அரியானாவில் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க களத்தில் ஐந்துமுனைப் போட்டி இருந்தாலும், காங்கிரஸ் -பா.ஜ.க. என இருமுனைப் போட்டியாக கூரடைந்துள்ளது.
வினேஷ் போகத் போன்ற வி.ஐ.பி. வேட்பாளர்கள் போட்டி யிடும் ஜூலானா தொகுதியில் பிரச் சாரம் அனல் பறக்கிறது. ஒலிம்பிக்கில் கோட்டைவிட்ட வெற்றியை தேர்த லில் உறுதிசெய்யும் வேகத்துடன் வினேஷ் சூறாவளியாய்ச் சுழன்றுவர, அவருக்கு எதிராக அரியானா பா.ஜ.க. வின் துணைத் தலைவரும், முன்னாள் கமர்சியல் பைலட்டுமான யோகேஷ் பைராகியை நிறுத்தியிருக்கிறது தாமரைக் கட்சி. ஆம் ஆத்மியும் தன் பங்குக்கு, இந்தியாவின் முதல் தொழில்முறை (WWE) மல்யுத்த வீராங்கனையான கவிதா தலாலை நிறுத்தியிருக்கிறது.
காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்ட ணிக்கு களம் அமைந்த நிலையில், இரு கட்சியும் சீட்டுப் பகிர்வில் கூட் டணியைக் கோட்டைவிட்டதை உற் சாகமாக ரசித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரியானாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்திலொரு பங்கு தலித்துகள் எனில், நாலிலொரு பங்கி னர் ஜாட்டுகள். இந்த இரு சமூகத்தின ரின் பெரும்பான்மை ஆதரவை சம்பா திக்கும் கட்சிக்கு வெற்றி நிச்சயம். இதில் ஜாட்டுகளின் தரப்பை பிரதி நிதித்துவப்படுத்தும் பூபேந்தர் சிங் ஹூடா ஒரு கோஷ்டி என்றால், தலித் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் செல்ஜா குமாரி இன்னொரு கோஷ்டி. இதுபோகவும் அரியானா காங்கிர ஸில் பல கோஷ்டிகள் உண்டு.
ஹூடா கோஷ்டியும், செல்ஜா குமாரி கோஷ்டியும் தங்கள் ஆதர வாளர்களுக்காக பல தொகுதிகளைக் கேட்டு பட்டியல்களை அளித்திருந்த நிலையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 60-க்கும் மேலான தொகுதிகளைப் பெற்று ஹூடா மகிழ்ச்சியிலிருக்கிறார். மாறாக 30-க்கும் குறைவான தொகுதிகளைப் பெற்று வருத்தத்திலிருக்கிறார் குமாரி. போதாதற்கு, ஹூடா ஆதரவாளர் ஒருவர் வேட்புமனுத் தாக்கலின்போது குமாரியை ஜாதியரீதியாக பேசியது சிக்கலாக மாறியிருக்கிறது.
செல்ஜா குமாரியை தங்கள் அணிப் பக்கம் இழுத்து விடலாம், அல்லது அதைப் பற்றித் திரும்பத் திரும்ப பேசுவதன் மூலம் அவரை மூட் அவுட்டாக்கிவிடலாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹரியானா முதல்வர் சைனி உட்பட பலரும் காங்கிரஸை விமர்சித்து, சைனிக்கு ஆதரவாகப் பேசிப்பார்த்தார்கள். ஆனால் பா.ஜ.க. பருப்பு செல்ஜா குமாரியிடம் வேகவில்லை.
பா.ஜ.க.வின் இலக்கு இரண்டுதான், ஒன்று தனியே பெரும்பான்மையை வென்றுவிடவேண்டும். இல்லை யெனில், காங்கிரஸை தனித்துப் பெரும்பான்மை பெற்றுவிட அனுமதித்துவிடக்கூடாது. அப்படியாகும் பட்சத்தில் என்ன விலை கொடுத்தாவது சுயேட்சைகள், பிற கட்சிகளை வளைத்து ஆட்சியமைத்துவிடலாம் எனத் திட்டமிட்டுச் செயலாற்றிவருகிறது.
