மிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் கள் தேர்வாணையம் 2012-லிருந்து 2019 வரை நடத்திய தேர்வுகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். சில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்ட மோசடி, கேள்வித்தாள் அவுட் போன்ற சம்பவங்களின் காரணமாக பணிநிய மனத்தை நிறுத்தியது சென்னை உயர்நீதிமன்றம்.

Advertisment

youth

இதனால் 1,500 பேர் போஸ்டிங் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அவர்கள் அத்தனை பேரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கு விசாரணையின் இறுதியில், தேர்வு செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே உள்ள போலீஸ் வழக்கின் அடிப்படையில் ஏ, பி, சி என மூன்று வகையாகப் பிரித்து வழக்கின் தன்மைக்கு ஏற்ப போஸ்டிங் போட அரசுக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

Advertisment

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏ கேட்டகிரியில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கும் இன்னும் பணிநியமன ஆணை வழங்கப்படாததால், ‘விடா முயற்சி’ என்ற வாட்ஸ்-அப் குரூப்பைத் தொடங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

youth

அவர்களின் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக 30 இளைஞர் கள், கடந்த வாரம் முத லமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுக்க வந்தனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படாததால் சென்னை தலைமைச் செயலகத்தின் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அவர்களை காவல்துறையினர் கைது செய்வதற்கு முன்பாக மீடியாக்களை சந்தித்த இளைஞர்கள், ""லோக்கல் போலீஸ் போட்ட சின்னச் சின்ன வழக்குகளைக் காரணம் காட்டித் தான் எங்களுக்கு போஸ்டிங்கை நிப்பாட்டினார் கள். இப்போது அந்த வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டும் போஸ்டிங் போட மறுக்கிறார்கள். இனிமேலும் தாமதமானால் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை அரசாங்கத்திடமே திருப்பித் தருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை''’என்றனர்.

நம்மிடம் பேசிய அருண்குமார் என்ற இளைஞர், “""2017, 18 இரண்டு ஆண்டுகளிலும் நடந்த தேர்வில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் எங்கள் ஊர் திருவிழாவில் நடந்த பிரச்சனையின் போது, அந்த இடத்திலேயே இல்லாத என்மீது கேஸ் போட்டதால், இப்ப என் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிப்போச்சு. என்னைப் போல பல இளைஞர்களுக்கும் இதே கதிதான்''’’என்கிறார் விரக்தியுடன்.

தேர்வாணையத்தின் ஆணையர் தமிழ்ச் செல்வனிடம் இளைஞர்களின் குமுறல் குறித்துக் கேட்டபோது, “சீருடைப் பணியாளர் தேர் வாணையத்திற்கென்று சில விதிமுறைகள் இருக் கின்றன, அதன்படிதான் நடந்துகொள்கிறோம்'' என்கிறார்.

-அ.அருண்பாண்டியன்