துரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார், தனது பணிக்காலம் முடிவதற்கு 11 மாதங்கள் முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை தமிழக ஆளுனரிடம் கொடுத்து, அடுத்த சில நாட்களிலேயே அதற்கான ஒப்புதலும் கிடைத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

dd

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கிருஷ்ணனின் பணி காலம் முடியுமுன்பே, அவர் திருவாரூரிலுள்ள மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக தேர்வாகி, பணி அமர்த்தப்பட்டார். அவருக்குப் பதிலாக காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜெ.குமார், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பிறகு, நிதிப்பற்றாக்குறை யைக் காரணம் காட்டி பல்கலைக்கழக அலு வலர்களுக்கு ஏற் கெனவே நிர்ணயிக் கப்பட்ட சம்பளத் தை மறுநிர்ணயம் செய்தல் போன்ற பல்வேறு சர்ச்சை கள் அடுத்தடுத்து எழுந்தன. தொ டர்ந்து நிதி நெருக் கடியால், பேரா சிரியர்கள், அலு வலர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. சில மாதங்களாகவே பல்கலைக்கழக பேரா சிரியர்கள், ஓய்வூதியர்கள், அலுவலர்கள் போராட்டம் நடத் தியே சம்பளம் பெறும் சூழல் உருவானது. இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி மற்றும் உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் துணைவேந்தர் ஜெ.குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தார். இதுகுறித்து பல்கலைகழக வட்டாரத்தில் விசாரித்தபோது, "இன்னும் 11 மாதங்கள் இருக்கும்போது இராஜினாமா செய்துள்ள அவரை, ஆளுநரின் முழு சிபாரிசில் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக்கழகத்தில் மிக முக்கிய பொறுப்பில் அமர்த்தப் போகிறார்கள் எனத் தகவல் வருகிறது. பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில், தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களிலிருந்தும் காப்பாற்ற உதவியதற்கான சிறப்புப் பரிசாக ஒன்றிய அரசால் இந்த பதவி தரப்படுகிறது. இந்த ஜெ.குமார் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அதனால்தான் இவரை கொண்டுவந்தார்கள். இவருக்கு முன் துணைவேந்தராக இருந்த கிருஷ்ணன், தற்போது மத்திய பல்கலைகழகத்தில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந் தர் ஜெ.குமாருக்கும் அதேபோல் வழங்கப்படுகிறது'' என்கிறார்கள்.

இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் முரளி நம்மிடம் "துணைவேந்தர் பொறுப்பேற்றது முதலே அவர் தமிழக அரசுடன் சரிவர ஒத்துப்போகவில்லை என்ற சர்ச்சை இருந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தபிறகு பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 14 செனட் உறுப்பினர்களில் 9 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தும், 5 பேர் வெளியிலிருந்தும் தேர்வாகின்றனர். அதில் கவர்னர் இரண்டு பேரை நியமனம் செய்வார். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர்களாய் இருந்தனர். தமிழ் ஆர்வலர்கள், இடதுசாரி சிந்தனை உள்ளவர்களை இனங்கண்டு தனியாக ஒதுக்கத் தொடங்கினார்கள். துணைவேந்தர் ஜெ.குமாரை பொறுத்தவரை, ஆளுநரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார். தமிழ் நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் மதுரை வந்தால் கூட அவரை நேரில் சந்திக்கத் தயங்கினார். பல்கலைக் கழக நிதிப்பற்றாக் குறையைப் போக்க, தமிழக அரசிடம் இணக்கமாகப் பேசி, தேவையான நிதியைப் பெறுவதில் போதிய அக்கறை செலுத்தவில்லை. அதேபோல், பல்கலைக்கழக அலுவலர்களுக்கான மறுசம்பள விகித விஷயத்திலும் முறையான நடைமுறையை அவர் கையாளவில்லை. இதில் பாதிக்கப்பட்ட 57 பேர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி, பழைய சம்பளத்தைப் பெறுவதற்கான உத்தரவைப் பெற்றனர்.

Advertisment

nn

பல்கலைக்கழகத்துக்கு எதிரான வழக்குகள், நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாதது, தமிழக அரசுடன் இணக்கமாக சென்று நிதி பெறுவதில் சுணக்கம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுடன், நிர்மலாதேவி மற்றும் முன்னாள் ஆளுநர் சம்பந்தப் பட்ட விவகாரத்தில், பன்வாரிலால் புரோகித்திற்கு ஆதரவாக சில விசயங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டும் பல்கலைக்கழக நிர்வாகிகளால் எழுப்பப்பட்டது'' என்று முடித்துக்கொண்டார்.

அருகிலிருந்த மற்றொரு பேராசிரியரோ, "சார் என் பெயரெல்லாம் வேண்டாம். நிர்மலாதேவி - ஆளுநர் விசயத்தில், அங்கிருந்து வரும் கட்டளைக் கேற்ப அனைத்துத் தடயங்களும் அழிக்கப்பட்டது. கோப்புகள் மாற்றப்பட்டது. அந்த பங்களா சி.சி.டி.வி. ரிக்கார்டுகள் கூட அழிக்கப்பட்டது. இதற்கெல்லாம் கைமாறாக இதைவிட முக்கிய பதவி ஒன்று இவருக்காகக் காத்திருக்கு என்கிறார் கள். இது தான் உண்மை என்பது போகப்போகத் தெரியும். தற்போது நிர்மலாதேவியின் வழக்கு முடிவுக்கு வந்தாலும், இந்த காமராசர் பல்கலைக் கழகத்தில் தான் பல்வேறு விசயங்கள் அரங்கேறி யுள்ளது. அதற்கான தடயங்களை அழித்ததற்கு எதிராகவும், ஆளுநர் தரப்பு -நிர்மலாதேவி தொடர்பு குறித்தும், இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கான தொடர்புகள் குறித்தும் எதிர்த்தரப்பு மேல்முறையீட்டிற்கு போனால் பல்வேறு விசயங்கள் வெளிச்சத்திற்கு வரும்'' என்று முடித்துக்கொண்டார்.

Advertisment