினமாக உழைத்தாலும், உள்துறை, சுகாதார துறை, நிதித்துறை ஆகிய அமைச்சகத்தின் பணிகள்தான் அதிகம். அதனாலேயே, இந்த மூன்று துறைகளுடன் தினமும் ஆலோசித்தபடி இருந்தார் மோடி. ஆனால், மூன்று துறைகளில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் ஆகியோரிடம் விவாதித்த அளவுக்கு அமித்ஷாவிடம் மோடி விவாதித்ததாக தெரியவில்லை. அது குறித்த பதிவுகளும் இல்லை. 

இன்னும் சொல்லப்போனால், மோடியுடனான கலந்துரையாடல் மற்றும் விவாதங்களின்போது அமித்ஷா கலந்துகொண்டதும் இல்லை. தன்னை மேலிடம் புறக்கணிப்பதாக கருதினார் அமித்ஷா. அதனால், வீட்டிலேயே இருந்தார். அது குறித்து கேள்வி எழுந்தபோது, உடல் நலக்குறைவால் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணிகளையும் கரோனா தடுப்பு பணிகளில் உள்துறையின் நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார் என பாஜக தரப்பிலிருந்தே தெரிவிக்கப்பட்டது.  

 


இதனால் சில நாட்கள் அமித்ஷா பற்றிய பேச்சு இல்லாமலிருந்த நிலையில், திடீரென அவரது உடல்நலம் குறித்து தேவையற்ற முறையில் வதந்திப்பரவ, அது குறித்து விளக்கமளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அமித்ஷா. அந்த வதந்திகளை பாஜகவிலுள்ள சிலர்தான் பரப்பியிருக்க கூடும் என்று அமித்ஷாவுக்கு சந்தேகம் உண்டு. 

 

 

 


இந்த நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ்.ஸிலுள்ள அமித்ஷாவின் நண்பர்கள் கொடுத்த அட்வைஸ்படி, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தன்னை எந்த நோயும் தாக்கவில்லை என்றும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்ததுடன், மாநில முதல்வர்களுடன் மோடி நடத்திய ஆலோசனையிலும் கலந்துகொண்டார். இதுதான், வீட்டில் முடங்கியிருந்த அமித்ஷாவை வெளியே கொண்டு வந்ததன் பின்னணி!  என விவரிக்கிறார்கள் பாஜகவினர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'தமிழகம் உத்தரபிரதேசத்தை விட கீழே உள்ளது'- வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
'Tamilnadu is below Uttar Pradesh'- Vanathi Srinivasan reviews

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் பலரும் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த நிர்வாகியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசுகையில், ''சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு என்பது திரும்பத் திரும்ப குறிப்பாக நடுத்தர ஏழை மக்கள் மீது மிகப்பெரிய சுமையை தமிழகத்தை ஆட்சி செய்யும்  திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வால் மின்சாரத் துறைக்கு 6000 கோடி ரூபாய் கூடுதல் வாரியாக கிடைக்கும் என சொல்கிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் குறிப்பாக போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து சேர்க்கின்ற போக்குவரத்து கட்டணம் என்பது கடுமையாக உயரப்போகிறது. இவை மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற சுமை போதாதென்று இப்போது இந்த மின் கட்டண உயர்வால் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுடைய விளையும் உயரப்போகிறது.

பல்வேறு விதங்களில் மக்களை பாதிக்கக்கூடிய இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. நிதிச் சுமை என சொல்லும் தமிழக அரசு, ஜிஎஸ்டி வரிவசூலில் உத்தரபிரதேசத்தை விட கீழே உள்ளது. தமிழகத்தின் நிதி நிலைமை உயர்த்த சர்வதேச அளவில் இருக்கக்கூடிய நிதி விற்பனர்களை எல்லாம் வைத்து கமிட்டி போடுகிறோம் என்று முதல் பட்ஜெட்டில் அறிவித்தார்கள். இதுவரைக்கும் சர்வதேச முக்கியஸ்தர்கள், விற்பனர்கள் என்ன இந்த அரசுக்கு வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழக அரசு தான் இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கி இருக்கின்ற அரசு'' என்றார்.

Next Story

நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Nayanar Nagendran appeared before the CBCID investigation

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏபரல் மாதம் 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைக்கு பாஜகவின் தமிழக சட்டமன்ற குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (16.07.2024)) காலை ஆஜரானார். இதனைத் தொடர்ந்து அவரிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.