.தி.மு.க.வின் முன்னாள் கல்வி அமைச்சரும் முதலமைச்சர் எடப் பாடிக்கு மிக நெருக்கமான வருமான வைகைச்செல்வ னிடம் அ.தி.மு.க.வின் இன் றைய நிலை பற்றிய கேள்வி களை முன்வைத்தோம்.

அ.தி.மு.க. உச்சகட்ட குழப்பத்தில் இருக்கிறது என செய்திகள் வருகிறதே அதற்கு என்ன காரணம்?

வைகைச்செல்வன்: அ.தி.மு.க. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. ஒரு பெரிய தோல்விக்குப் பிறகு சலசலப்புகள் வருவது மிகவும் சகஜமான விஷயம். 91-96 வரை ஆட்சி செய்த அம்மா 96-ல் தோல்வி அடைந்தார். அப்பொழுது இன்றிருப்பதை விட மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அப்பொழுது கட்சியே பிளவுபட்டது. கண்ணப்பன் போன்றவர்கள் பிரிந்து சென்று புதிய கட்சியையே உருவாக்கி னார்கள். தி.மு.க., அ.தி.மு.க.வை விட தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தபோது அந்த கட்சியிலும் சலசலப்புகள் தோன்றின. தோல்வி அடைந்த இயக்கத்தில் ஏற்படும் சலசலப்புகளை அந்த இயக்கம் அடுத்து பெரும் வெற்றிகள் அடக்கிவிடும். அதுபோல அ.தி.மு.க.வில் இன்று நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தோல்வியினால் ஏற்பட்ட சலசலப்புகளை அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பெறும் வெற்றி தவிடு பொடியாக்கிவிடும்.

ஜெ.வின் தலைமையில் இருந்த அ.தி.மு.க. ஒற்றைத் தலைமையில் இயங்கியது. இன்று ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். என இரட்டை தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வில் திசைக்கொரு அதிருப்தி குரல் கட்டுப்பாடில்லாமல் ஒலிக் கிறது. ஒற்றைத் தலைமையில் இயங்குவது தான் அ.தி.மு.க.வை கட்டுப்படுத்துமா?

Advertisment

வைகைச்செல்வன்: அம்மாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டது. அ.தி.மு.க. என்ற பெயருடன் பல பெயர்கள் இணைக்கப்பட்டது. அதையெல்லாம் மாற்றிய ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். ஆகியோர் அடங்கிய இரட்டை தலைமைதான் அ.தி.மு.க. என்கிற பெயரை மீட்டெடுத்தது. இரட்டை இலையை மீண்டும் பெற்றது. கடந்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்தது. தேர்தல் தோல்வியால் ஒன்றிரண்டு பேர் தங்களது அதிருப்தி கருத்துகளை சொல் கிறார்கள். அவர்கள், அவ்வாறு சுதந்திரமாக கருத்துகளை சொல்வதற்கான கருத்து சுதந்திரத்தையும் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகியோரது இரட்டை தலைமைதான் தந்திருக்கிறது. அதிருப்திகளை வெளிப் படுத்துவதற்காக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்கிற தேவை இல்லை.

கட்சியில் ஏற்படும் சலசலப்புகளுக்கும் அதிருப்திகளுக்கும் தேர்தல் தோல்விதான் காரணம் என்கிறீர்கள். அந்த தோல்வி எப்படி ஏற்பட்டது?

vaigai

Advertisment

வைகைச்செல்வன்: பா.ஜ.க.விற்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக ஒரு கடும் பிரச்சாரம் கடந்த 2, 3 வருடங்களாகவே தமிழ் உணர்வாளர்களால் செய்யப்பட்டது. அதை முறியடிக்கும் விதத்தில் ஒரு பிரச்சாரம் தமிழகத்தில் நடத்தப்படவில்லை. இதுதான் தோல்விக்கான மிக முக்கியமான காரணம். அந்த பிரச்சாரம் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளையும் பாதித்தது. அத்துடன் நாங்கள் ஆட்சிக்கு வருவோம், ராகுல் பிரதமரானால் கூட்டுறவு கடன்-பொதுக்கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வோம், விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் இலவசமாக தருவோம் என பிரச்சாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட பொய்யான பரப்புரைகளை திட்டமிட்டுச் செய்தார்கள். பரப்புரைகளை மக்கள் நம்பினார்கள்; நாங்கள் தோற்றுப்போனோம்.

