ஹிட் நம்பிக்கை!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema_307.jpg)
தமிழில் "முகமூடி' மூலம் தனது கேரியரை ஆரம்பித்த பூஜா ஹெக்டே இங்கு பெரிதாக ஜொலிக்கவில்லை . இருந்தா லும் தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். இந்தி யிலும் மார்க்கெட்டை உயர்த்தி வருகிறார். இதனிடையே தமிழில் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என தீவிர முனைப்பில் இருக்கிறார். அதற்காக கதை கேட்கும் பணிகளில் தீவிரமாக இருந்த அவருக்கு சூர்யா பட வாய்ப்பு வந்துள்ளது. டாப் ஹீரோ என்பதால் உடனே ஓ.கே. சொல்லியுள்ளார் பூஜா ஹெக்டே. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இசை சந்தோஷ் நாராயணன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்யின் "பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செகண்ட் சான்ஸ்!
சிவகார்த்திகேயனை வைத்து "டான்' படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி, அடுத்த படம் எடுக்க சிரமப்பட்டு வருகிறார். ரஜினியிடம் கதை சொல்லி, அது கைகூடாமல் போனது. பின்பு தனது சொந்த தயாரிப்பில் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க முயற்சித்தார். அதுவும் சரியாக அமைய வில்லை. அடுத்து தெலுங்கு நடிகர் நானியுடன் கதை சொல்லி ஓ.கே வாங்கினார். படப்பிடிப்பு தொடங்கப்பட வில்லை. இதனால் மீண்டும் சிவகார்த்திகேயனை அணுகிய சிபி சக்ரவர்த்தி, அவரை வைத்து இரண்டாவது முறையாக படமெடுக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அது சுமூகமாக முடிய, தற்போது அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார். படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ராஷ்மிகா கைவசம், தனுஷின் குபேரா, அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, சல்மான்கானின் சிக்கந்தர் உள்ளிட்ட படங்கள் உள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cinema1_236.jpg)
எஸ்.ஜே.சூர்யா என்ட்ரி!
சிறிய பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட விடுதலை, பெரிய நடிகர்கள் உள்ளே வர, பெரிய படமாக மாறியது. அதோடு இரண்டு பாகங்களாக படத்தை வெளியிடத் திட்டமிட்டு, முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் இறுதியில் வைத்த இரண்டாம் பாகக் காட்சிகள் படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது வெற்றிமாறன் பல விஷயங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது எஸ்.ஜே.சூர்யாவை படத்தின் உள்ளே கொண்டுவந்துள்ளார். முக்கியமான ரோலில் அவர் நடிக்கிறார். படப்பிடிப்பு தென்காசியில் மும்முரமாக நடந்து வருகிறது. அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைகிறது. ஏற்கனவே பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் இரண்டாம் பாகத்தில் வருகின்றனர்.
அபர்ணா சீசன்!
வெங்கட் பிரபு இயக்கி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'’படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு வினோத் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். அரசியல் கதை களத்தைக் கொண்டு இப்படம் உருவாகிறது. இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தற்போது அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக இல்லை, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். "சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருது வென்ற அபர்ணா பாலமுரளி, தற்போது தனுஷின் 50-வது படமான "ராயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷாருக்கான் செலக்ஷன்!
தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், "ஜவான்' படம் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் படத்திற்கு இசையமைத்தார். இதன் மூலம் அங்கு பலரது கவனத்தை ஈர்த்த அவர், தற்போது மீண்டும் ஷாருக்கான் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஷாருக்கான் அடுத்து சுஜாய் கோஷ் இயக்கத்தில் கிங் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள் ளார். இப்படத்தை ஷாருக்கானே தயாரிக்க, படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் தொடங்குகிறது. இந்த படத்திற்கு அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஷாருக்கான் தானாம். ஜவான் படத்தில் அவரது இசையும், அதோடு அவருடன் பணியாற்றிய அனுபவமும் ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.
-கவிதாசன் ஜெ.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-05/cinema-t_5.jpg)