சில தினங்களுக்கு முன், கன்னியா குமரி மாவட்ட திருமண வீடொன்றில் இரண்டு நிர்வாகி கள் பேசிக்கொண்டிருந்த நிலையில்... போன் செய்தால் உடனே எடுத்துப் பேசுவது கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனா,…மந்திரி மனோ தங்கராஜா என்று பந்தயமே வந்துவிட்டது. செக் பண்ணி பார்ப்பதென முடிவானது. போன் அடித்த வேகத்திலே சுரேஷ்ராஜன் எடுத்துப் பேச, மனோ ஆதரவாளர்களின் கெட்ட நேரம் 4 முறை முயற்சி செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. மனோ தங்கராஜ் எப்பவுமே இப்படித்தான்… என கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் சுரேஷ்ராஜன் ஆட்கள்.

மனோ தங்கராஜ் மந்திரியான இரண்டு மாதத்திலே இப்படியொரு விநோத குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது குறித்து குமரி மாவட்ட உடன்பிறப்புகளுடன் பேசினோம்.

kumari-minister

ஆரம்பத்திலிருந்தே சுரேஷ்ராஜனுக்கும் மனோ தங்கராஜுக்கும் ஆகவே ஆகாது. உட்கட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி, கட்சிக்கான வலிமையைக் கடந்து, தங்கள் பலத்தை நிரூபிப்பதிலே குறியாய் இருப்பார்கள்.

பொதுத்தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் மனோ தங்கராஜ் ஜெயித்து மந்திரியாக, சுரேஷ்ராஜன் நாகர்கோவிலில் தோற்றுப்போனார். மாவட்டத்துக்கு மந்திரியாக இருந்தாலும் கிழக்கு மாவட்டத் தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வ தோடு சரி. அங்கு உட்கட்சி பிரச்சனை களில் தலையிடக்கூடாது என மனோ தங்கராஜுக்கு உத்தரவிட்டுள்ளது கட்சித் தலைமை. ஆனால் சுரேஷ்ராஜனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராசன் மற்றும் மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சதா சிவன் இருவரையும் தன் பக்கம் இழுத்துவிட்டார் மனோ தங்கராஜ். இன்னும் பலருக்கு தூண்டில் போட்டுள்ளார். ஆனால், மக்களாக இருந்தாலும் கிழக்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக இருந்தாலும் மந்திரியைத் தொடர்புகொண்டு குறைகளையும் நல்லது கெட்டது எதுவும் சொல்லமுடியல.

போன் செய்தால், அவரின் உதவி யாளரோ அல்லது மகனோ போனை எடுத்து மந்திரி பிசியா இருக்கிறார் என சொல்லி கட் செய்கிறார்கள். இதனால் சுரேஷ்ராஜனைத்தான் எல்லாரும் தேடிவருகிறார்கள்.

மாவட்டத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஒழுகினசேரியில் இருந்து வடசேரி வரை கடந்த ஆட்சியில் ரோடு போடுவதாக சொல்லித் தோண்டி குண்டும் குழியுமாக அதை அப்படியே கிடப்பில் போட்டனர். இதனால் 6 மாதமாக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மனோ தங்கராஜ் மந்திரியானதும், அவரிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லாததால் சுரேஷ்ராஜனிடம் முறையிட்டனர். சுரேஷ்ராஜன் நேரடியாக கலெக்டரையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசிய பிறகு அந்த ரோடு தற்போது போடப்பட்டது.

அதேபோல் சமீபத்தில் பெய்த மழையால் கீழபுத்தேரிக் குளம் உடைந்து நெற்பயிர்கள் எல்லாம் மூழ்கி நாசமானதோடு ஊருக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளும் மூழ்கின. அந்தப் பகுதி மக்களும் தி.மு.க. நிர்வாகிகளும் ஊரில் இருந்த மந்திரி மனோ தங்கராஜைத் தொடர்புகொண்ட போதும் கிடைக்காததால், சுரேஷ்ராஜனை அங்கு வரவழைத்து அதிகாரிகளும் வந்து உடைப்பை அடைத்தனர்.

வாத்தியார்விளையைச் சேர்ந்த கட்சிக்காரர் ஒருவர் சென்னையில் வேலை பார்த்துவந்த நிலையில் மாரடைப்பால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இறந்துவிட்டார். அவரை ஊருக்கு கொண்டுவர ஆம்புலன்ஸ் இல்லையென்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டதால் ஒன்றிய கவுன்சிலர் உமாஸ்டாலின் சென்னையிலிருந்த மந்திரி மனோ தங்கராஜிடம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய உதவிகேட்டு போன் செய்தார். உதவியாளர் போனை எடுத்து இரண்டு மணிநேரம் கழித்து பேசச் சொல்லி வைத்துவிட்டார். பிறகு சுரேஷ்ராஜன், ராஜீவ் காந்தி மருத்துவமனையைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார். இப்படிப் பல பிரச்சினைக்கும் மனுவோடு சுரேஷ்ராஜனைத்தான் வீடுதேடிச் செல்கிறார்கள். அவரும் அதிகாரிகளிடம் பேசி முடிந்ததைச் செய்துகொடுக்கிறார்'' என்கிறார்கள் சுரேஷ் ராஜனுக்கு ஆதரவான வர்கள்.

இதுகுறித்து மனோ தங்கராஜின் ஆதரவாளர் களோ, "இதெல்லாம் சும்மா...… நாங்களும் இது மாதிரி நூறு உதாரணம் சொல்வோம். மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டுத் தீர்த்து வைக் கிறார் மந்திரி. சமீபத்தில் கூட மீனவர் பகுதி மற்றும் மலைக்கிராமங்களுக்கு நேரில் சென்று அவர் களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்தார் மனோ தங்கராஜ். கட்சிக் காரர்களிடமும் தொடர் பில் இருக்கிறார். போன் செய்து கட்சிக்காரர்களை விசாரிக்கிறார். மக்களைப் புறக்கணிப்பவர் தேர்தலில் வெற்றிபெற முடியுமா? எங்க அமைச்சர் வெற்றி பெற்றிருக்கிறார். இதி லிருந்தே மக்கள் பக்கம் யார் இருககிறார்கள் என்பது தெரியும். அமைச் சர் மீது வேண்டுமென்றே சுரேஷ்ராஜன் தரப்பினர் பொய்யான குற்றச் சாட்டை கூறிவருகின்ற னர்'' என்கிறார்கள்.

"தங்கள் தரப்பைப் பாராட்டலாம்,… அடுத் தவர் தரப்பை திட்ட மிட்டு மட்டம் தட்டக் கூடாது'” என்கிறார்கள் கட்சிமீது அக்கறை கொண்ட உடன்பிறப்பு கள்.

Advertisment