ருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயமானது. இதில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. திருக்கோவிலூர் தொகுதியை அரசியல் ரீதியாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே விழுப்புரம் மாவட்டத்தில் விட்டுக்கொடுத்துள்ளன.

kk

கள்ளக்குறிச்சி (தனி)

""சிட்டிங் எம்.எல்.ஏ. பிரபு கட்சிக்காரர்களிடத்திலும் பொதுமக்களிடமும் பிரபலத்துடன் திகழ்கிறார். புதிய மாவட்டமானதும் தியாகதுருகத்தில் தீயணைப்பு நிலையம், கள்ளக்குறிச்சி நகரின் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் இப்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பாடுபட்டவர். எம்.எல்.ஏ. நிதி மூலம் தொகுதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் கமிஷன் வாங்கமாட் டார். திட்டப்பணிகளை கட்சிக்காரர் களுக்குக் கொடுத்துவிடுவார். கட்சி பேத மின்றி பலரும் இவரிடம் உதவிபெற்றுச் செல்கிறார்கள். பிரபுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

Advertisment

அடுத்து கள்ளக்குறிச்சி நகரச் செயலாளர் பாபு. இவரது மனைவி அழகுவேல் 2006-ல் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றவர். இவருக்கு தற்போது மாவட்டச் செயலாளர் குமரகுருவின் பலமான ஆதரவு உள் ளது. அதனால் அழகுவேல் சீட்டுக்கு கடும் முயற்சிசெய்கிறார். 2006-ல் எம்.எல். ஏ.வாக வெற்றிபெற்றதும் இவர் ஜாதிரீதியாக தலித் அல்ல. பொய்யான சான்றுகள் கொடுத்து அதன் மூலம் வெற்றி பெற்றுள்ளார். எனவே இவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் சின்னத்துரை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த விஷயம் அப்போது முதல்வ ராக இருந்த ஜெ. கவனத்திற்குச் செல்ல, ஓ.பி.எஸ்., சின்னத்துரையை அழைத்துப் பேசி விஷயத்தைச் சரிசெய்தார். இம்முறை அழகுவேலுக்கு சீட்டு கொடுத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தயாராக உள்ளனர் அ.தி.மு.க.வினர். இவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது தன் குடும்பத்தை மட்டுமே வளப்படுத்திக் கொண்டார், கட்சிக்காரர்களுக்கு என பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்ற குமுறல் தொண்டர்களிடம் உள்ளது.

முன்னாள் ஒன்றிய சேர்மன் தங்கப்பாண்டிய னும் சீட்டுக்கு முயற்சி செய்கிறார். ஒருவேளை சிட்டிங் எம்.எல்.ஏ. பிரபுவுக்கு வாய்ப்பு வழங்க வில்லை என்றால் அவரது தந்தையும் தியாகதுருகம் ஒன்றியச் செயலாளராகவும் உள்ள ஐயப்பனுக்கு வழங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர் களிடையே இருக்கிறது.

Advertisment

தி.மு.க. தரப்பில் கடந்த 2016-ல் வேட்பாளராக நின்று தோல்வியடைந்த காமராஜ் மீண்டும் முயற்சி செய்கிறார். மாவட்ட இளைஞரணிச் செயலாளராக உள்ள நமச்சிவாயபுரம் தாக பிள்ளை மிகுந்த நம்பிக்கையோடு களப்பணியில் உள்ளார். மாவட்டச் செயலாளர் எம். எல். ஏ. கார்த்திகேயனின் நம்பிக்கையைப் பெற்றுள்ளவர்களில் ஒருவர் மண்டபம் பெருமாள். இவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளார். கள்ளக்குறிச்சி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள், மாநில இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோர் பெயர்சொல்லி அழைக்கும் அளவிற்கு அவர்களோடு நெருக்கமாக உள்ளவர். பூசபாடி சிவக்குமார் ரியல் எஸ்டேட் பிசினஸில் பலருக்கும் அறிமுகமானவர். அதனால் இவர்களும் சீட்டுக்கு மோதுகிறார்கள். ஏற்கனவே சீட்டு கேட்ட டாக்டர் இளங்கோவன் போன்றவர்களும் முட்டிமோதுகிறார்கள்.

தி.மு.க. கூட்டணிக் கட்சி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த தொகுதி மீது ஒரு கண் வைத்துள்ளது.

gg

சங்கராபுரம்

சங்கராபுரம் தொகுதியில் சிட்டிங் தி.மு.க. எம். எல்.ஏ.வாக உள்ளவர் உதயசூரியன். இவர் கட்சியின் மாவட்டச் செயலாளரும்கூட. மீண்டும் தனக்கே கட்சி வாய்ப்பு வழங் கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உள்ளார். கட்சி சீட்டு தருவதற்கு தயக்கம் காட்டினால், மருத்துவர் களாக உள்ள தனது மகன்கள் கதிரவன், பர்னாலா ஆகிய இருவரில் ஒருவரை கட்சித் தலைமை ஆதரவுடன் களமிறக்கவும் தயாராக உள்ளாராம் உதயசூரியன். ஒன்றியச் செயலாளர் சோமண்டார்குடி அரவிந்தன், வழக்கறிஞர் செல்வ நாயகம் ஆகியோர் கடும் முயற்சியில் உள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் கடந்த 2016-ல் இந்த தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் முன்னாள் ஒன்றிய சேர்மனும் தற்போது கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் தலைவராக உள்ளவருமான ராஜசேகர். இவருக்கு வழங்கப்பட்ட சீட்டை மாற்றி அப்போது அமைச்ச ராக இருந்த மோகனுக்கு வழங்கப்பட்டது. அவர் உதயசூரியனிடம் தோல்வியடைந்தார்.

