டலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பத்தில் கடலூர் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான "காயத்ரி கேஷ்யூஸ்' என்ற முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றிய மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராசு, கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி இரவு விஷமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக சென்னையி லிருந்த கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேலுக்கு ரமேஷின் உதவியாளர் நடராஜன் நள்ளிர வில் தகவல் தெரிவித்தார். உடனடியாக புறப்பட்டு ஊருக்கு வந்த செந்தில்வேல் "கோவிந்த ராசுவை, எம்.பி ரமேஷும் அவரது ஆட்களும் அடித்துக் கொலை செய்துவிட்டார்கள்' என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

kk

இறந்துபோன கோவிந்த ராசு பா.ம.க.வைச் சேர்ந்தவர் என் பதாலும், அவர் பணியாற்றிய நிறு வனம் தி.மு.க. எம்.பி. ரமேஷுக்குச் சொந்தமானது என்பதாலும் இந்த விவ காரத்தை பா.ம.க. கையிலெடுத்தது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், தனது கட்சியினரைத் தொடர்ந்து போராடுமாறு அறிவுறுத்தினார். அதையடுத்து, கடலூர் மாவட்ட பா.ம.க.வினர் தொடர்ந்து மறியல், முற்றுகை, மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளரிடம் புகார் என விவகாரத்தை தீவிரப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில், பா.ம.க. வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவைத் தலைவர் கே.பாலு கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் பெயரில், "வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்யவேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜிப்மர் மருத்துவர்கள் 4 பேர் கோவிந்தராசு உடலை செப்டம்பர் 23-ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்தனர்.

Advertisment

வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்த நிலையில், சி.பி.சி.ஐ.டி கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் நந்தகுமார், கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் ஆகியோரிடமிருந்து விசாரணையைத் தொடங்கினர். கோவிந்தராசு வின் பிரேத பரிசோதனை அறிக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்குத் தரப்பட்டது. அதில் கோவிந்தராசு அடித்தும், விஷம் கொடுத்தும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் நந்தகுமார், எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான ஆலையில் வேலை செய்த சில தொழிலாளிகளிடம் விசாரணை செய்தபோது கோவிந்தராஜை எப்படியெல்லாம் அடித்துக் கொடுமை செய்தார்கள் என்று சண்முகம், சுந்தர் உள்ளிட்ட தொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்தனர். அந்த வாக்குமூலங்கள் உள்ளடக்கிய கேஸ் டைரியும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கோவிந்தராசு இறந்த அந்த இரவில் கோவிந்தராசை காவல்நிலையத்துக்கு அழைத்துவந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மற்றும் கோவிந்தராசை காவலர்கள் எடுத்த படம் ஆகியவற்றை சேகரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் எம்.பி. ரமேஷ் மற்றும் அவரின் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்ததை தெரிந்துகொண்டனர்.

mm

Advertisment

35 நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியுள்ள னர். தமது விசாரணை முடிவுகளை மேலிடத்தின் ஒப்புதலுக்காக உய ரதிகாரிகளுக்கு அனுப்பினர். மேலிடத்தின் ஒப்புதல் கிடைத்ததை யடுத்து எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்ததுடன், ரமேஷுடன் சேர்ந்து கோவிந்தராசைத் தாக்கிய ரமேஷின் உதவியா ளர் நடராஜன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அல்லாபிச்சை(53), பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சுந்தர் (எ) சுந்தரராஜ், வடக்கு சாத்திப்பட்டை சேர்ந்த கந்தவேல், பண்ருட்டி வினோத் ஆகிய 6 பேர் மீது குற்ற எண் 2/2021-ன்படி கொலை (302), கொலையின் தடயங்களை மறைத்தல் (201), சதித்திட்டம் (149), கூட்டுச்சதி (130-க்ஷ), 5 பேருக்கு மேல் கூட்டாக தாக்குதல் (147/5) சம்பவத்தில் ஈடுபடுவது (148) ஆகிய 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து 10-ஆம் தேதி விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

