ssந்தவாசி நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தபோதும், தொகுதி சீரமைப்பில் ஆரணி தொகுதி உருவான பின்பும் சுமார் 25 ஆண்டுகள் இந்த தொகுதியில் தி.மு.க. நேரடியாகக் களம்காணாமல் இருந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. நேரடியாகக் களமிறங்கி தோல்வியைச் சந்தித்தது. இதனால் 2019ல் மீண்டும் கூட்டணிக் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியது தி.மு.க. இந்தமுறை தி.மு.க.வே மீண்டும் நேரடியாகக் களமிறங்குகிறது. திருவண்ணாமலை வடக்கு மா.செ. தரணிவேந்தனுக்கு சீட் வாங்கித்தந்து வேட்பாளராக்கி களப்பணியைத் தொடங்கியுள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.

தி.மு.க. வேட்பாளர் தரணிவேந்தன், கட்சி பார்க்காமல் அனைவரிடமும் நெருங்கிப் பழகுபவர். சாதி பார்க்காமல் மாற்றுச் சாதியில் திருமணம் செய்துகொண்டவர். தனது மகனுக்கு முதலியார் சாதியிலிருந்து பெண் எடுத்துள்ளார். ஆனால் இப்படிப்பட்டவர், ஆளும்கட்சியான பின்னர் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார், ஒப்பந்தம் தருவதில்கூட பாகுபாடு காட்டுகிறார் எனப் புலம்பு கிறார்கள். ஆரணி தொகுதியில் தி.மு.க. நிர்வாகிகளுக்குள் நடக்கும் கோஷ்டி மோதல் உச்சம். ஆரணி தொகுதியில் 4 ஒ.செ.க்கள் இருக்கிறார்கள். இவர்களில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட்டு தோல்வியடைந்த ஒ.செ. அன்பழகனை தொகுதிப் பொறுப்பாளராக நியமித்தார் அமைச்சர். "அவருக்கு நாங்க ஏன் மரியாதை தரணும்?'' என முறுக்கிக்கொண்டு நிற்கின்றனர் மற்ற ஒ.செ.க்கள். சட்டமன்றத் தேர்தலின்போது இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு இல்லாததாலேயே இத்தொகுதியில் தோல்வியடைந்தது தி.மு.க.

a

போளூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இருப்பதால் அந்த தொகுதியில் அதிக வாக்குகள் வாங்க வேண்டும் எனத் தி.மு.க. தரப்பில் மருத்துவரணி மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செஞ்சி தொகுதியில் அமைச்சர் மஸ்தான் மீது உட்கட்சியிலேயே அதிருப்தி நிலவுகிறது. செய்யார் சிப்காட் விவகாரம் அப்பகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக இருக்கிறது. தி.மு.க. நிர்வாகிகள் வெளியே ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு செயலாற்றினாலும், உள்ளுக்குள், நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்கிற மோதல் நடக்கிறது.

Advertisment

அ.தி.மு.க.வில் சீட் கேட்ட முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை வேட்பாளராக்கியிருந்தால் ஒருவருக்கு ஒருவர் காலைவாரி விடும் அளவுக்கு கோஷ்டிச் சண்டை உச்சத்தில் இருக்கிறது. ஆரணி முன்னாள் எம்.எல்.ஏ. சின்னக்குழந்தையின் மருமகனும், ஆரணி ஒ.செ.வுமான கஜேந்திரன் வேட்பாளராக்கப்பட்ட தால் போளூர் தொகுதியில் மத்திய மா.செ. ஜெயசுதா, செய்யார் தொகுதியில் முன்னாள் அமைச்சர் முக்கூர்.சுப்பிரமணி, மா.செ. தூசி.மோகன், ஆரணி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான சேவூர்.ராமச்சந்திரன், பேரவை மா.செ. பாரி.பாபு போன்றவர்கள் "எங்க தொகுதியில் நாங்க அதிக ஓட்டு வாங்கித் தருவோம்" என கோஷ்டி மறந்து தேர்தல் வேலையில் சுறுசுறுப்பு காட்டுவது வேட்பாளருக்கு தெம்பைத் தந்துள்ளது. அதே நேரத்தில், கூட்டணி பலமில்லாதது, தொகுதி முழுவதும் வேட்பாளர் அறிமுகம் இல்லாதது, செலவு செய்யாதது போன்றவை அ.தி.மு.க.வுக்கு பின்னடைவாக உள்ளது. மேலும், சம பலத்துடன் உள்ள தி.மு.க. வேட்பாளருடன் மோதுவதற்குப் பதில், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான பா.ம.க. வேட்பாளர் கணேஷ்குமாருடன் போட்டி போட்டுக்கொண்டு உள்ளனர் அ.தி.மு.க.வினர்.

ssதிருவண்ணா மலை வடக்கு மா.செ.வும், செஞ்சி முன்னாள் எம்.எல். ஏ.வுமான கணேஷ் குமார் பா.ம.க. வேட் பாளராக களத்தில் நிற்கிறார். வந்தவாசியிலும், சென்னையிலும் கல்லூரிகள் வைத்துள்ள கணேஷ்குமாருக்கு ஆரணி நாடாளுமன்றத் தொகுதி முழுவதுமே பரவலான அறிமுகம் உள்ளது. வந்தவாசி, செய்யார், செஞ்சி, மைலம் அனைத்தும் பா.ம.க. பலமாக உள்ள பகுதிகள். மைலம் எம்.எல்.ஏ.வாக பா.ம.க. சிவக்குமார் உள்ளதால் கணேஷ்குமார் தெம்பாக உள்ளார். வன்னிய இளைஞர்கள் மத்தியில் கணேஷ்குமா ருக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. அவர்கள்தான் கணேஷ்குமாரை தூக்கிச் சுமக்கின்றனர். அதே நேரத்தில், சீனியர்களை வேட்பாளர் மதிப்பதில்லை என போளூர் ந.செ. முருகன் போன்ற நிர்வாகிகள் அதிருப்தியாகி தருமபுரிக்கு படையெடுத்துச் சென்று சௌமியா அன்புமணிக்கு தேர்தல் வேலை செய்கின்றனர்!

நாம் தமிழர் கட்சி சார்பில் பிரகலதா என்பவரை வேட்பாள ராக்கினார் சீமான். அவர், நான் போட்டியிடவில்லை என ஒதுங்கிய தால், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவரும், போளூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருமான பாக்கியலட்சுமியை கட்சி நிர்வாகி ஒருவரின் சிபாரிசில் நிறுத்தியுள்ளார். மனு செய்தவர் பிரச்சாரத்துக்குக்கூட புறப்படவில்லை.

Advertisment

தொகுதியில் பெரும்பான்மை சமூகம் வன்னியர் சமூகம் என்பதால் முக்கிய கட்சிகள் வன்னியரையே வேட்பாளராக அறிவித்துள்ளன. அதற்கடுத்த இடத்தில் பட்டியலின சமூக வாக்குகள் உள்ளன. பட்டியலின சமூகத்தை குறிவைத்து அந்த சமூகத்தை சேர்ந்தவரை களமிறக்கியுள்ளது நாம் தமிழர் கட்சி. பா.ம.க.வுக்கு எக்காலத்திலும் விழாத பட்டியலின சமூக வாக்குகளை வெற்றிக்காகக் குறிவைக்கிறார்கள் தி.மு.க. வேட்பாளரும், அ.தி.மு.க. வேட்பாளரும்.

களத்தில் தி.மு.க. -அ.தி.மு.க. இடையேதான் போட்டியே. இரண்டாமிடத்தைப் பிடிக்க முட்டி மோதுகிறது பா.ம.க.