டைக் கோடி மாவட்ட மான கன்னியா குமரியின் நாஞ்சில் நகரமான நாகர்கோவிலை, 2018-ல் எம்.ஜி.ஆர். நூற் றாண்டு விழாவையொட்டி, நக ராட்சியாக இருந்ததை மாநகராட்சி யாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையொட்டி "மாநக ராட்சியின் முழு தகுதிக்காக மக்கள் தொகையைக் காட்டும்விதமாக கணியான்குளம், மேலசங்கரன்குழி, திருப்பதிசாரம், தேரேக்கால்புதூர், பீமநகர் ஊராட்சிகள் இணைக்கப் படும்' என்று அரசாணை வெளியிட்டும், அதை இணைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தி.மு.க. ஆட்சி வந்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் பட்டதையடுத்து, அந்த 5 ஊராட்சிகளிலும் தேர்தல் முடிந்துவிட்டதால் தற்போது மாநகராட்சியுடன் அந்த ஊராட்சிகளை இணைக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளது. அதே வேளையில், தற்போது தெங்கம்புதூர் மற்றும் ஆளூர் பேருராட்சிகள் இரண்டும் இணைக்க பட்டு 52 வார்டுகள் உருவாக்கப் பட்டுள்ளன.

nnn

இந்த நிலையில், நாகர்கோவிலின் "கன்னி மேயர்' என்ற கனவில் பலர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதில் சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியை பா.ஜ.க. பறித்துவிட்டதால் மேயர் பதவியைக் கைப் பற்றியே தீரவேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க. தரப்பில் கிழக்கு மா.செ. சுரேஷ்ராஜன் நேரடியாகவே வேட்பாளர் தேர்வுக்காகக் களத்தில் இறங்கியுள்ளார். இதில் முதல் தேர்வாக இருக்கக்கூடியவர் பாரம்பரியமாக தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதியான எக்ஸ் கவுன்சிலர் ஜெயசிங் மனைவி மேரிஜெனட் விஜிலா. இவர் கடந்த முறை நகராட்சித் தலைவர் பதவிக்கான நேரடித் தேர்வில் சொற்ப ஓட்டில் வாய்ப்பிழந்தார். அதோடு சோர்ந்து போகாமல் வார்டு, வார்டாக மக்களின் பிரச்சினைக்காக ஏறியிறங்கி அவர்களின் தொடர்பில் இருந்து வருவதால் நம்பிக்கையோடு இருக்கிறார்.

கனிமொழி எம்.பி.யின் தீவிர ஆதரவாளரான எக்ஸ் எம்.பி. ஹெலன் டேவிட்சன், "மேயர் சீட் எனக்குத்தான்' என நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையோடு கூறிவருகிறார். கட்சியின் சீனியர் எக்ஸ் நகராட்சித் தலைவர் தர்மராஜ் மகள் வழக்கறிஞர் ஷகிலா பிரவீன், மேயர் கனவோடு சமீப நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார்.

கட்சியின் சிறந்த நகரச் செயலாளராக சமீபத்தில் மு.க.ஸ்டாலினிடமிருந்து விருது வாங்கிய நாகர்கோவில் மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் மகேசுக்கும் மா.செ. சுரேஷ்ராஜனுக்கும் இடையே கொஞ்சம் நெருடல். இதனால் கிழக்கு மாவட்ட உட்கட்சி விவகாரத்தில் மூக்கை நுழைத்திருக்கும் மேற்கு மா.செ.யும் மந்திரியுமான மனோ தங்கராஜ், "மேயர் சீட் உனக்குத் தான்' என மகேசுக்கு உத்திரவாதம் கொடுத்திருப்பதால், பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறார் மகேஷ். மேலும் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவராஜன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணனும் மேயர் கனவில் இருக்கிறார்கள்.

Advertisment

nagar

பா.ஜ.க.வில் பொன்.ராதாகிருஷ்ணனின் ஒரே சாய்ஸ் மீனாதேவ். ஏற்கனவே எந்த எதிர்ப்புமின்றி இரண்டு முறை நகர்மன்றத் தலைவியாக இருந்த அனுபவம் மற்றும் மாநகராட்சி மக்களிடம் எப்போதும் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகக்கூடியவர் என்பதால் மீனாதேவுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் மீனாதேவுக்கு சீட் என்பதில் தொகுதி எம்.எல்.ஏ.வான எம்.ஆர்.காந்திக்கு உடன்பாடு இல்லாததால், மகளிரணி மாநிலச் செயலாளர் உமாரதி ரேஸில் இருக்கிறார். "ஒருவேளை ஆண் என்றால், அது மாநகராட்சி மக்களிடத்தில் நல்ல நட்புடன் இருக்கும் சீனியர் முத்துராமன் மற்றும் மா.து.த. தேவ் இருவரில் ஒருவர் தான்' என்கிறது தாமரை வட்டாரம்.

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பெயரைச் சொல்லி அழைக்கக்கூடிய ஒருவரில் சீனியர் மகளிரணி மா.செ. டாரதி சாம்சன், 2011-ல் நகர்மன்றத் தலைவிக்கான தேர்வில் தோல்வியடைந்த தால், 2016-ல் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் சீட் கொடுத்து வேட்புமனுத் தாக்கலுக்கு முந்தின நாள் அதையும் பிடுங்கிய ஜெ.யும் மறைந்து போனதால், அதைச் சொல்லி மேயர் சீட் எனக்கு வேண்டுமென்று, தற்போதைய இரு தலைமைகளிடம் கோதாவில் உள்ளார். மேலும், ஆண் என்றால் மாஜி மந்திரி பச்சைமாலுக்கு பச்சைக்கொடி காட்டி யிருக்கிறார் தளவாய்சுந்தரம். மாவட்ட மாணவரணிச் செயலாளர் மனோகரன் மற்றும் பெருவிளை கூட்டுறவு சங்கத் தலைவர் மோஷிதயான் ஆகியோர் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Advertisment

nnn

காங்கிரசில் எக்ஸ் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், எக்ஸ் நகர்மன்றத் தலைவர் அசோக் சாலமன், காங்கிரஸ் விவசாயப் பிரிவுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் மற்றும் அனுஷா பிரைட் என மேயர் கனவில் பறக்கிறார்கள்.

தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை தனியாக தேர்தலைச் சந்திக்க இருப்பதால் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், முன்னாள் கி.மா.செ.யும் மாநில ஆசிரியர் பட்டதாரி அணி து.செ.யுமான ஜெயபிரபாகர் மற்றும் வழக்கறிஞர் அணிச் செய லாளர் பொன்.செல்வராஜன் ஆகியோர் தீவிரமாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கட்சியிலும் மேயர் ஜுரம் தொற்றிகொண்டி யிருந்தாலும்... போட்டி தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான். "தி.மு.க.வில் மேயர் வேட்பாளர் மா.செ. சுரேஷ்ராஜன் சுட்டிக்காட்டுபவரா? அல்லது மனோ தங்கராஜின் மனசில் இருப்பவரா?'

அதேபோல் "பா.ஜ.க.வில் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆசி பெற்றவருக்கா? அல்லது எம்.ஆர்.காந்தி செலக்ட் செய்பவருக்கா?' என போட்டி நடக்கிறது.