முதல் குற்றவாளியான எம்.பி. ரமேஷ் தலைமறைவானதால் அவரை கைதுசெய்ய முனைப்புக் காட்டினர் போலீசார். ரமேஷ், ஆளும் கட்சியான தி.மு.க. எம்.பி. என்பதால் கைது செய்யப்படுவாரா? அல்லது முன்ஜாமீன் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பா.ம.க. நிறுவனர் மருத் துவர் இராமதாஸ், "கோவிந்தராசு கொலை வழக்கின் முதன்மை எதிரியான ரமேஷை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. தயங்குவது ஏன்? முதன்மை எதிரியை கைது செய்யாமல் அவரது உதவியாளர் களை மட்டும் கைது செய்வதால் பயனில்லை. மேலும் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் ரமேஷ், இனியும் கைது செய்யப் படாமல் இருந்தால், வழக்கின் சாட்சிகளை அழித்துவிடுவார். எனவே ரமேஷை உடனடியாக கைது செய்யவேண்டும்'' என்று வலியுறுத்தினார். ரமேஷை கைது செய்யாவிட்டால் 12-ஆம் தேதி கடலூரில் போராட்டம் நடத்தப் போவதாக மாவட்ட பா.ம.க. அறிவித்தது.

pp

இந்த நிலையில், "என்னு டைய முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் என் பவரது மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையினை அடிப்படையாக வைத்து தி.மு.க. மீது சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களின் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது.

ஆகவே நான் உயிரினும் மேலாக கருதும் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண் பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்துவிட வேண்டாம் என கருதி சி.பி.சி.ஐ.டி பதிவுசெய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப் பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியில் வருவேன்'' என 11-11-2021 அன்று காலை அறிக்கை வெளியிட்ட கடலூர் எம்.பி. ரமேஷ், அன்று காலை பண்ருட்டி நீதிமன்ற நடுவர் கற்பகவள்ளி முன்பாக mmசரணடைந்தார். அவரை 2 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கவேண்டும் எனவும், 13-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "கோவிந்தராசு 7 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பி. ரமேஷின் முந்திரி ஆலையில் பணியாற்றி வரு கிறார். கொரோனா காலகட்டத்தில் கோவிந்தராசு மட்டுமே அங்கு பணியாற்றியதால் முந்திரியை அவ்வப்போது திருடியதாகவும் இதை கண்டு பிடித்த சில தொழிலாளர்கள் எம்.பி. ரமேஷிடம் தெரிவித்துள்ளனர். அன்று மாலைநேர மயக்கத் தில் இருந்த ரமேஷ், கோவிந்தராசுவை அழைத்து விசாரித்திருக்கிறார். அப்போது கோவிந்தராசு இல்லை என்று மறுக்கவே, கோபமான எம்.பி ரமேஷ் அடித்திருக்கிறார்.

அதற்கு கோவிந்தராசு எதிர்த்துப் பேசவே, "முதலாளியையே எதிர்த்துப் பேசுகிறாயா...' என்று உடனிருந்த உதவியாளர் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக அடித்து காயப்படுத்தி உள்ளனர். அடித்ததோடு மட்டுமில்லாமல் காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று கோவிந்தராசு மீது திருட்டு வழக்கு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர்.

pp

அப்போது தலைமைக் காவலரும், பாரா காவலரும் மட்டுமே இருந்ததால் "இப்பொழுது வழக்குப்பதிவு செய்ய முடியாது. காயம் அதிகமாக இருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். காலையில் அழைத்து வாருங்கள்'' என்று கூறியுள்ளனர். அதன் பின்பு கோவிந்தராசுவை இழுத் துச்சென்ற எம்.பி.யின் ஆட்கள், இறந்துவிட்டால் கொலைப்பழி விழும் என்பதால் அவரது வாயில் விஷத்தை ஊற்றி தற்கொலை நாடகம் ஆடியுள்ளனர். பா.ம.க.வினர் இந்த விவகாரத்தில் போராட்டம், நீதிமன்றம், புகார்கள் என அடுத்தடுத்து சென்றதால் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது" என்றனர்.

இதுகுறித்து தி.மு.க.வினர் சிலரிடம் கேட்டபோது, “"இந்த விவகாரத்தால் ஆட்சிக்கோ, கட்சிக்கோ எந்த கெட்டபெயரும் ஏற்படக்கூடாது என்பதால் தி.மு.க. தலைமை "தேவைப்பட்டால் ராஜினாமா செய்யவேண்டியிருக்கும்' என எம்.பி. ரமேஷிடம் கூறியுள்ளது. மேலும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது தவறு என்றும், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும் கூறியதால் வேறுவழியின்றி சரணடைந்துள்ளார்''’என்கின்ற னர்.

குற்றம்சாட்டப்பட்டவர் தமது கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் என்ற போதிலும் சட்டப்படி நடந்து கொள்ளும் தி.மு.க ஆட்சிக்கு இது போன்ற சம்பவங்கள் சங்கடத்தைத் தந்துள்ளது.