"ஹலோ தலைவரே... கொடநாடு குடைச்சல் இன்னும் புகைச்சலாவே இருக்குது...''”

"அ.தி.மு.க நிர்வாகத்தில் தீப்பற்றி எரியுதாமே?''”

"ரொம்ப சரியாவே கணிக்கிறீங்க தலைவரே, கொடநாடு விவகாரத்தின் மறு விசாரணைக்கு பிரேக் பிடிக்கும் நோக்கத்தோடு, சுப்ரீம்கோர்ட்டுக் குப் போன வழக்கில், அதை தமிழக காவல்துறை விசாரிப்பது சரிதான்னு சொல்லி, விசாரணைக்குத் தடை விதிக்க நீதிமன்ற அமர்வு மறுத்து விட்டது. இன்னொரு பக்கம் இந்த வழக்கில், கொடநாடு பங்குதாரர்களில் ஒருவரான சசிகலா, இளவரசி ஆகியோரிடம், இதுவரை ஏன் விசாரிக்கலைன்னு கிடுக்கிப்பிடி முளைச்சிருக்கு. இதற்கு காரணம், எஸ்.பி.வேலுமணி தான்னு ஏகக்கடுப்பில் இருக்காராம் எடப்பாடி.''”

rang

Advertisment

"வேலுமணியோட ரோல் என்னவாம்?''”

"ஆட்சியி-ருந்த போது, கொடநாடு விவகாரத்தை ஒண்ணும் இல்லாம ஆக்குற பொறுப்பை வேலுமணி கிட்ட ஒப்படைச்சிருந் தாராம் எடப்பாடி. இதை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு மாஜி தங்கமணிக் கிட்டயாம். அதுக்கு பட்ஜெட் 5 கோடி வேலுமணி வசம் கொடுக்கப்பட்டிருக்கு. குற்றவாளி கள், அவங்களோடு தொடர்புடைய 84 பேர், காவால்துறை அதிகாரிகள், சட்டத்துறையினர்னு சரிக்கட்ட வேண்டிய -ஸ்ட் பெருசா இருந்திருக்கு. ஆனால் வேலுமணியிடமிருந்து எவருக்கும் எதுவும் பாசனம் ஆகலையாம். அதனால்தான் கடுப்பாயிருக்கிறார் எடப்பாடி.''”

Advertisment

"ஓஹோ...''”

"கொடநாடு விவகாரத்தை சாஃப்ட் ஆக்கி, மறைக்கணும்னு அப்ப இருந்த காவல்துறை உயரதிகாரி மூலம், கோவை பகுதிக்கு சரக டி.ஐ.ஜி.யா முத்துசாமியை எடப்பாடி நியமிச்சாராம். அவர்தான், இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.காரரான அனுபவ் ரவி மூலம், விசாரணைக்கு தடை வாங்கத் தூண்டினாராம். இதுவும் இப்ப தி.மு.க அரசுக்குத் தெரிஞ்சிடிச்சி. இதெல்லாம் எடப்பாடியை வசமாக இந்த விவகாரத்தில் சிக்கவச்சிருக்கு. அதேபோல், மாஜி சுகாதாரம் விஜயபாஸ்கருக்கும் சிக்கல்கள் நெருங்குதாம். அதில் அப்செட்டானதால்தான் அவர் சட்டமன்றத்துக்கு வர்றதையே குறைச்சிக் கிட்டாராம்.''”

"இதனால் சசிகலாவுக்கு ரூட் க்ளியர் ஆகிற மாதிரி தெரியுதே?''”

"அவரை நோக்கியும் சிக்கல்கள் அணிவகுக்குது. அவரது 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை, அட்டாச் செய்யும் வேலையில் தீவிரமாக இருக்குது. அதில் ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கில் அட்டாச் ஆன பையனூர் பங்களா போன்ற சொத்துக்களையும் அட்டாச் பண்ணியிருக்காங்களாம். அதோடு, போயஸ் கார்டனில் வேதா இல்லத்துக்கு எதிரில், புதுசா சசிகலா கட்டிய பங்களாவையும் அதிகாரிகள் அட்டாச் பண்ணி, அதிர வச்சிருக்காங்க. இதேபோல், அவர் பெங்களூர் சிறையில் சொகுசை அனுபவிக்க, அங்கிருந்த சிறை அதிகாரிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரமும், இப்ப நீதிமன்றத்தில் வேகமெடுக்குது. சசிகலாவோ, பணம் கொடுத்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால் எனக்கு எதுவும் இல்லைன்னு சொல்றாராம்.''”

"தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தனக்கு சிகிச்சை அளிக்கும் செவி-யர்களோடு "சத்ரியன்' படம் பார்த்ததா ட்வீட் பண்ணியிருக்காரே?''”

"உடல் பரிசோதனைக்காகவும், ஸ்பீச் தெரபிக்காகவும் இந்தமுறை துபாய் போயிருக்காரு விஜயகாந்த். அவருடன் முத-ல் மூத்த மகன் போக, அடுத்தநாள் பிரேமலதாவும் புறப்பட்டுப் போனார். விஜயகாந்த்தின் மைத்துனரான சுதீஷ்தான் இப்ப கட்சி விவரங்களை அப்டேட் செய்து பிரேமலதாவுக்கு பாஸ் செய்கிறாராம். இங்குள்ள தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள ரெடியாகி வருது. தே.மு.தி.க. நிர்வாகிகளோ, தனித்து நிற்பதை விரும்பலை. தி.மு.க. கூட்டணியில் இருந்தால் கரையேறலாம்னு நினைக்கிறாங்க. இது பற்றி தலைமைக்கும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.''”

"தலைமையோட ரியாக்ஷன் என்ன?''”

dd

"கேப்டன் தமிழகம் திரும்பியதும் முடிவெடுக்கலாம்ன்னு பிரேமலதா சொல்லியிருக்கார். அதேசமயம் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அடிப்படை வேலைகளைத் தொடங்கச் சொல்லியிருக்காராம். ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் 9 மாவட்ட நிர்வாகிகளிடம் மட்டும், உங்கள் மாவட்டத்திற்கான வாக்காளர்கள் பட்டியல் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கு. அதை கவனியுங்கள். நம்ம ஆளுங்க ஓட்டெல்லாம் இருக்கா? தூக்கிட்டாங்களான்னு பார்த்து சரிபண்ணுங்கன்னு உஷார்படுத்தியிருக்குதாம் தலைமை.''”

"தி.மு.க அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்ல தீவிரம் காட்டணும்னு மருத்துவர்கள் தரப்பு எச்சரிக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, கொரோனாவின் மூன்றாவது அலை பரவுவதாக வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டிருக்கு. இங்கே தமிழகத்தில் அதை எதிர்கொள்ளத் தேவையான, வ-மையான சுகாதாரக் கட்டமைப்புகள் இருக்கு. அதே நேரத்தில், அரசு அறிவிச்சிருக்கும் தளர்வுகள், அச்சத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது. கடற்கரைகளைத் திறந்துவிட்டதால், கூடுற கூட்டத்தில் முகக்கவசம் அணிந்தவங்க ரொம்பக் குறைவுதான். இந்த நிலையில், அரசுத் தரப்போ அடுத்தடுத்த தளர்வுகளுக்கும் வழிவகுக்க நினைக்கிதுன்னு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கவலைப்படறாங்க. அதோட, இன்னொரு விசயத்தையும் சுட்டிக்காட்டி அவங்க எச்சரிக்கிறாங்க.''”

"அது என்னப்பா?''”

"15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படலை. அதனால், 1 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை பள்ளிக்கூடங்களைத் திறக்க அரசு இன்னும் அனுமதிக்கலை. இது சரியான முடிவுதான். ஆனால், 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கிறோம்னு தனியார் கிரிக்கெட் பயிற்சி மையங்கள் தமிழகம் முழுக்கக் களத்தில் இறங்கியிருக்கு. இது போதாதுன்னு சென்னை தரமணியில் உள்ள தமிழக அரசின் மத்திய பாலிடெக்னிக் வளாகம், எம்.ஆர்.சி. நகர்ல இருக்கும் மைதானம் உள்பட பல்வேறு இடங்கள்ல, சின்ன வயசு மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்கறாங்க. இதெல்லாம் ஆபத்துக்கு வழி வகுக்காதான்னு அவங்க கேட்கறாங்க. கடற்கரைகளுக்கும் கிரிக்கெட் பயிற்சிக்கும் தடை விதிக்கணும்ங்கிறதுதான் மருத்துவத் துறையின் எச்சரிக்கை கலந்த கோரிக்கை.''”

"வேற தகவல்?''”