கடந்தமுறை விட்டதை இந்த முறை பிடித்து எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற முனைப் போடு உள்ளார் ராஜசேகர். இவரோடு முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் அரசம்பட்டு, சன்னியாசி, சங்கராபுரம் அரசு நகரச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோரும் சீட்டில் குறியாக உள்ளனர். மாஜி மந்திரியும் கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான மோகன் தமக்கு சீட்டு உறுதி என்று நம்பிக்கையோடு உள்ளார்.

அதேநேரத்தில் ராஜசேகர் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவைப் பெற்றுள்ளார். இதனால் மோகனை பக்கத்துத் தொகுதியான ரிஷிவந்தியத்தில் போட்டியிட வைக்கலாம் என்ற பேச்சும் பலமாக உள்ளது. ஆனால் மாவட்டச் செயலாளர் குமரகுரு, மோகன் எந்தத் தொகுதியிலும் நிற்கக்கூடாது என உறுதி கொண்டுள்ளாராம். இருவருமே ஜெ. இருந்த காலத்திலேயே எதிரும் புதிருமாக அரசியல் செய்தவர்கள்.

dd

ரிஷிவந்தியம்

தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ளவர் வசந்தன் கார்த்திகேயன். இவர் கட்சியினரிடம் பெரும் செல்வாக்குடன் வலம் வருகிறார். கட்சி கடந்து பலதரப்பட்ட மக்களிடம் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும்கூட தொகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிசெய்துள்ளார். மிகவும் பின்தங்கிய தொகுதியில் அரசு கலைக்கல்லூரி துவக்கப்பட்டுள்ளது எம்.எல்.ஏ.வுக்கு நல்ல பெயரைக் கொடுத்துள்ளது. வசந்தம் கார்த்திகேயனை தாண்டி மற்றவர்களுக்கு வாய்ப்பு வருமா என்ற சந்தேகம் தி.மு.க.வினரிடையே பரவலாக உள்ளது.

அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கதிர் தண்டபாணி 2016-ல் வேட்பாளராக நின்று கார்த்திகேயனிடம் தோல்வி கண்டவர். மேலும் மாவட்ட மகளிரணிச் செயலாளராக உள்ள அமுதா ஒன்றியச் செயலாளர்கள் சந்தோஷ், அருணகிரி, முன்னாள் மாவட்டப் பொருளாளர் சந்திரசேகர் இப்படி பலரும் கடும் முயற்சியில் உள்ளனர்.

கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களே இங்கு வெற்றிபெற்றுள்ளனர். நீண்ட காலமாக இத்தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறவில்லை. இந்தத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மோகனை போட்டியிட வைக்க கட்சித் தலைமை சீட்டு வழங்கினால் அ.தி.மு.க.விற்கு ராசியில்லாத தொகுதி என்ற காரணத்தைக் காட்டி கூட்டணிக் கட்சிகளுக்கு தாரைவார்க்க உள்ளூர் அ.தி.மு.க.வினர் தயாராக உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்து அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் இத்தொகுதியைச் சேர்ந்த டாக்டர் ராஜா போட்டியிட ஆர்வமாக உள்ளார்.

உளுந்தூர்பேட்டை

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ளவருமான குமரகுருவின் தொகுதி.. முதல்வர் சேலம் செல்லும் போது உளுந்தூர்பேட்டை விருந்தினர் இல்லத்தில் குமரகுருவை அடிக்கடி சந்தித்துப் பேசும் அளவுக்கு நெருக்கம். அப்படிப் பட்டவரை மீறி அ.தி.மு.க.வில் வேறு யாருக்கு சீட்டு கிடைக்கப்போகிறது என்ற அவநம்பிக்கை பலருக்கும் உண்டு. இருந்தும் திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் செண்பகவேல், உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் ஆகியோரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தி.மு.க.வில் என்ன நிலைமை? கடந்தமுறை மிகக்குறைவான வாக்குகளில் தோல்வியுற்றவர் திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் வசந்தவேல். இந்த முறை வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அறிவாலயத்தில் தவம் கிடக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ. மணிகண்ணன், மறைந்த எம்.எல்.ஏ. வண்டிப் பாளையம் சுப்பிரமணியன் மகன் வீரபாண்டியன், உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் வைத்திய நாதன் போன்றவர்களும் முனைப் புடன் உள்ளனர்

கடந்த முறை தி.மு.க. வசந்த வேலு, பாமக வழக்கறிஞர் பாலு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. குமரகுரு ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் தி.மு.க. மிகக்குறைந்த வாக்குகளில் தோல்வியைச் சந்தித்தது. எனவே இந்த முறை சிட்டிங் எம்.எல்.ஏ. குமரகுருவை வீழ்த்திவிட முடியும் என்று தி.மு.க. வசந்தவேல் கணக்குப் போடுகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடும் போட்டி இருக்கும் தொகுதிகளில் ஒன்று உளுந்தூர்பேட்டை என்கிறார்கள் கட்சிசாராத வாக்காளர்கள்.

-எஸ்.பி.எஸ்.