நீண்டுகிடக்கிற தென்மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியிருக்கிறது தென்காசி மாவட்டத்தின் வாசுதேவநல்லூர் நகரையடுத்த தலையணைப்பகுதி. மலையும் மலைக்காடுகளும் சார்ந்த தலையணையில், பரம்பரை பரம்பரையாகக் குடியிருப்பவர்கள் மலைவாழ் பழங்குடியினரான 43 பளியர் சமூகக் குடும்பங்கள்.

அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைதான் பளியர் குடும்பங்களின் வாழ்வாதாரம். மலைமீது குறுக்கொடிய ஏறும் இந்த மக்களின் ஆண்களும், பெண்களும், அங்குள்ள மலைத்தேன், நன்னாரி வேர், குங்குலியம், சுண்டைக்காய், குந்தரிக்காய், கல்தாமரை உள்ளிட்ட அரிய பொருட்களைச் சேக ரித்து ஊரகப் பகுதியில் விற்றுப் பிழைப்பதுதான் இவர்களின் தொழில். இந்தப் பழங்குடியினப் பெண் களிடம்தான் கேரள வனத்துறையினர் தங்களின் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

kk

பளியர் குடும்பத்தைச் சேர்ந்த தேனியர் என்பவரிடம் பேசியபோது, "பரம்பரையாக எங்களுக்கு இந்த மலையவிட்டால் வேறு பிழைப்பு இல்லை. வேறு தொழிலைப் பற்றி அறியாத எங்களுக்கு மலையின் வனமகசூல்தான் குலத் தொழில். நிச்சயமில்லாத பொழப்புன்றதால, உசுரப் பணயம் வைச்சுத்தான் ஆணும் பெண்ணும் மலையேறுவோம். திங்கக்கிழம அதிகாலைல மலை ஏறுனா மலையிலயே தங்கிட்டு வன மகசூல சேகரிச் சுக்கிட்டு ஆறுநாள் கழிச்சு சனிக்கிழமை சாயங் காலம் மலை இறங்குவோம். மலைமேல எத்தன கிலோமீட்டர் தொலைவு ஏறுனாலும் நாங்க நம்ம தமிழக வனப்பகுதிகுள்ளதாம் போவோம். வன மகசூல சேகரிப்போம். இது நம்ம தமிழ்நாட்டு வனத்துறைக்கும் தெரியும். நம்ம பகுதிக்குச் சொந்தமான செண்பகவல்லியம்மன் அணைப் பகுதி மேல தாண்டி, ரெண்டு மூணு கி.மீ. போனாத்தான் கேரள வனப்பகுதி தொடங்குதுய்யா. அதனால நாங்க, செண்பகவல்லி அணைக்குக் கீழ கட்டமாடி வனக்காடுகளுக்குள்ளதான் இருப்போம்.

Advertisment

அணையத் தாண்டித்தான் கேரளாவின் வனப்பகுதியான பெரியார் கோட்ட வனமே வருது. அது ரொம்பத் தொலைவுன்றதால அந்தப் பக்கம் எட்டிப் பாக்கமாட்டோம்யா. ஆனா ரவுண்ட்ஸ்ன்ற பேர்ல கேரள வனத்துறையின் வனக்காவலர்க தாம் நம்ம நாட்டு வனப்பகுதியில் பூந்து தெரிஞ்சே எங்கள வழிமறிப்பாங்க. வரு மானம் கெடைக்கும்ற நெனைப்புல தாம்யா மலையேறுவோம். சில சமயம் வருமானம் கெடைக்கிற அளவுக்கு வன மகசூல் கெடைக் கும். பல வேளைகள்ல கெடைக்காது. கேரள வனத்துறைக்காரங்க தொல்லைதாம் ரொம்ப ஜாஸ்தி. வனமகசூல சேகரிச்சிட்டிருக்கும்போதே நம்ம எல்லைக்குள்ள பூந்து எங்கள வழிமறிப்பாங்க. என்ன கொண்டுபோறன்னு மூட்டயப் பிரிச்சு சோதனை போடுவாங்க.

gg

Advertisment

அவுககிட்ட நாங்க ஞாயம் பேசமுடியாது. பேசுனா சேகரிச்ச பொருள்கள் பறிபோயிடும். பொழப்பு போயி வெறுங்கையோடதான் திரும்புவோம். ஆணுன்னும் பெண்ணுன்னும் பாக்கமாட்டாங்க. திட்டுவாங்க. அவமானப்படுத்து வாங்க. அன்னைக்கி எங்க சமூகப் பெண்கள்ட்ட அவங்க நடந்துக்கிட்ட முறைதான் பெரிய பிரச்சினையாகி போலீஸ் வரை பெண்கள் புகார் குடுத்திட்டாக'' என்றார்.

