ப்ளான் சேஞ்ச்!

அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்ர வர்த்தி, சிவகார்த்திகேயன் நடித்த "டான்' படம் மூலம் இயக் குநராக அறிமுகமானார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி வசூல் செய்தது. இதனால் ரஜினியை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பும் கிடைத்தது.

அந்த சந்திப்பில் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துப்போக திரைக்கதை எழுதி முழு ஸ்க்ரிப்டை ரெடி பண்ணச் சொன்னார் ரஜினி. திரைக்கதை எழுதும் பணியை கவனித்துக்கொண்டே, நடிகர் -நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளும் விறுவிறுவென தொடங்கியது. அரவிந்த்சாமி, கல்யாணி பிரியதர்ஷன், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பதாக இருந்தது. ஆனால் முழுக்கதை யைக் கேட்ட ரஜினி, திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி ரிஜெக்ட் செய்துவிட்டார். இதனால் ரஜினி பட வாய்ப்பை தவறவிட்ட சிபி சக்ரவர்த்தி, அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை கூறியுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிந்தது. விரைவில் இருவரும் இணைய வுள்ளார்கள். ஆனால் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரிய சாமி படம், ஏ.ஆர். முருகதாஸ் படம் என படு பிசியாக இருப்பதால், அவர் ஃப்ரீ ஆவதற்குள் சிறிய பட்ஜெட்டில் புது முகங்களை வைத்து ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் சிபி சக்ரவர்த்தி. மேலும் அவரே தயாரிக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

சிம்பு ஸ்பெஷல் க்ளாஸ்!

Advertisment

cc

"பத்து தல' படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கு தயாராகிவருகிறார் சிம்பு. இப்படத்தை கமல் தயாரிக்க "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல் வெளியானது. இத்தகவலை படக்குழு மறுத்தநிலையில்... தற்போது வேறொரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எந்த நடிகை என்று விசாரித்தால், கீர்த்தி சுரேஷ் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர். அண்மையில் தேசிங் பெரியசாமி, கீர்த்தி சுரேஷிடம் கதை கூறியுள்ளார். கதையைக் கேட்ட கீர்த்தி, அவருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். படப்பிடிப்பு ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்கள். வரலாற்றுப் பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த மாஸ் படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்திற்காக தற்போது வெளிநாட்டில் சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார் சிம்பு.

த்ரிஷா பிஸி!

Advertisment

trisha

முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டே முதன்மை கதாபாத்திரத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் த்ரிஷா. அந்தவகையில் விஜய்க்கு ஜோடியாக "லியோ' படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் அருண் வசீகரன் இயக்கும் "தி ரோட்' படத்தில் லீட் ரோலில் நடித்துள் ளார். 2000ஆம் ஆண்டு மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிவரும் நிலையில்... விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் த்ரிஷா. இப்படத்தை ‘"தூங்கா நகரம்'’, "சிகரம் தொடு' உள்ளிட்ட படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்திற்கு "கொலை வழக்கு' என தலைப்பு வைத்துள் ளார்களாம். மூன்று மொழிகளில் வெளியிடத் திட்ட மிட்டுள்ளதால் முக்கிய கதாபாத்திரங்களில் அந்தந்த மொழிகளில் இருந்தும் நடிகர்களை நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

-கவிதாசன் ஜெ.