தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் யூனியனில் வருகிற புன்னையாபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமமான சிங்கிலிபட்டி, சுமார் ஆறாயிரம் ஜனத்தொகையைக் கொண்டது.

2,470 வாக்காளர்களைக் கொண்ட சிங்கிலிபட்டி, அடிப்படையில் வேளாண் சம்பந்தப்பட்ட அடித் தட்டு மக்களைக் கொண்டது. 900 குடும்ப ரேசன் கார்டு களை உள்ளடக்கிய அந்தக் கிராம மக்கள், தங்களுக்கான ரேசன் பொருட்களை காலையிலேயே வாங்கி விட்டு, பிழைப்பின் பொருட்டு விவசாய வேலைக்குச் செல்வதிலேயே கண்ணாய் இருப்பர். மிகப்பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வருகின்ற அந்த ரேசன் கடையின் கண்டிசனோ கேள்வியாய் இருக்கிறது என்கிறார்கள் கிராமத்தினர்.

rr

Advertisment

நாம் அந்தக் கடையைப் பார்த்ததும் ஹைவோல்ட்டேஜ் அதிர்ச்சி. கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்த நிலை. கடையின் உள்பக்கமுள்ள மேற் கூரையின் கான்கிரீட் சென்ட்ரிங் விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து போய் உள்ளிருக்கும் கம்பிகள் துருத்திக் கொண்டிருப்பதும், பிடிமானம் அற்றுப்போய் அச்சுறுத்தும் வகையில் இப்பவோ, எப்பவோ எனப் பெயர்ந்து விழுகிற நிலை. வருடம் தோறும் பெய்கிற அடைமழை காரண மாக கட்டடச் சுவர்களில் மழைநீர் இறங்கி ஈரமாகி, சுவர்களும் விரிசல் கண்டுள்ளன.

ee

மிகமோசமான கண்டிசனிலிருக்கிற இந்தக் கட்டிடத்தில்தான் ரேசன் மூட்டைகளைப் பாது காக்கிறார்கள். இந்தக் கட்டடத்தில்தான் ரேசன் கடைப் பணியாளர்கள் காலை முதல் அந்தி வரை பணியிலிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போதே அச்சமூட்டுவதாக உள்ளது.

"இந்தச் சூழலில் தான் எங்க கிராம மக்கள், ரேசன் பொருட்களை பீதியோடயும், பயத்தோடயும் வாங்கிட்டுப் போறோம்யா. கடைய மாத்துங்க... இல்ல, கட்டடத்தப் புதுப்பிச்சிட்டு நடத்துங்கன்னு ஊராட்சியிலயும் அதிகாரிங்ககிட்ட யும் வருஷக்கணக்கா சொல்லிட்டு வர்றோம். நடக்கலைய்யா" என்கிறார் விவசாயியும், தி.மு.க.வின் கி.க.செ.வுமான சமுத்திரக்கனி. மேலும், "எங்களோட தொடர் புகாரால தாசில்தார் ஆதிநாராயணனும், பொறியாளரும் வந்து கட்டடத்தப் பாத்து, ஏற்பாடு பண்றோம்னு சொல்லிட்டுப் போயி ஆறு மாசமாச்சு, ஒரு நடவடிக்கையும் இல்ல. ஊராட்சியில கேட்டா, மாவட்டப் பஞ்சாயத்தில் ஃபண்ட் ஒதுக்கல. 5 லட்சம் ரூபாய் ஒதுக்குறாக. அது எந்த மூலைக்கு?. மக்களுக்கும் ரேசன் கடைப் eeeபணியாளர்களுக்கும் ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா யார் பொறுப்பேற்பது?". என்றார் பதற்றமான குரலில்.

இந்த கிராமத்தின் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரான தி.மு.க.வின் கனிமொழியிடம் ரேசன்கடையின் நிலை குறித்து கேட்டதில், "மத்திய, மாநில மானியத் திட்டத்தின் கீழ் மாவட்ட பஞ்சாயத்திற்கு ரூ.5.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததில், மாவட்டத் தலைவி ஒவ்வொரு மாவட்ட கவுன்சிலர்களுக்கும் திட்டப்பணிகளுக்கு 31 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்குனாக. எனக்கு 60 கிராமம். ரேசன்கடை நிலைமையைச் சொல்லி தனியா 12 லட்சம் ஒதுக்குங்கன்னு கேட்டதுக்கு மறுத்திட்டாங்க. ஆனா அவுக மட்டும் அவுக வார்டுக்குத் தேவையானத ஒதுக்கிக்கிட்டாங்க. அலாட் பண்ண ஃபண்ட்டee வச்சு எந்தப் பணியைச் செய்ய முடியும்?'' என்றார் விரக்தியோடு. இதுகுறித்து நாம் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவியான தமிழ்ச்செல்வியின் கருத்தறியும் பொருட்டு அவரை பலமுறை தொடர்பு கொண்டபோதும், நமது அழைப்பைத் துண்டித்தார்.

நெல்லை சாப்டர் உயர்நிலைப் பள்ளி யின் கழிப்பறைச் சுவர் பெயர்ந்து விழுந்து மாணவர்கள் பலியானபோதே, மக்கள் கூடுகிற மற்றும் பள்ளிக்கூடக் கட்டடங்களின் தரம் பற்றி மாவட்ட கலெக்டர்கள், அதிகாரி கள் ஆய்வு செய்ய வேண்டும். என்று அறிவுறுத்தியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவரது அறிவுரையைச் செயல் படுத்த யாருக்கும் அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை.

செய்தி மற்றும் படங்கள்: ப.இராம்குமார்