கடந்த அக்.23 அன்று தலையணை யின் பழங்குடியின பளியர் சமூகப் பெண்களான சரசு, தாயம்மாள், சாராள் ஆகிய மூன்று பெண்கள் வழக்கம்போல் செண்பகவல்லியம்மன் அணையின் கீழ்ப்பகுதி வனத்தில் வன மகசூலைச் சேகரித்துக்கொண்டு குடியிருப்பிற்குத் திரும்பும் பொருட்டு மலையிறங்கி இருக்கிறார்கள். அதுசமயம் மலைமேல் ஏறிக்கொண்டிருந்த கேரள வனத்துறையின் வனப்பாதுகாவலர் பாகுலேயன் உள்ளிட்ட 5 வனப்பாதுகாவலர்கள் பெண்களை வழிமறித்து, "இது கேரள வனப்பகுதி. இந்தப் பகுதிக்குள் யாரும் வரக்கூடாது சுமைகள எறக்குங்கடி'ன்னு அதட்டினார்கள். ஒரு பெண் தோளில் வைத்திருந்த வன மகசூலைப் பிடித்திழுத்து அத்துமீறி யிருக்கிறார்கள். மரியாதைக் குறைவாகப் பேசி, விரட்டியிருக்கிறார்கள். அப்படி இழுத்து அவர்களை அவமானப்படுத்தியதில் அந்தப் பெண்ணின் மேலாக்கு சேலை கிழிந்துவிட்டது.

dd

கேரள வனக்காவலர்களிடம் அவமானப் பட்டுத் திரும்பிய பழங்குடியினப் பெண்கள், குடியிருப்பில் நடந்ததைச் சொல்லியழ, பதறிப் போன பழங்குடி பளியர் குடும்பங்கள், வாசுதேவ நல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் கள். புகார், கேரள மாநிலம் சார்ந்தது என்பதால், விஷயத்தை சாதுர்யமாகக் கையாண்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், தமிழக- கேரள வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக் கிறார். அதன்பிறகே இன்ஸ்பெக்டர் சண்முகசுந்த ரம், கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ், கேரள வனத் துறையின் பெரியார் கோட்ட வனச்சரகர் அகில் பாபு, பழங்குடிப் பளியர் இனமக்கள் உள்ளிட்ட வர்களின் பேச்சுவார்த்தையில், கடந்த 23-ஆம் தேதி யன்று நடந்த சம்பவத்திற்காக பெரியார் கோட்ட வனச்சரகர் அகில்பாபு வருத்தம் தெரி வித்தார். அத்துமீறி நடந்த வனப் பாதுகாவலர் பாகுலேயேன் உள் ளிட்ட 5 பேரிடம் நவ-02க்குள் விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்து எழுதிக்கொடுத் திருக்கிறார். சொன்னபடி சம்பவத் தில் தொடர்புடைய பாகுலேயன் உள்ளிட்ட 5 வனப்பாதுகாவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலை யணை பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை தமிழக வன எல்லைக்குள் புகுந்து சோதனை செய்வது, மரியாதைக்குறைவாக நடத்துவது, அப்பகுதி மக்களுக்கு அச்சமேற்படும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடமாட்டோம் என்றும், தமிழக எல்லையைத் தாண்டி கேரள எல்லைக்குள் பாதை நோக்கத்திற்காக வருபவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யமாட்டோம் என்றும், கேரள வனத்துறையினர் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தபிறகே பழங்குடியினப் பெண் சரசு, ராஜா உள்ளிட்டோர் புகார் மனுவைத் திரும்பப்பெற்றனர்.

அத்துமீறித் துள்ளிய கேரள வனத்துறைக்குக் கடிவாளம் போட்டிருக்கிறது தமிழக காவல்துறை.