"கொடநாடு வழக்கினால் எடப்பாடியின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கவலை ரேகைகள் கட்சி முழுவதும் பரவிக் கிடக்கின்றன'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். எடப்பாடிக்கும் சேலம் இளங்கோவனுக்கும் இடையே பல ரகசிய உறவுகள் இருக்கின்றன. இளங்கோவ னின் மனைவி பிராமணர். அதைப் பயன்படுத்தி ஜெ.வுடனும் சசிகலாவுடனும் நெருக்கமாக இருந்த இளங்கோவன், மனைவி மூலம் ஜெ.வை நெருங்கினார். எடப்பாடிக்குப் பதிலாக இளங்கோவனை தயார் செய்ய ஜெ நினைத்தார். தன்னுடைய மா.செ. பதவியை இளங்கோவனுக்கு ஜெ. தரப்போகிறார் என எடப்பாடி பயந்தார். அதனால் இளங்கோவனுக்கும் அவரது மனைவிக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார் எடப்பாடி. தான் முதல்வரான போது, மந்திரியை விட அதிக அதிகாரம் மிக்க மாநில கூட்டுறவு வங்கி தலைவராக்கினார். அதைவிட மிக முக்கியமாக, அன்னிய நாடுகளில் தனது தரப்பினரின் முதலீடுகளுக்கு காப்பாளராக்கினார்.

தங்கமணி, வேலுமணி மூலமாக டெல்- தொடர்புகள் கிடைத்தன. ஜக்கி வாசுதேவ், பரணி எர்த் மூவர்ஸ் மூலம் பா.ஜ.க., எடப்பாடிக்கு நெருக்கமானது. ஆனால் கொடநாட்டில் நிகழ்த்தப்பட்ட கொள்ளை மூலம் அங்கிருந்த 76 சொத்து ஆவணங்களை ஓ.பி.எஸ். உட்பட அனைவருக்கும் திருப்பித் தந்ததன் மூலம் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே எடப்பாடி கைவசமானது. ஓ.பி.எஸ்.ஸிடம் மறுபடியும் அந்த ஆவணங்களைக் காட்டி அ.தி.மு.க.வில் இணைய வைத்தார். அவர் இணைந்த பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் 2019-ஆம் ஆண்டு பத்திரப்பதிவு அதிகாரிகளையெல்லாம் எடப்பாடி தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

velumani

Advertisment

இளங்கோவன், எடப்பாடி முன்னிலையில் கொடநாட் டில் இருந்து எடுத்துவரப்பட்ட சொத்து ஆவணங்களை பத்திரப்பதிவுத் துறை உயரதிகாரிகள் மூலம் அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுத்தார். அதனால் அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ். உட்பட அனைவரும் எடப்பாடியின் கண்ட்ரோலுக்கு வந்தார்கள்.

கொடநாட்டில் கொள்ளையடிக்கவும் ஆவணங்களை எடுத்து வரவும் பயன்பட்ட கார் டிரைவர் கனகராஜையும், சயானையும் லாரி ஏற்றி கொல்லப்பார்த்தார்கள். அந்த கொலை முயற்சியில் தனது மனைவி, மகள்களை பறிகொடுத்த சயான் உயிர் பிழைத்தார். கனகராஜ் பலியானார்.

சயான் வெளியே வந்து கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடிக்கு உள்ள தொடர்பு பற்றி பேசுகிறார். சயானை குண்டர் சட்டத்தில் தள்ளுகிறார் எடப்பாடி. சயான் ஒரு போலி என பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு நெருக்கமான அவரது முன்னாள் ஓட்டுநரின் மூலம் ஒரு போலி வீடியோ தயாரிக்கப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அந்த வீடியோவை தயாரித்தவர் இளங்கோவன். அதேபோல் சட்டமன் றத் தேர்தலுக்கு முன்பு கொடநாடு குற்றவாளிகளை கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் சந்திக்கிறார் இளங்கோவன். மறுபடியும் ஒரு பிரச் சார கேசட் தயாரிக்க முயற்சிக்கிறார். கொடநாடு கொலை வழக்கில் எடப் பாடி குற்றமற்றவர் என இளங்கோவன், குற்றவாளிகள் மூலம் சொல்ல நினைத்த விவகாரம் இப்பொழுது சந்தி சிரிக்கிறது.

இளங்கோவன், குற்றவாளிகளை எடப்பாடிக்கு ஆதரவாக பேசச் சொன்ன விவகாரத்தைப் பற்றி போலீ சார் விசாரித்தபோது, குற்றவாளிகள் எதுவும் ஆதாரபூர்வமாகச் சொல்ல வில்லை என்பதாலும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இளங்கோவனின் பங்கை லைட் டாக அப்படியே விட்டுவிட போலீசார் தயாராக இல்லை.

velumani

லஞ்சஒழிப்புத் துறை போலீசார், இளங்கோவனின் வெளிநாட்டு முதலீடுகளில் எடப்பாடியின் பங்கு பற்றி விசாரிக்கிறார்கள். சட்டம்- ஒழுங்கு போலீசார், கொட நாடு கொலை வழக்கில் இளங்கோவனின் பங்கு பற்றி விசாரிக்கிறார்கள். எனவே இளங்கோவனை தனியே விடக்கூடாது என்றும், ஒருவேளை இளங்கோவன் தன் னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடும் என வும் எடப்பாடி பயப்படுகிறார். லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வருவதற்கு முன்பே ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களுக்கு இளங்கோவன் தூதுவிட்டார். எனவே எடப்பாடி இளங்கோவ னை தனியாக விடுவதில்லை. முன்பெல்லாம் விமான மார்க்கமாக கோவை வந்து கோவையிலிருந்து சேலம் செல்வார் எடப்பாடி. இப் போது கோவை என்றாலும், சேலம் என்றாலும் சாலை மார்க்கமாக வேதான் எடப்பாடி பயணிக்கிறார். அத்தனைப் பயணத்திலும் சேலம் இளங் கோவன் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

சசிகலா தரப்பிடம் நேரடித் தொடர்புகொண்டவர் இளங்கோவன். அந்த வகையில் சசியுடன் பேசவும், இளங்கோவன் உதவுவார் என்கிற சந்தேகம் அ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ளது. எடப்பாடியின் இந்த இளங்கோவன் பாசம், வேலுமணியை ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்க மாக்கிவிட்டது. எடப்பாடிக்கு அடுத்தபடி யாக பணத்திலும், கட்சியிலும், பா.ஜ.க.விடத் திலும், செல்வாக்கு மிக்கவர் வேலுமணி. எடப்பாடி கொடநாடு வழக்கில் சிக்கினால் அவரது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைக் குறிவைக்கிறார். அதற்காக ஒருங்கிணைப்பாள ரான ஓ.பி.எஸ்.ஸுக்கு சாதகமாக இருக்கிறார்.

தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் என அனைவரும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்காமல் தங்களது சொத்துக்களை எப்படி பாதுகாப்பது என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவதில் கூட யாருக்கும் அக்கறை இல்லை. ஓ.பி.எஸ். மீதும் மிகப் பெரிய தாக்குதலைத் தொடுக்க தி.மு.க. திட்டமிட்டு வருகிறது. தி.மு.க.வின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிதறி ஓடும் கூட்டமாகத்தான் அ.தி.மு.க. இருக்கிறது என கவலைப்படுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.