(குறிப்பு: "சோலி' என்பதை "வேலை' என்கிற அர்த்தத்தில் புரிந்து கொள்ளவும்.)
கடந்த வாரத்திலிருந்தே நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் சங்கதிதான் ஹாட் டாபிக். நயன் தன் காதலனைப் பிரிவதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
நயன்தாராவின் காதலராக ஆவதற்குமுன் ஒரு பார்ட்டி மூடில், தனக்கு நெருக்கமாக இருந்த சினிமா நண்பர் ஒருவரிடம் நயன் பற்றி தாறுமாறாக விக்னேஷ் பேசியதாகவும், அந்தப் பேச்சு அப்போது ஆடியோ பதிவு செய்யப்பட்டதாகவும்... அந்த ஆடியோ இப்போது நயனுக்கு அனுப்பப்பட்டதாகவும் பரபரப்புச் சேதி ஒன்று சுழன்றடித்தது. இத னால் சிவன் மீது நயன் சீற்றமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இதற்கேற்றாற்போல... சிவன் தயாரிப்பில் நயன் நடித்து வந்த "நெற்றிக்கண்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என பேச்சு எழுந்தது.
கூடவே... சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ்சிவன் இயக்குவ தாக இருந்த படம், சிவன் கொடுத்த பட்ஜெட் பெரிதாக இருந்ததால் நிறுத்தப்பட்டதாகவும் ஒரு சேதி ஊடாடியது.
இதெல்லாம் போதாது என்று... புத்தாண்டு கொண்டாட்டத்தை நயன் தனியே கொண்டாடும் புகைப்படங்களும் வெளியானது.
போதாக்குறைக்கு 1980-களின் மனைவிமார்கள் குடித்துவிட்டு வரும் கணவன்மார்களை சாந்தப்படுத்துவது போன்ற கருத்தில் சிவாஜி-கே.ஆர்.விஜயா சம்பந்தப்பட்ட சினிமாப் பட கிளிப்பிங்ஸ் வீடியோவையும், 2020-ல் குடித்து விட்டு வரும் கணவன்மார்களை, மனைவிமார்கள் அடித்து உதைக்கிறார்கள் என்ற தொனியில் வடிவேலு- கோவை சரளா சம்பந்தப்பட்ட கிளிப்பிங்ஸையும் இணைத்து வெளியிட்டி ருந்தார் சிவன்.
"புத்தாண்டு அதுவுமா ரெண்டுபேருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருப்பதை சிம்பாலிக்காக இந்த கிளிப்பிங்ஸ் மூலம் சொல்லிருக்காரு சிவன். இதுதான் டைரக்டர் "டச்' என்றும்... சொல்லப்பட்டது.
இப்பத்தான் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமெரிக்கா சென்றுவந்தது இந்த ஜோடி. அதிலும் போன வருஷம் விக்கி மீதான தன் காதலை வெளிப்படுத்த 'ய' எழுத்து வைரத்தோடு அணிந்த நயன், இப்போது அமெரிக்கா போயிருந்தபோது... அங்கே பிரபலமான "மிஸ் விக்கீஸ்' என்கிற உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டைப் பார்த்து குதூகலமாக சிப்ஸ் சாப்பிட்டாரே... அதுக்குள்ள யாரோட கண்ணுபட்டுச்சோ?'
இப்படி... அடுத்தடுத்த கட்டத்திற்கு நயன்-சிவன் பிக்-அப் வதந்தியை டெவலப் செய்து கொண்டிருந்தனர்.
சில தினங்களுக்கு முன் ஒரு டி.வி. விருது நிகழ்ச்சிக்கு தனி யாகத்தான் வந்தார் நயன். அவ ரிடம் காதல் பற்றி கேட்டபோது... "காதல் தான் தன்னை உற்சாகமாக வைத்திருப்பதாக தெரிவித்தார் நயன். ஆனாலும் சிவனோடு நயன் வராததால்... "இருவரும் பிரிந்து விட்டனர்' என அடித்துப் பேச ஆரம்பித்துவிட்டனர்.
நயனும்-சிவனும் காதல் வழிய நெருங்கியிருக்கும் புகைப் படங்களை சிவன் வெளியிடும் போதெல்லாம்... "ஜோடிப் பொருத்தம் செம', "பொறாமையா இருக்கு' "சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க' என ஃபாலோ யர்ஸ் பரவசமாக கமெண்ட் அடிப்பார்கள். நியூ இயர் கொண் டாட்டத்தில் நயன் மட்டும் இருக்கிற தனிப்படம் போட்ட தால், சிவனும் தனது கணக்கில் "தண்ணிப் படம்' போட்டதால்... "காதல் உடைஞ்சது' என்கிற பேச்சு எழுந்ததை உணர்ந்து கொண்ட சிவன்... "அதுக்குன்னு எந்த நேரமும் சேர்ந்து இருக்கிற மாதிரியே போட்டா புடிச்சு போட முடியுமா? ஊர் வாய்லருந்து தப்பிக்கணும்னா இதே சோலியா இருக்கணும் போலயே...' என தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு... மீண்டும் அதே சோலியைப் பார்த்திருக்கார்.
ஆமாம்... நயனுடன் நெருக்க மாக போட்டோ பிடித்துப் போட்டு... லவ்வு லைவ்ல இருப்ப தைக் காட்டியிருக்கார் சிவன்.
சிவ சிவா... இந்த ஊர் வாய்க்கு எவ்வளவு "நயன்'ந்து போக வேண்டியிருக்கு?
-ஆர்.டி.எ(க்)ஸ்