ddவேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கே.வி.குப்பம், வாணியம்பாடி தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், மற்ற நான்கு தொகுதிகள் தி.மு.க. வசமும் உள்ளன. தொகுதியில் 7,31,831 ஆண் வாக்காளர்களும், 7,77,922 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 206 பேரும் என மொத்தம் 15,09,959 வாக்காளர்கள் உள்ளனர். வன்னியர், பட்டியலினத்தவர், முதலியார், இஸ்லாமியர், கிறித்துவர் அதிகளவில் உள்ள தொகுதியிது.

தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி.யும், தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தை மீண்டும் வேட்பாளராக்கியுள்ளது தலைமை. கட்சித் தொண் டர்களை மட்டுமல்ல, நிர்வாகிகளைக்கூட மோச மாக நடத்துவதால், அவரைவிட்டு விலகி நிற்கின்றனர் கட்சியினர். சிட்டிங் எம்.பி.யாக இருந்தும் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்கிற அதிருப்தியுள்ளது.

அ.தி.மு.க. வேட்பாள ராக ஆம்பூரைச் சேர்ந்த சூப்பர்நேஷன் பார்ட்டி நிறுவனர் கலிலூர் ரஹ்மான், பேரணாம்பட்டு ஒ.செ. பிரபாகரன் ஆகி யோரை முன்னிறுத்தினார் முன்னாள் அமைச்சர் வீரமணி. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக் குச் சென்று நேர்காணலைச் சந்தித்தவர்கள் தேர்தல் தேதி அறிவித்ததும் திடீ ரென பின்வாங்கிவிட்டனர். இதனால் முதல்கட்ட பட்டியலில் வேலூர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்கவில்லை. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் பசுபதி. கடந்த மாதம் வி.ஆர்.எஸ். தந்துவிட்டு அ.தி.மு.க.வில் விருப்பமனு செய்திருந்தார், கடைசி நேரத்தில் அவரிடம் பேசி அவரை வேட்பாள ராக்கியுள்ளனர்.

ff

Advertisment

இந்தத் தொகுதியில் பா.ஜ.க. கடந்த 4 ஆண்டுகளாக களப்பணி செய்துவந்தது. திடீரென இந்தத் தொகுதியில் நான்தான் வேட்பாளர் எனச் சொல்லி 5 மாதத்துக்கு முன்பே தேர்தல் வேலையைத் தொடங்கினார் புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம். இதனால் தொகுதியிலுள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் அதிருப்தியடைந்தனர். அவர்களுக்கு பணத்தை வாரித்தந்து சரிக்கட்டியவர், இப்போது அதிகாரப்பூர்வ வேட்பாளராகிவிட்டார்.

நாம் தமிழர் கட்சி, வழக்கறிஞர் முருகனை வேட்பாளராக அறிவித்தது. ஒருமாதத்துக்குப் பின்னர் தேர்தல் அறிவிப்பு வந்ததும் உடல்நிலை சரியில்லை எனச்சொல்ல, கோவையைச் சேர்ந்த மகேஷ்ஆனந்தை வேட்பாளராக்கியுள்ளார் சீமான். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியைச் சேர்ந்த நடிகர் மன்சூர்அலிகானும், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தொகுதியைச் சுற்றிவருகிறார்.

இத்தனை வேட்பாளர்கள் இருந்தாலும் தி.மு.க. - பா.ஜ.க. வேட்பாளர்களுக்கிடையேதான் கடும் போட்டியே.

Advertisment

dd

அ.தி.மு.க.விலிருந்த ஏ.சி.சண்முகம் 1984-ல் முதன்முறையாக இந்த தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யானார். 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களில் பா.ஜ.க., அ.தி.மு.க. சின்னத்தில் நின்று தோல்வியே சந்தித்தார். நான்காவது முறையாக இத்தொகுதியில் களமிறங்கியுள்ள இவர் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென தீவிரம் காட்டுகிறார். தி.மு.க., அ.தி.மு.க.விலுள்ள முதலியார் சாதி பிரமுகர்களிடம், “"வன்னியர் துரைமுருகனைவிட அவரது மகனிடம் கதிர்ஆனந்துக்கு சாதிவெறி அதிகம், அவருக்கா வேலை செய்யப் போறிங்க?''’என மறைமுகக் கூட்டங்கள் வழியாக பேசி மயக்கியவர், பணத்தையும் வாரித் தந்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வாணியம்பாடி, ஆம்பூர் இஸ்லாமிய வாக்குகள்தான் தி.மு.க. வெற்றிபெறக் காரணம். அந்த வாக்குகள் முழுமையாக தி.மு.க.வுக்கு போய்ச் சேரக்கூடாது என்றே நடிகர் மன்சூர்அலிகானை வேலூரில் களமிறக்கியுள்ளது ஏ.சி.எஸ். தரப்பு. அவர் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சுற்றிவருகிறார்.

அ.தி.மு.க.வில் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த ஒ.செ. பொகலூர் பிரபாகரனை வேட்பாளராக்க முடிவுசெய்தனர். பின்பு ஆம்பூரைச் சேர்ந்த சூப்பர்நேஷனல் பார்ட்டி தலைவர் கலிலூர் ரஹ்மானை தேர்வு செய்தனர். இஸ்லா மிய முக்கிய பிர முகர்கள் எதிர்ப்பு காட்டியதால் அவர் பின்வாங்கினார். அதன்பின்பே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவர் பசுபதியை வேட்பாள ராக்கினார் இ.பி.எஸ். பசுபதி தேர்வின் பின்னணியிலும் ஏ.சி.எஸ் இருக்கிறார் என்கிறார்கள். அதாவது, பா.ம.க. என்னதான் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும் வன்னியர் வாக்குகள் முழுமையாக தனக்கு வராது. வன்னியர் வாக்குகள் தி.மு.க. வேட்பாளருக்குச் செல்லாமல் தடுக்கவேண்டுமென்றால் அ.தி.மு.க.வில் ஒரு வன்னியரை வேட்பாளராக்கவேண்டும் என இ.பி.எஸ் தரப்பிடம் பேசி பசுபதியை வேட்பாள ராக்கியுள்ளார். இப்போது தி.மு.க.- அ.தி.மு.க.- நா.த.க. வேட்பாளர்கள் வன்னியர்கள் என்பதால் வன்னியர் வாக்குகள் பிரியும், இது தனக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறார் ஏ.சி.எஸ். இதற்காகவே பல கோடி செலவு செய்துள்ளார் என்கிறார்கள்.

இந்நிலையில், தி.மு.க.வுக்கு எதிராக வருமான வரித்துறையும் களமிறங்கியுள்ளது. மார்ச் 19-ஆம் தேதி இரவு வருமானவரித் துறையின் கூடுதல் ஆணையர் பூரணசந்தர் தலைமையி லான அதிகாரிகள், துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான வேலூர் மாநகரப் பொருளாளர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகனின் பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் ரெய்டு செய்தனர். இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு 9:45 மணிக்கு சோதனை முடித்து வெறும்கையோடு சென்றனர்.

தனது மகனுக்கு எதிரான சக்கர வியூகத்தை உணர்ந்தே உட்கட்சியில் உள்ள அதிருப்தி யாளர்களை சமாதானம் செய்த துரைமுருகன், “"என் மகனுக்காக நான் வாக்குறுதி தருகிறேன். அவன் வெற்றிபெற்றால், தொகுதி மக்களுக்கு தேவையானவற்றைச் செய்வார்''” எனச்சொல்லி மக்களிடம் பேசிவருகிறார்.