"தமிழக காவல்துறை அதிகாரிகள் வீடுகள்ல எடுபிடி வேலை செய்ய, டிபார்ட்மெண்ட் ஆட்களை, தலா 5 பேர் வரை ஆர்டர்-ங்கிற பேர்ல கொத்தடிமையா அனுப்பி வைக்கிறாங்க. அங்க அவங்க படுற கஷ்டங்களும் அவமானங்களும் கொஞ்ச நஞ்சமில்லை. மேலதிகாரி களின் மனைவிகள் சொல்லும் போதெல்லாம், அவங்க வீட்டுக்கு காய்கறி மளிகை, ரேசன் பொருள் வாங்கிக் கொடுக்குறதில் ஆரம்பிச்சி, அவங்க பிள்ளைகளை ஸ்கூலுக்குக் கொண்டுபோய் விடறது, செடிகளுக்குத் தண்ணி ஊத்தறது. அவங்க வளர்க்கும் நாய்களைக் குளிப்பாட்டுறதுன்னு சகலத்தையும் அவங்க செஞ்சிக்கிட்டிருக்காங்க. இப்படி ஆர்டர்களை நியமிக்கக் கூடாதுன்னு நீதிமன்ற உத்தரவே இருக்கு. ஆனால், இதை யாரும் மதிக்கிறதில்லை. இந்த ஆட்சியிலாவது நல்லது நடக்கும்னு அந்த ஆர்டர்- காக்கிகள் கனவு காண்றாங்க.''”

"காவல்துறை பற்றி உங்க சேதியைக் கேட்டதும், ஒரு நல்ல செய்தி ஞாபகத்துக்கு வருதுங்க தலைவரே... அதைச் சொல்றேன். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரான டி.ஜி.பி. கந்தசாமியின் மகன் சங்கல்பிற்கு 9-ந் தேதி ஈ.சி.ஆரில் திருமணம். அமெரிக்க மருமகள். வரவேற்பு 10-ந் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா காரணமாக கூட்டத்தைக் குறைக்கணும்னு, திருமணத்துக்கு குறிப்பிட்ட சில அதிகாரிகளை மட்டுமே அழைச்சிருந்தார் கந்தசாமி. அதேபோல வரவேற்புக்கும் -மிட்டான நபர்களுக்கே அழைப்பு போனது. இருந்தும் வி.ஐ.பி.க்கள் பலரும் மணமக்களை இருந்த இடத்தில் இருந்தே வாழ்த்தியிருக்காங்க.''”

"நானும் ஒரு தகவலைச் சொல்றேன்… சங்கரமடத்துக்கு இளைய ஆதீனமா, மோடி மற்றும் பா.ஜ.க. தரப்பின் பிரஷரால் குஜராத்தைச் சேர்ந்த விஜய் மேத்தா என்பவருக்கு முடிசூட்ட முயற்சி நடப்பது பற்றி, போனமுறையே நாம் பேசிக்கிட்டோம். அந்தத் தகவல் உலகம் முழுக்க இருக்கும் பிராமணர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு. சங்கரமடத்தின் ஆதிமடம், முதல்ல கும்பகோணத்தில்தான் இருந்தது. பிறகுதான் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது. தமிழ் பிராமணர்களின் ஆதிக்கம்தான் சங்கரமடத்தில் இருந்துவருது. இப்ப, விஜய் மேத்தாவுக்கு இளைய பட்டம் சூட்டி, கொஞ்ச நாள்ல, காஞ்சியில் இருக்கும் சங்கர மடத்தையே குஜராத்துக்கு கிட்னாப் பண்ணிக்கொண்டு போயிடலாமான்னு மோடித் தரப்பு நினைக்கிதாம். இதைப் புரிஞ்சிக்கிட்ட தமிழ் பிராமணர்கள், காஞ்சிமடத்தை நகரவிடக் கூடாதுன்னு பேச ஆரம்பிச் சிட்டாங்க.''”

_____________________________

இறுதிச் சுற்று!

புலவருக்கு அரசு இரங்கல்!!

dd

இலக்கியத் தரமான பாடல்களின் மூலம் தமிழ்த் திரையில் தனித்துவமாகத் திகழ்ந்தவர் புலவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆரின் பேரன்புக்குரிய அவர், அ.தி.மு.க. ஆட்சியில் அரசவைக் கவிஞராக, மேலவை உறுப்பினராகவும் இருந்தவர். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக இருந்தார். கலைஞரிடமும் நட்பு கொண்டவர். ஈழ விடுதலையில் தீவிர வேகம் கொண்டு, பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர். செப்டம்பர் 8-ந் தேதி உடல்நலக் குறைவால் புலவர் மறைந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நக்கீரனில் புலவர் எழுதிய "நாயகன்' தொடர் அவரது வரலாற்றை என்றென்றும் பேசும்.