விஷால் நடித்த "துப்பறிவாளன் 2' படத்தை இயக்கிவந்த மிஷ்கின், பாதி படப்பிடிப்பிலேயே விஷாலுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகப் படத்திலிருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து, ஏற்கனவே, தான் இயக்கி வெற்றிபெற்ற "பிசாசு' படத்தின் இரண்டாம் பாகத்தை ஆண்ட்ரியாவை வைத்து உருவாக்கி வருகிறார் மிஷ்கின். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து அடுத்ததாக ஒரு படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

vijaysethupathi

"பிசாசு-2' பட ஷூட்டிங்கின்போது, மிஷ்கின் சொன்ன ஒரு கதை பிடித்துப்போகவே, உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம் விஜய்சேதுபதி. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மிஷ்கின், விஜய்சேதுபதி, ஏ.ஆர்.ரஹ்மான் என மூவரும் முதன்முறையாகக் கூட்டணி அமைக்கவுள்ள செய்தி கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில்... இப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டின் பிற்பாதியில் தொடங்கும் என்று தெரிகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.

Advertisment

சமந்தாவுடன் கார்த்தி முதன்முறையாக...

cinema

ணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் "பொன்னியின் செல்வன்' மற்றும் முத்தையா இயக்கத் தில் உருவாகி வரும் "விருமன்' படங்களில் நடித்து முடித்துள்ள கார்த்தி தற்போது இயக்குநர் மித்ரன் இயக்கும் "சர்தார்' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக, "பேச்சிலர்' படத்தை இயக்கிய சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதியாக நடிகை சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ள சமந்தா இதுவரை கார்த்தியுடன் நடித்ததில்லை. இந்நிலையில், இப்படம் மூலம் தற்போது இவர்கள் இருவரும் முதல் முறையாக ஜோடி போட உள்ளனர்.

மீண்டும் சிம்பு-சூர்யா கூட்டணி!

யக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருந்த "மாநாடு' படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஒன்றாகத் தோன்றிய காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், நடிகர்கள் சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த "டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் இவர்கள் இருவரும் இணையவுள்ளனராம். இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர் ஒருவர், "மாநாடு' படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா கூட்டணிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து இம்முடிவை எடுத்துள்ளாராம். நடிகர்கள் இருவருடனும் தயாரிப்பாளர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில்... விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"ஆர்.ஆர்.ஆர்.'-க்கு போட்டியாக டான்!

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள "ஆர்.ஆர்.ஆர்.' படத்துடன் மோதவுள்ளது சிவகார்த்திகேயனின் "டான்' படம். "பாகுபலி' புகழ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ள "ஆர்.ஆர்.ஆர்.' படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி 7 அன்று வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக திரையரங்கு களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் மெல்ல விலக்கப்பட்டு வருவதால், மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

அதன்படி, மார்ச் 25 அன்று இப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந் நிலையில், இப்படம் ரிலீசாகும் அதே தேதியில், தன்னுடைய "டான்' படத்தையும் ரிலீஸ் செய்யவுள்ளார் சிவகார்த்தி கேயன். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சூரி உள்ளிட்டோர் நடிக்க, கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது "டான்'. இப்படமும் மார்ச் 25 அன்று வெளியாகவுள்ளதாக அண்மையில் அதிகாரபூர்வ மாக அறிவிக்கப்பட் டுள்ளது. "ஆர்.ஆர்.ஆர்.' படம் ஜனவரி மாதம் ரிலீசாகவிருந்தபோது, இந்தியா முழுவதும் பல முன்னணி நடி கர்களின் படங்கள் ரிலீஸிலிருந்து பின் வாங்கிய நிலையில், தற்போது இப்படத் துக்குப் போட்டியாகத் தனது படத்தைக் களமிறக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.

-எம்.கே.