பா.ஜ.க.வுக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரத்தால்தான் தோற்றோம் என்கிறீர்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காமல் ஜெ. பாணியில் தனித்து போட்டியிட்டிருந்தால் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்குமா?

வைகைச்செல்வன்: கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து விட்ட பிறகு இப்பொழுது தனித்து போட்டியிட்டி ருக்கலாமே என சிந்திப்பதில் பயனில்லை. நாங்கள் பா.ஜ.க.வுடன் மட்டும் தனித்து கூட்டணி அமைக்க வில்லை. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. என ஒரு மெகா கூட்டணியை அமைத்துதான் தேர்தலில் போட்டி யிட்டோம். ஆனால் எங்களுக்கு எதிராக போட்டியிட்ட தி.மு.க. கூட்டணியை சேர்ந்தவர்கள் இரண்டு வருடமாக ஒன்றாக இணைந்து செயல்பட்டார்கள்.

நாங்களே எங்களுக்கு எதிராகவும் பா.ஜ.க.விற்கு எதிராகவும் வருட கணக்கில் போராட்டம் நடத்தி வந்தோம். அவர்களது கருத்திற்கு ஒத்திசைவாக போராடிய கருத்துகளை முன்வைத்த கட்சிகளை கூட எங்கள் கூட்டணியில் கடைசி நேரத்தில் இணைத்துக் கொண்டோம். முதல்நாள் எதிர்ப்பு மறுநாள் கூட்டணி என அமைக்கப்பட்ட எங்களது மெகா கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை. இப்பொழுது கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்பதெல்லாம் சரியான விஷயமில்லை.

அ.தி.மு.க.வில் ஒரு பெரும் கலகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தத்தான் யாரும் பேசக்கூடாது என வாய்ப்பூட்டு உத்தரவு போடப் பட்டிருக்கிறதா?

வைகைச்செல்வன்: கருத்து சுதந்திரம் இருக்கிற அளவுக்கு கட்டுப்பாடும் அவசியம். கட்சி நிர்வாகிகள் கட்சியின் நிலை பற்றியும் அரசியல் சூழ்நிலைகளில் கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கட்சியின் அரங்க கூட்டங்களில் கட்சிக்குள்ளேதான் பேச வேண்டும். டி.வி. மைக்குகள் முன்பு பேசும்போது கட்சியின் உள் விவகாரங்களை பேசக்கூடாது. அதற்காகத்தான் கட்சி தலைமை இந்த உத்தரவை போட்டிருக்கிறது. கட்சியின் கொள்கை அதன் திசைவழியை சொல்வதற்கு, விவாதிப்பதற்கு, முடிவெடுப்பதற்கு பொதுக்குழு, செயற்குழு ஆலோசனைக் கூட்டங்கள் இருக்கின்றன.

தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி தலைமைக் கழகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மோதல் வெடிக்கும் என்கிறார்களே?

வைகைச்செல்வன்: அ.தி.மு.க. என்பது கட்டுக்கோப்பான இயக்கம். இதில் கோஷ்டிகளும் இல்லை. மோதல்களும் இல்லை. இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். என்கிற இரட்டை தலைமையின் கீழ் நடைபெறும் சாதாரண ஆலோசனைக் கூட்டம்தான் கூட்டப் பட்டிருக்கிறது. அதில் தேர்தல் தோல்வி பற்றி பேசப்படும் அவ்வளவுதான்.

-தாமோதரன் பிரகாஷ்

படம் : ஸ்டாலின்