இதனை முறியடிக்க காங்கிரஸின் பக்கம் என்ன வியூகம் இருக்கிறது?
இருமுறை விவசாயிகள் போராட்டத்தின் போது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள், விவசாயிகளை காங்கிரஸ் பக்கம் திருப்பியிருக் கிறது.
ராணுவ சேவைக்கு விருப்பமுடன் பங்கு பெறும் மாநிலங்கள் பஞ்சாப்பும், ஹரியானா வும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டத்துக்குப் பதில் பழைய முறையிலே வீரர்களைத் தேர்ந்தெடுப்போம் எனக் கூறி, பா.ஜ.க.வை நெருக்கடிக்குள் தள்ளிவருகிறது.
களத்தில் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி களை விமர்சிக்கும் பா.ஜ.க., தனது தேர்தல் அறிக்கையில் கிட்டத்தட்ட அதேபோன்ற திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்திருக்கிறது. இந்த இரட்டைத் தன்மையை வாக்காளர்கள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பெரும் பான்மை ஜாட்டுகள் காங்கிரஸ், ஆம் ஆத்மி பக்கம் திரும்பியதை மனதில்வைத்து, அவர்களை தங்கள் பக்கம் திருப்ப பா.ஜ.க. தீயாய் வேலை செய்துவருகிறது.
வழக்கமாக, சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் களில் சம்பந்தப்பட்ட மாநிலத் துக்கு பல முறை பறக்கும் மோடி, இந்த முறை காஷ்மீருக்கோ, அரியானாவுக்கோ கிட்டத்தட்ட பயணிக்கவேயில்லை. இது கட்சியினரின் சுருதியைக் குறைத்திருக்கிறது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வராததையடுத்து, இந்தியா கூட்டணியே முறிந்தது என்ற தொனியில் பா.ஜ.க. பிரச்சாரத்தில் முழங்குகிறது. ஆம் ஆத்மியும் தனக்கு விரல்போனாலும் பரவாயில்லை. கேட்ட சீட்டுகளைத் தராத காங்கிரஸின் கையே போகவேண்டுமென்ற குறிக்கோளுடன் 90 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
மக்களவைத் தேர்தலின்போது போராட் டத்தில் நசுக்கப்பட்ட, விவசாயிகளின் எதிர்ப் பைக் குறைக்க மனோகர் லால் கட்டாரைத் தூக்கிவிட்டு நவ்னீப் சிங் சைனியை முதல்வராக் கியது பா.ஜ.க. சைனி, கட்டாரின் இடத்தை நிறைவுசெய்யவில்லை. அதைத்தான் மக்கள வைத் தேர்தலில் பறிபோன 5 மக்களவைத் தொகுதிகள் உணர்த்தின. காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்ட வினேஷ் போகத்தை, பிரிஜ் பூஷன் சிங்கை வைத்து விமர்சிப்பதன் மூலம் சமன்செய்ய பா.ஜ.க. நினைக்கிறது. கூடுதலாக, தேடித் தேடி ஜாட் பிரபலங்களை வேட்பாள ராக்கி நாங்கள் ஜாட் சமூகத்துக்கு எதிரானவர் களல்ல என காட்ட நினைக்கிறது பா.ஜ.க.
களத்தில் பா.ஜ.க. மல்லுக்கட்டவேண்டிய இன்னுமிரு எதிரிகள், விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும். பத்தாண்டுகள் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையும் காங்கிரஸுக்கு வலுக்கூட்டுகிறது.
நாளுக்கு நாள் பிரச்சாரமும் வியூகமும் மாறும் தேர்தல் களத்தில் தற்போதைக்கு காங்கிரஸின் கை ஓங்கியிருக்கிறது.