ந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபை வெளியிட்ட போஸ்டரில் நேருவின் புகைப்படம் தவிர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபை வெளி யிட்ட போஸ்டரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், பகத்சிங், படேல், ராஜேந்திர பிரசாத், மதன்மோகன் மாளவியா படத்துடன் சாவர்க்கர் படமும் இடம்பெற்றுள்ளது. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருமான நேருவின் படம் விடுபட்டுள்ளது.

nehru

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்துள்ள இவ்வமைப்பு, 75-வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் பகுதியாக சுதந்திரம் குறித்த கருத் தரங்குகள், உரைகளுக்கு வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்களை அழைத்து பேச ஏற்பாடு செய்துள் ளது. அதன் விளம்பரத்துக்காக ஏற்பாடு செய்யப் பட்ட போஸ்டரில் நேருவின் படம் விடுபட்டுள்ளது.

Advertisment

தமிழக மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரம், “"மோட்டார் காரின் கண்டுபிடிப்பு குறித்த கொண்டாட்டத்தில் ஹென்ரி போர்டை யோ, விமானத்தின் கண்டுபிடிப்பு பற்றிய கொண் டாட்டத்தில் ரைட் சகோதரர்களையோ விட்டு விட்டு யாராவது போஸ்டர் போடு வார்களா? போஸ்டரில் நேருவின் படம் விடுபட்டதற்கான இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபையின் செயலாளரின் விளக்கம் கேலிக்குரி யது''’என்று சாடியிருக்கிறார்.

nehru

பா.ஜ.க. தரப்பிலிருந்து உரிய விளக்கம் ஏதும் வராத நிலையிலும் பஞ்சாப் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கௌரவ் கோயல், “"இந்திய பிரிவினைக்கு ஜவஹர் லால் நேருதான் காரணம்''” என்று பொருத்தமில் லாத விளக்கத்தை அளித்து, நேருவின் படம் இடம்பெறாதது சரிதான் என நியாயப்படுத்தி யிருக்கிறார். “"இந்திய சுதந்திரத்தின் முன்னோடித் தலைவரான நேருவைத் தவிர்த்து சுதந்திரத்தைக் கொண்டாடுவது அற்பமானது மட்டுமல்ல. வரலாற்றுபூர்வமற்ற அணுகுமுறையும்கூட. இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபைக்கு தன்னை இழிவுபடுத்திக்கொள்ள இன்னொரு சந்தர்ப்பம். இது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது''’என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வரலாற்று அறிஞருமான சசிதரூர் விமர்சித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபையின் மூத்த அதிகாரி ஒருவர், "சுதந்திரப் போராட்டத்தில் யாருடைய பங்கையும் குறைத்து மதிப்பிட நாங்கள் முயலவில்லை. சுதந்திர அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் கீழாக வெளியிடப் படும் பல்வேறு போஸ்டர்களில் ஒரு போஸ்டர் தான் இது. அடுத்துவரும் போஸ்டர்களில் நேரு இடம்பெறுவார். இதனை சர்ச்சையாக்குவது தேவையில்லாதது''என்று சமாளிக்கிறார். இந்திய வரலாற்று ஆராய்ச்சித் துறை, இந்தியாவின் முதல் பிரதமரை மட்டும்தான் மறந்திருக்கிறதா… இன்னும் வேறெதனையும் மறந் திருக்கிறதா என அடுத்தடுத்த போஸ்டர்களில் தெரிந்துவிடும்.