நார்த்தாமலை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தியின் எதிர்பாராத மரணம் நார்த்தாமலை, கொத்த மங்கலப்பட்டி மக்களை அதிரவைத்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்க லத்துப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் -பழனியம்மாள் தம்பதியின் மகன் புகழேந்தி (வயது 11). பள்ளி விடுமுறை என்பதால் நார்த்தாமலையி லுள்ள தனது தாத்தா முத்து வீட்டில் தங்கியிருந் தார். காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு கீழே சாய என்ன நடந்ததென்றே தெரியாமல் தவித்தவர்கள், புதுக்கோட்டை மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினர். முதலுதவி சிகிச்சை அளித்து ஸ்கேன் செய்தபோது மண்டை ஓட்டை துப்பாக்கிக் குண்டு துளைத்துக்கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது.

cc

Advertisment

துப்பாக்கிக் குண்டை அகற்ற வேண்டும் என்பதால் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர் மருத்துவர்கள். அங்கே தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் 4 மணி நேரம் போராடி சிறுவன் மூளையருகி லிருந்த மண்டை ஓட்டுத் துண்டு மற்றும் துப்பாக் கிக் குண்டை அகற்றினார்கள். பின்பும் எந்த முன் னேற்றமும் இல்லை. சின்ன அசைவுகூட இல்லாமல் படுத்த படுக்கையாக இருந்தான் சிறுவன்.

சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன், "சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகள் செய்து முழு விசாரணை செய்யப்படும், வழக்குப் பதிவு செய்யப்படும்'' என்று உத்திரவாதமளித்தார்.

சிறுவன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையிலிருக்கும் தகவலறிந்த கந்தர்வகோட்டை சி.பி.எம். எம்.எல்.ஏ. தோழர் சின்னத்துரை, மாஜி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நார்த்தா மலை ஆறுமுகம் ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருந்தனர். மருத்துவக் குழுவினரிடம் சென்று, "சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல லாமா?'' என்று கேட்க, "அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று மருத்துவர்கள் சொன்ன பிறகே அங்கிருந்து சென்றனர்.

cc

Advertisment

அடுத்தநாள் தோழர் சின்னத்துரை, மா.செ. கவிவர்மன் மற்றும் பலர் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்று ஆய்வுசெய்தனர். மீண்டும் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு சென்று சிறுவன் உடல்நலம் குறித்து கேட்டறிந்தவர், அங்கு வந்த திருச்சி மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் "சிறுவனை சுட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும்' என்ற கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்தார்.

தொடர்ந்து 3 நாட்களாக சாப்பிடாமல் மகனின் ரத்தக் கறை படிந்த உடையோடு அழுதுகொண்டிருந்த சிறுவனின் தாய்-தந்தையிடம் ஆறுதல் சொல்லி, தேற்றி அவர்களை சாப்பிட வைத்து விட்டு சென்றார் சின்னத்துரை எம்.எல்.ஏ.

இந்நிலையில் முதலமைச்ச ரின் ஆணைப்படி மருத்துவக் கல்லூரிக்கு சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மருத்துவர்களிடம் சிறுவன் உடல்நலம் குறித்து கேட்டறிந்த துடன் அருகில் நின்ற அவர் களது பெற்றோரை அழைத்து ஆறுதல் சொல்லி ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி, தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும் "சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் டெபுடி கமாண்டர் நோயல், இன்ஸ்பெக்டர் சிதம்பரம் ஆகியோரிடம் இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். "தாங்கள் சுடவில்லையெனவும், அதேநேரத்தில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள மத்திய மண்டல போலீசாரும் பயிற்சி எடுத்ததாக' அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ff

கந்தர்வ கோட்டை தொகுதி சி.பி.எம். எம்.எல்.ஏ. சின்னத்துரை நம்மிடம், "“இந்த பயிற்சி மையத்தினால் தொடர்ந்து பலர் குண்டடி பட்டுள்ளனர். அதன் பிறகும்கூட இந்த மையத்தை மூட முன்வரவில்லை. தற்போதைய சம்பவத்தில் சிறுவன் துப்பாக்கி சுடும் பயிற்சி நடக்கும்போது குண்டுகளை சேகரிக்கச் சென்றதால், விபத்து நடந்ததாகக் கூறி திசை திருப்ப பார்க்கிறார்கள். வீட்டில் சாப்பிடும்போதுதான் சம்பவம் நடந்திருக் கிறது. சிறுவன் குடும்பத் திற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். பயிற்சி மையத்தை மூடவேண்டும் என்பதை முதலமைச்சருக்கு அறிக்கை கொடுக்கப் போகிறோம். இந்த சிறுவன் புகழேந்தி 5 வயது வரை வாய் பேச முடியா மல் இருந்து இப்பதான் நன்றாக பேசத் தொடங்கி யிருந்தான். இப்போது இப்படி ஒரு சம்பவம். கேட்கவே வேதனையாக உள்ளது''’என்றார்.

இந்நிலையில் ஜனவரி 3-ஆம் தேதி சிறுவன் புகழேந்தி மரணமடைய, நார்த்தாமலை, கொத்தமங்க லத்துப்பட்டியிலுள்ள மக்கள் மற்றும் புகழேந்தி யின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். "தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் உறுதியளித்து, அவர்களைக் கலைந்துபோகச் செய்தனர்.

புகழேந்தியின் மரணத்தால் மிகவும் வேதனையுற்றதாகத் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.