நாடு முழுவதும் பாராளுமன்றத் தோ?தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், கட்சி பிளவுபட்ட நாளிலிருந்தே ஓ.பி.எஸ். தன்னுடைய ஆளுமையை நிரூபிக்கத் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறார். ஆனால் எடப்பாடியிடம் அது பலிக்கவில்லை. எனவேதான் தன்னுடைய பலத்தை நிரூபிக்க கடந்த வருடம் ஏப்.24ல் திருச்சியில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்திக்காட்டினார்.
கட்சி, கொடி, சின்னம் என ஒட்டுமொத்த அ.தி.மு.க.வே இன்று எடப்பாடி பழனிச்சாமியின் கைகளுக்குச் சென்ற நிலையில், தனிக்கட்சி வைத்திருக்கும் டி.டி.வி. தினகரனையும், சின்னம்மாவின் துணையோடு தன்னுடன் சேர்த்துக்கொண்டு, பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து மோடியின் ஆசியோடு இரட்டை இலையை மீட்டுவிடலாம் என கணக்குப் போட்டார் ஓ.பி.எஸ். கள நிலவரம் தெரியாமல் தன்னை நம்பியிருக்கும் வைத்திலிங்கம் உள்ளிட்ட நபர்களை முழுமையாக ஏமாற்றிவருகிறார்.
பா.ஜ.க.விற்கு பெரிய அளவில் தமிழகத்தில் பலம் இல்லாததால், வேறு வழியின்றி சிறிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அ.தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட ஓ.பி. எஸ்.ஸை கூட்டணியில் இணைக்கும் பட்சத்தில் அவர்கள் தாமரைச் சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என கட்டளை போட்டுள்ளது.
இந்த விசயம் ஓ.பி.எஸ். அணியின் இரண்டாம்கட்டத் தலைவர்களையே வருத்தத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும், ‘தனது அரசியல் வாழ்க்கையில் ஓ.பி.எஸ். எடுத்த முடிவுகள் அத்தனையுமே தவறானது’ என, தனக்கு நெருக்கமான சிலரிடம் ரொம்பவே புலம்பி வருகிறாராம் ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான அந்த சீனியர் பத்திரிகையாளர்.
கடந்த 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஓ.பி.எஸ்., அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும், அவரின் சொத்து மதிப்பு 374 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் ஓ.பி.எஸ்., அவரது மகன் ரவீந்திரநாத், குடும்பத்தினர் மீது வழக்கு ஒன்று பதிவானது. எனினும், கடந்த 2012ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப் பட்டார்.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யும்விதமாக சமீபத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலரின் வழக்கு களையும் தாமாக முன்வந்து மறுவிசா ரணைக்கு எடுத்துவரும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓ.பி.எஸ். விடுதலை செய்யப்பட்ட அந்த சொத்துக் குவிப்பு வழக்கையும் மீண்டும் விசாரித்து வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த மறுஆய்வு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகியது ஓ.பி.எஸ் தரப்பு. ஆனால், அதை விசாரித்த உச்ச நீதிமன்றமோ, சென்னை உயர் நீதிமன்ற விசாரணையானது சட்டத்திற்கு உட்பட்டே நடப்பதாகவும், அதில் தலையிட விருப்ப மில்லை’ எனவும் கூறி கடந்தவாரம் தள்ளுபடி செய்தது. இதனால், படு அப்செட்டில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ்.
இதற்கிடையில் ஓ.பி.எஸ்.ஸுக்கு தென் மாவட்டங்களில் பலம் இருக்கிறது என்ற மாயையை உடைத்துக்காட்டுவதற்காக அந்த அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை, ஒவ்வொருவராக எடப்பாடி பழனிச்சாமி குழு தன் பக்கம் ஈர்த்து வருகிறது. அதில் ஓ.பி.எஸ்.ஸின் படைத்தளபதிகளில் ஒருவரும் கருப்புசாமி பாண்டியனின் மகனும், நெல்லை மாவட்டச் செயலாளருமான கே.வி.கே.சங்கரை இ.பி.எஸ். குழு இழுத்துக்கொண்டது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ். அணியின் முக்கியப் புள்ளிகள் சிலருக்கு தூண்டில் போட்டிருப்பதாகவும், பாராளு மன்றத் தேர்தலுக்கு முன் எந்நேரமும் அவர்கள் அணி மாறுவதற்கான வாய்ப்பு உள்ள தாகவும் கூறப்படும் நிலையில், தற்போது அவருக்கு மற்றொரு பிரச்சனை தலைக்கு மேல் கத்தியாக வந்துள்ளது.
ஓ.பி.எஸ். நிதியமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்த காலகட்டத்தில் தேனி மலைக்கிராமங்களில் அளவுக்கு அதிகமான சொத்துக்கள் இவருடைய பினாமி பெயரில் வாங்கிப் போடப்பட்டுள்ளது. 3 கிலோமீட்டரில் நீச்சல் குளத்துடன் கூடிய ஒரு பெரிய பங்களா, மேற்குத் தொடர்ச்சி மலையில் நிறைய இடங்கள் இவருடைய பினாமி பெயரில் பதிவாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் திட்டப்படி அ.தி.மு.க.வின் அதிகாரம் மொத்தத் தையும் சசிகலாவிடம் வழங்கி, அதற்கு பிரதியுப காரமாக 2026 தேர்தலை பா.ஜ.க. தலைமையில் சந்திக்கத் தயாராகிவருகிறது. பா.ஜ.க.வின் வியூகப்படி அனைத்தும் சரியாக நடந்தால், "இன்று ஓ.பி.எஸ். இருக்கும் நிலை நாளை இ.பி.எஸ்.ஸுக்கும் வரலாம்' என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.