இன்கிரிமெண்ட்!
"விக்ரம்' படத்தின் வெற்றி யைத் தொடர்ந்து கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் "இந்தியன் 2'’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறை வடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கொரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறு வனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டிருந்த "இந்தியன் 2'’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamal_134.jpg)
இந்நிலையில் கமல்ஹாசன் "இந்தியன் 2' படத்தில் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளா ராம். முதலில் கமல்ஹாசனுக்கு இப்படத்தில் நடிக்க 35 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் வெளியான "விக்ரம்' படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் தன் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி யுள்ளாராம். இந்தநிலையில் ரசிகர்கள் மத்தி யில் கமலுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதை உணர்ந்த தயாரிப்பாளரும் கமல் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்துள்ளாராம். விக்ரம் படம் ஓடியதற்கே சம்பளத்தை இரண்டு மடங்காக்கிய கமல், "இந்தியன் 2' படமும் வெற்றிபெற்றால் அடுத்து எத்தனை மடங்கு உயர்த்துவாரோ என்று கோலிவுட் வட்டா ரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறதாம்.
பவர்புல் வில்லன்!
வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குநராக அறிமுக மாகவுள்ள படம் "என்.சி 22'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகிவரும் இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாகவும் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடித்துவருகின்றனர். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் ஹீரோவுக்கு சவால் விடும் அளவிற்கு வில்லன் கதாபாத்திரம். அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற பவர்ஃபுல் வில்லனை தேடி வந்த படக்குழு பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இறுதியில் தனி ஒருவன் படத்தின் மூலம் டாப் 5 வில்லன் லிஸ்டில் இணைந்த அரவிந்த் சாமியை புக் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் ராக்ஷ்மிகா!
ரசிகர்கள் மத்தியில் ஸ்மைலி குயின் என அறியப்படும் ராஷ்மிகா மந்தனா, தென்னிந்திய மொழிகளைத் தாண்டி இந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய்யுடன் "வாரிசு' படத்தில் நடித்து வரும் அவர், அடுத்தாக அல்லு அர் ஜுனுடன் புஷ்பா 2 படத்தில் நடிக்கவுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rashmika_6.jpg)
இதனிடையே ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளாராம். தமிழில் கார்த்தியின் "சுல்தான்' படம் மூலம் என்ட்ரி கொடுத்த ராஷ்மிகா, தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்கவுள்ளாராம். "ஜப்பான்' எனப் பெயரிட்டு உள்ள விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள அந்தப் படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரம் என்பதால் ராஷ்மிகா மந்தனா, இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஷ்மிகா மந்தனா தமிழில் "வாரிசு' படத்தையும், இந்த படத்தையும் தான் பெரிதும் நம்பியிருக்கிறாராம்.
மல்லுவுட்டில் ஜோதிகா!
90-களின் பிற்பகுதியில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்த ஜோதிகா, ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். திருமணத் திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகியிருந்த ஜோதிகா, கடந்த சில ஆண்டு களாகக் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்வுசெய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகா தேர்ந்தெடுத்த நடித்த 'பொன்மகள் வந்தாள்', "ராட்சஷி', போன்ற படங்கள் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
இதையடுத்து ஜோதிகா தற்போது மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி அடுத்ததாக "தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜோ பேபி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். அதில் மம்மூட்டிக்கு ஜோடி யாக ஜோதிகா நடிக்கிறா ராம். குடும்ப பின்னணியில் இந்தப் படம் உருவாக வுள்ளதாக கூறப்படுகிறது.
- கவிதாசன் ஜெ
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-10/kamal-t.jpg)