Skip to main content

அதிமுகவை அலறவிட்ட அப்பாவு...அதிர்ச்சியில் அதிமுக...ஆட்சியை இழக்குமா?

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்க கட்டத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான இழுபறி நிலை நீடித்த சமயத்திலேயே பிரதமர் மோடி ஆளுங்கட்சி அ.தி.மு.க.வுக்கு காலை 11 மணிக்கே வாழ்த்துச் செய்தி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பல பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டது. அ.தி.மு.க.வின் முன்னணி நிலவரம் அதிகரித்து, ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மைக்குரிய தொகுதிகளுடன் வென்றது.

 

dmk



குறிப்பாக ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரைக்கும் இடையில் மிகப்பெரிய இழுபறி நீடித்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளுக்கும் அப்பாவுக்கும் வாக்குவாதம் நடைபெறும் அளவுக்கு சென்றது. வாக்கு எண்ணிக்கையில் 19, 20, 21 ஆவது சுற்றுகளில் பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளின் கணக்கிற்கு தேர்தல் அதிகாரியின் கையெழுத்தே இல்லை. இந்தச் சுற்றுகளில் தனக்குச் சேரவேண்டிய வாக்குகளில் மோசடி நடைபெற்றதாக அப்பாவு கூறினார். அப்பாவுவின் கோரிக்கையை அவர்கள் கேட்கவே மறுத்தார்கள். 1508 தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் 300 வாக்குகளை நிராகரித்தார்கள். அதுதவிர, 203 வாக்குகளை எண்ணத் தகுதியற்றவை என்று பிரிக்கவே மறுத்தார்கள். இந்நிலையில்தான் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
 

admk



நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் அங்கீகார கையெழுத்துடன் இருந்ததால் 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கையெழுத்து செல்லும் என்று ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், தேர்தல் அதிகாரிகளுடன் நியாயத்துக்காக போராடிய அப்பாவு துணை ராணுவ வீரர்களால் வாக்கு எண்ணும் இடத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.
 

dmk



தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். ஆண்டுக்கணக்கில் நீடித்த அந்த வழக்கு விசாரணை முடிவில், ராதாபுரம் வாக்கு எண்ணிக்கையில் எண்ணாமல் தவிர்த்த 203 வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களும் மறுபடியும் எண்ணப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை சார்பில் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவசரஅவசரமாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, அக்டோபர் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 11.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ள அறையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. உயர்நீதி மன்ற பதிவாளர் ஜெனரலால் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட, ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய்சரவணன் தலைமையில், 26 அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த அப்பாவு நம்மிடம், "தி.மு.க.வின் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. கடைசி 3 சுற்று வாக்குகளில் முடிவில் 1500 வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்தேன். அதுபோல எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் தி.மு.க.வுக்கு 863 வாக்குகளும், அ.தி.மு.க.வுக்கு 200 வாக்குகளும் மட்டுமே கிடைத்தது. செல்லாது என்று எண்ண மறுத்த 203 தபால் வாக்குகளிலும் இதே அடிப்படையில்தான் வாக்குகள் பதிவாகி இருக்கும் என்பதால்தான் அதை எண்ண மறுத்தார்கள். எனவே, 49 வாக்குகள் வித்தியாசம் என்பதைத் தாண்டி, கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்


மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில் அ.தி.மு.க. இன்பதுரை, தி.மு.க. அப்பாவு ஆகியோருடன் அவர்களுக்கான வழக்கறிஞரையும் அனுமதித்தது உயர்நீதிமன்றம். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்ததை அறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திர பட் அடங்கிய பெஞ்ச், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது. இன்பதுரை தரப்பில் இடைக்கால நிம்மதி ஏற்பட்டாலும், அப்பாவு தரப்பில், கடைசியாக சிரிக்கப் போவது நாங்கள்தான் என்ற நம்பிக்கை வெளிப்பட்டது. யாருக்கு லீட் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியாத நிலையில், இந்த மறுவாக்கு எண்ணிக்கை முதல்வர் எடப்பாடி தொடங்கி, அ.தி.மு.க.வின் பல மட்டங்களிலும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

2016ல் மத்திய பா.ஜ.க. அரசின் சிக்னலில் தான் அ.தி.மு.க. லீட் காட்டியது என்ற விமர்சனம் அப்போதே கிளம்பிய நிலையில், மறுவாக்கு எண்ணிக்கையைத் தவிர்க்கவும், முடிவுகளை வெளியிடாதபடி இருக்கவும் அ.தி.மு.க. மேற்கொண்ட சட்டரீதியான நகர்வுகள் அதன் அச்சத்தை வெளிப்படுத்தியது. தசரா விடுமுறைக்குப் பிறகு ராதாபுரம் தேர்தல் குறித்த பரபரப்பு மீண்டும் அதிகரிக்கும். அதுவரை, ஆளுந்தரப்பில் திக்..திக்.. மனநிலைதான்.

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.