மிருணாள் மகிழ்ச்சி!

cinema

"சீதா ராமம்' படத்தின் மூல மாக பிரபலமான மிருணாள் தாக்கூர், தொடர்ந்து பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்கள் அனைத்தும் மினிமம் கேரண்டி யாகவே இருந்து வருகிறது. அதற்காகவே தயாரிப்பாளர் கள் அவரை அணுகி வரு கின்றனர். தொடர்ந்து பட வாய்ப்புகள் வரிசை கட்டி வருவதால், ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார் மிருணாள் தாக்கூர். காரணம், பாலிவுட்டில் இப்போதைக்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் "கல்கி 2898 ஏடி' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே என முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கும் அவரது 48வது படத்திலும் கதா நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இப் படத்தை கமல் தயாரிக்க தேசிங் பெரியசாமி இயக்க வுள்ளார்.

Advertisment

தள்ளிப்போகும் ஷூட்டிங்!

செல்வராகவன் தான் இயக்கிய படங்களின் இரண் டாம் பாகம் எடுக்க முனைப்பு காட்டி வருகிறார். "ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தை தனுஷை வைத்து எடுக்க முயற்சித்தார். அது கைகூட வில்லை. இப்போது "7ஜி ரெயின்போ காலனி 2' படத்தை எடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து "புதுப்பேட்டை பார்ட் 2'வை இயக்க தயாராகி வருகிறார். ஏப்ரலில் ப்ரீ-புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கவுள்ள அவர், செப்டம்பரிலிருந்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார். ஆனால் தனுஷிடம் இன்னும் கால்ஷீட் வாங்கவில்லையாம். புதுப்பேட்டை முதல் பாகத்தை லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரித்த நிலையில், இரண்டாம் பாகத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளார்.

Advertisment

டபுள் ஹீரோ!

தனது படங்களில் இரண்டு ஹீரோயின்கள் என பயணித்து வந்த அசோக்செல்வன் தற்போது இரண்டு ஹீரோக்கள் என ட்ராவல்பண்ணத் தொடங்கியிருக்கிறார். அப்படி சரத்குமாருடன் அவர் நடித்த "போர் தொழில்', சாந்தனுவுடன் "ப்ளூ ஸ்டார்', இரண் டும் நல்ல ஹிட்டடித்தது. இதனால் தற்போது டபுள் ஹீரோ சப்ஜெக் டில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இன் னொரு டபுள் ஹீரோ சப்ஜெக்டில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் அசோக்செல்வனுடன் இணைந்து வசந்த்ரவி நடிக்கிறார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை "கண்ட நாள் முதல்', "கண்ணாமூச்சி ஏனடா' உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்குகிறார். "பெண் ஒன்று கண்டேன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

த்ரில்லர் ஃப்ரீடம்!

"அயோத்தி' பட வெற்றியைத் தொடர்ந்து "உடன்பிறப்பே' இயக்குநர் சரவணகுமார் இயக்கும் "நந்தன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை. செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் "கருடன்' படத்தில் முதன்மை கதாபாத்தி ரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சத்யசிவா இயக்கத்தில் த்ரில்லர் டிராமா ஜானரில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தை "கழுகு' படம் மூலம் கவனம் ஈர்த்த சத்யசிவா இயக்க, 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படம் உருவாகிறது. பாண்டியன் பரசுராம் தயாரிக்கும் இப்படத்தில் "ஜெய்பீம்' மூலம் கவனம் பெற்ற லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். ஃப்ரீடம் (எழ்ங்ங்க்ர்ம்) என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், டேக் லைனாக ஆகஸ்ட் 14 என படக்குழு வைத்துள்ளனர்.

Advertisment

இளைய மகளுக்கும் கால்ஷீட்!

ff

ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான "லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த ரஜினி, தற்போது சௌந்தர்யா இயக்கத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கம் பக்கம் திரும்பியிருக்கும் சௌந்தர்யா, ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். கலைப் புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனது போர்ஷ னுக்கான கால்ஷீட்டையும் ஒதுக்கியுள்ளார் ரஜினி. இசையமைப்பாளராக ஜீ.வி பிரகாஷிடம் பேச்சு வார்த்தை நடந்துவருகிறதாம்.

-கவிதாசன் ஜெ.