கவர்ச்சிக்கு நோ!
கவர்ச்சியான நடிப்பின் மூலம் கவனம் பெற்ற யாஷிகா ஆனந்த், பெரிய விபத்திலிருந்து மீண்டு வந்து தொடர்ந்து பல படங்களில் நடித்துவருகிறார். அவை அனைத்தும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. தற்போது ஒரு படத்தில் மருத்துவராக நடித்து வருகிறார். இதில் வழக்கமான கவர்ச்சி இருக்காது என்றும், தன் மீதான இமேஜை இந்தப்படம் மாற்றும் எனவும் கூறும் அவர், மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகவுள்ளதால் நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் என நம்புகிறார். இந்தப் படத்தை ‘"கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்கிய முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா தயாரித்து இயக்குகிறார். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மீண்டும் ஜோடி!
ஜெய் -வாணிபோஜன் இருவரும் "ட்ரிபிள்ஸ்'’ வெப் தொடரில் நடித்திருந்தனர். அதில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன் றாக ஒர்க்-அவுட் ஆகியிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்து வரு கின்றனர். இந்தமுறை ஒரு படத்துக்காக இணைந்துள்ளனர். இந்தப் படமும் அந்த வெப் தொடரைப் போல காதல் கலந்த காமெடி ஜானரில் உருவாகிறது. இந்தப் படத்தில் ஜெய், வாணி போஜனை தவிர்த்து மற்றுமொரு ஜோடியாக சாந்தனு -வரலட்சுமியும் இணைந்து நடிக்கின்றனர். "தீராத விளையாட்டுப் பிள்ளை', "நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் திரு, இந்த படத்தை இயக்கிவரு கிறார். எந்தவிதமான விளம்பரங்களும் இல்லாமல் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்து முடிந்துவிட்டது. மீதமுள்ள படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவுபெற வுள்ளது. படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிடும் ப்ளானில் படக்குழு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் மவுனம்!
"லப்பர் பந்து' மூலம் பலரது கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, அடுத்ததாக டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். யாரை வைத்து அவர் இயக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தி யில் இருந்து வருகிறது. இதற்காக பல வளர்ந்து வரும் நடிகர்களை யும், சில முன்னணி நடிகர்களையும் சந்தித்து கதை கூறி வரு கிறார் தமிழரசன் பச்சமுத்து. அந்த வகையில் தனுஷை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமைய, அவரிடம் கதை சொல்லியுள்ளார். தனுஷ் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இருப்பினும் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தனுஷ் இயக்கி நடித்துவரும் "இட்லி கடை' படத்தை தனுஷுடன் இணைந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஏற்கனவே ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளதால், இன்னும் சில வருடங்களுக்கு அவர் எந்த புதிய படத்தையும் எழுத்துப் பூர்வமாக கமிட் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக் கிறார். அதோடு தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சினை வந்த தால் ஒவ்வொரு முடிவையும் சற்று யோசித்தே எடுக்கிறாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt_79.jpg)
செஸ் பயோபிக்!
செஸ் போட்டிகளில் உலகளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் செஸ் சாம்பியன் விஸ்வ நாதன் ஆனந்த். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க பல காலமாக பல்வேறு இயக்குநர்கள் முயற்சித்துவந் தார்கள். எதுவும் கை கூடவில்லை. தற்போதைய முயற்சி ஒன்று கைகூடி யுள்ளது. "மதராசபட்டினம்', "தலைவி' போன்ற பீரியட்ஸ் படங்களை எடுத்து வெற்றிபெற்ற இயக்குநர் ஏ.எல். விஜய், விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கை இயக்குகிறார். திரைக்கதையை பாலிவுட் இயக்குநர் மற்றும் எழுத்தாளர் சஞ்சய் திரிபாதி எழுதுகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பகட் டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஸ்வநாதன் ஆனந்த் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் படப்பிடிப்பு தொடங்கவும் 2026ஆம் ஆண்டு படத்தை வெளியிடும் திட்டத்திலும் இருக்கிறதாம் படக்குழு.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-11/tt-t_0.jpg)